search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Light Bulb"

    • சுதந்திர தினத்தை முன்னிட்டு தேவகோட்டை தியாகிகள் பூங்கா மற்றும் நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பஸ் நிலையம் அருகே, நகராட்சி அலுவலகம் எதிரே 1936-ம் ஆண்டு அப்போதைய மாநில கவர்னரால் பூங்கா திறக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் மாதத்தில் நீதிமன்றம் முன்பாக ஆகஸ்ட் புரட்சி நடைபெற்றது. அப்போது ஆங்கிலேயர்கள் 75 பேரை சுட்டுக் கொன்றனர். மேலும் 112 நபர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் 1947-ம் ஆண்டு பூங்காவில் தியாகிகள் நினைவு சின்னம் அமைக்கப்பட்டது.

    ஜாலியன் வாலாபாக் அடுத்து சுதந்திர போராட்டத்திற்காக அதிக நபர்கள் உயிர் நீத்த இடம் தேவகோட்டை தியாகிகள் பூங்கா என்பது குறிப்பிடத்தக்கது. தேவகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசு குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது தியாகிகள் பூங்கா, நகராட்சி அலுவலகம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் நகர் போலீஸ் நிலையமும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.
    • வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி -கொள்ளிடம்‌ ஆறுகளுக்கு இடையே அமைதியான சூழலில் அமைந்துள்ளது பூண்டி புதுமை மாதா பேராலயம்.

    பூலோகம் போற்றும் பூண்டி மாதா என்று பக்தர்களால் போற்றி புகழப்படும் இப்பேராலயத்தில் மாதாவின் பிறப்பு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பெருவிழா தொடக்கத்தை ஒட்டி ஆலயம் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பேராலய முன்புறத்தில் இருந்து பக்தர்கள் பிடித்து சென்றனர்.

    பூண்டி அன்னையின் சொரூபம் வைக்கப்பட்ட சிறிய தேரை பக்தர்கள் சுமந்து சென்றனர்.

    திருக்கொடி பவனியை பேராலய அதிபர் சாம்சன் புனிதம் செய்து தொடங்கி வைத்தார்.

    பூண்டி அன்னையின் புகழ் பாடும் பாடல்களை பாடியவண்ணம், மரியே வாழ்க என்ற‌ வாழ்த்து முழக்கங்களுடன் கொடி ஊர்வலம் கொடி மரத்தை அடைந்தது.

    அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் புனிதம் செய்து ஏற்றி வைத்தார்.

    கொடியேற்றியபோது அதிர்வேட்டுகள் முழங்கின.

    பக்தர்கள் மரியே வாழ்க என்று வாழ்த்து ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

    தொடர்ந்து பேராலயத்தின் எதிரில் உள்ள அரங்கில் சிறப்பு திருப்பலி மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற பொருளில் கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது.

    பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், மறைவட்ட முதன்மைகுரு இன்னசென்ட், உதவி பங்கு தந்தையர் அன்புராஜ், தாமஸ், ஆன்மீக தந்தையர் அருளானந்தம், ஜோசப் மற்றும் பல்வேறு அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.

    விழா நாட்களில் தினமும் மாலை கொடி ஊர்வலம், சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது.

    மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் செப்டம்பர் 8ம் தேதி மாலை சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும், வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் அன்னையின் சொரூபம் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெறும்.

    தேர் பவனியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றிய பூண்டி அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவர். 9ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற தலைப்பில் திருவிழா திருப்பலியை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவதுடன் பெருவிழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியானமைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    ×