search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ligue 1"

    • முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது
    • 2-வது பாதி ஆட்டத்தில் நைஸ் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது

    பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து தொடர் லீக்-1. இதில் முன்னணி அணியாக பிஎஸ்ஜி திகழ்ந்து வருகிறது. இந்த அணியில் இருந்து மெஸ்சி, நெய்மர் ஆகியோர் வெளியேறிவிட்டனர். நட்சத்திர வீரர் எம்பாப்வே அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

    இந்திய நேரப்படி இன்று காலை பிஎஸ்ஜி அணி நைஸ் அணியை எதிர்கொண்டது. இதில் எம்பாப்பே இரண்டு கோல்கள் அடித்த போதிலும், 2-3 என நைஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

    ஆட்டம் தொடங்கிய 21-வது நிமிடத்தில் நைஸ் அணியின் டெரெம் மொஃப்பி கோல் அடித்தார். இதற்கு எம்பாப்வே 29-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் 1-1 சமனில் இருந்தது.

    2-வது பாதி நேரத்தில் நைஸ் வீரர்கள் அபாரமாக விளையாடினர். 53-வது நிமிடத்தில் கயேடன் லபோர்டேவும், 68-வது நிமிடத்தில் மொஃப்பியும் கோல் அடித்தனர். இதனால் நைஸ் 3-1 என முன்னிலைப் பெற்றது.

    அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முயற்சித்தது. ஆட்டத்தின் 87-வது நிமிடத்தில் எம்பாப்பே மீண்டும் ஒரு கோல் அடித்தார். ஆனால், அதன்பின் பிஎஸ்ஜி அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இதன்காரணமாக பிஎஸ்ஜி 2-3 எனத் தோல்வியை சந்தித்தது.

    இந்தத் தோல்வியால் பிஎஸ்ஜி புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்திற்கு சரிந்துள்ளது. மொனாக்கோ முதல் இடத்திலும், நைஸ் 2-வது இடத்திலும் உள்ளது.

    சொந்த மைதானத்தில் வெற்றியை கொண்டாட நினைத்த பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியின் ஆசைக்கு தடைபோட்டது ரென்னெஸ். #PSG
    பிரான்ஸில் நடைபெற்று வரும் லீக் 1 கால்பந்து தொடரில் ஏற்கனவே பாரிஸ் செயின்ட்-ஜெரமைன் அணி அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. இந்நிலையில் கடைசி லீக் ஆட்டத்திற்கு முந்தைய ஆட்டம் பிஎஸ்ஜிக்கு  சொந்தமான பார்க் டெஸ் பிரின்செஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் பிஎஸ்ஜி ரென்னெஸ் அணியை எதிர்கொண்டது.

    சொந்த மைதானத்தில் ரென்னெஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியதை ரசிகர்கள் மத்தியில் பிரமாண்டமாக கொண்டாடவும், அதன்பின் மிகப்பெரிய பார்ட்டியில் கலந்து கொள்ளவும் முடிவு செய்தது. ஆனால் பிஎஸ்ஜி அதிர்ச்சிகரமாக 0-2 எனத் தோல்வியை சந்தித்தது. இதனால் சொந்த ரசிகர்கள் முன் வெற்றியை கொண்டாட முடியாமல் கவலையோடு வெளியேறினார்கள்.



    பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அடுத்த போட்டியில் எஸ்எம் கேயன் அணியை எதிர்கொள்கிறது. தற்போது பிஎஸ்ஜி 37 போட்டிகள் முடிவில் 92 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. மொனாகோ 77 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. 
    ×