என் மலர்
நீங்கள் தேடியது "Linda"
- சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
- சென்னை ஓபன் இறுதி ஆட்டத்தில் லின்டாவிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் 16 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார்.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் சங்கம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் முதல் 20 இடங்களில் எந்த மாற்றமும் இல்லை. ஸ்பெயின் 'இளம் புயல்' கார்லஸ் அல்காரஸ் முதலிடத்திலும், நார்வேயின் கேஸ்பர் ரூட் 2-வது இடத்திலும், ஸ்பெயினின் ரபெல் நடால் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் இகா ஸ்வியாடெக் (போலந்து) முதலிடத்திலும், ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) 2-வது இடத்திலும், அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) 3-வது இடத்திலும் தொடருகிறார்கள். சென்னை ஓபன் டென்னிசில் சாம்பியன் கோப்பையை வென்று அசத்திய 17 வயதான செக்குடியரசின் லின்டா புருவிர்தோவா கிடுகிடுவென 56 இடங்கள் முன்னேறி 74-வது இடத்தை பிடித்துள்ளார்.
அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இறுதி ஆட்டத்தில் அவரிடம் போராடி தோற்ற மேக்டா லினெட் (போலந்து) 16 இடங்கள் ஏற்றம் கண்டு 51-வது இடத்தை பெற்றுள்ளார்.
- சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் செக் குடியரசு வீராங்கனை லிண்டா வெற்றி பெற்றார்.
- வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
சென்னை:
சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற ஒற்றையர் இறுதிப்போட்டியில் 17 வயதான செக் குடியரசு வீராங்கனை லின்டா புருவிர்தோவா, போலந்தின் மேக்டா லினெட்டுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் மேக்டா லினெட்டுவை 6-4, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தி லின்டா புருவிர்தோவா சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்நிலையில், சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனை லிண்டாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேடயம் வழங்கி கவுரவித்தார்.
ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற லிண்டாவுக்கு கேடயம் மற்றும் ரூ.26.44 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
இரண்டாம் இடம் பிடித்த போலந்து வீராங்கனை மேக்டா லினெட்டுக்கு கேடயம் மற்றும் ரூ.15.73 லட்சம் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.
முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.