என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Liquor hunt"

    • இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர்.
    • 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர்.

    கடலூர்:

    காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மதிவாணன்மற்றும் போலீசார் சாராய வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது காட்டு வேகாக்கொல்லை சிவன் கோவில்அருகில்அருகில்விற்பனைக்காக இருந்த 15லிட்டர் சாராயம் வைத்திருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில்அவர்பண்ருட்டி நல்லூர் பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தயாளன்(36)என தெரியவந்தது. இதனைதொடர்ந்து அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர்
    • விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் நேற்று தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரசினால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி அம்பேத்கர் நகர் கலைவாணன் (47), கண்டரக்கோட்டை சுரேஷ் (36) ஆகியோரையும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட பண்ருட்டி ஆர்.எஸ். மணி நகர் முரளி ( 38 ), விழமங்கலம் மஞ்சினி நகர் சங்கர் (48), சத்தியமூர்த்தி தெரு அப்துல் குத்தீஸ் (56) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

    ×