என் மலர்
நீங்கள் தேடியது "Liquor scam case"
- ரோஸ் அவென்யு கோர்ட் நேற்று கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கியது.
- இதனால் அவர் சிறையில் இருந்து வெளிவருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நேற்று, ரோஸ் அவென்யு கோர்ட் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதனால் இன்று சிறையில் இருந்து வெளியில் வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், ஜாமின் வழங்கியதற்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரிக்கும் வரை ஜாமின் நிறுத்தி வைக்கப்படுகிறது என டெல்லி ஐகோர்ட் தெரிவித்தது. சுதிர் குமார் ஜெயின் மற்றும் ரவீந்திர டுடேஜா கொண்ட பெஞ்ச் முன் உடனடியாக இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில், டெல்லி ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை தரப்பு தங்கள் வாதங்களை முன் வைத்தது. அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில் தங்கள் வாதங்களை முன் வைக்க வாய்ப்பு வழங்கவில்லை. அமலாக்கத் துறையின் ஆவணங்களை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரிசீலிக்கவில்லை. டெல்லி ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் ஜாமின் உத்தரவு அமைந்துள்ளது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கிய சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவில் தவறு உள்ளது என தெரிவித்தனர்.
இதையடுத்து, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கிய ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்து டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது.
பாராளுமன்ற தேர்தலின்போது சுப்ரீம் கோர்ட் கெஜ்ரிவாலுக்கு சுமார் 20 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
- விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
- ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்தார்.
டெல்லி மாநில அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது. இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரணை நடத்தியதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியுள்ளது. ஏற்கனவே 90 நாட்கள் சிறையில் தண்டனை அனுபவித்த நிலையிலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற காரணங்களை கருத்தில் கொண்டும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.
- டெல்லி புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு.
- கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா.
புதுடெல்லி:
டெல்லி முதல்-மந்திரியாக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் நிபந்தனை களுடன் ஜாமீன் வழங்கியது. இதனால் முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து டெல்லியில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய முதல்-மந்திரியாக மூத்த அமைச்சர் அதிஷி தேர்வு செய்யப்பட்டார்.
பின்னர் டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனாவை சந்தித்து அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

அப்போது புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தையும், கவர்னரிடம் அதிஷி கொடுத்தார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் படியே அதிஷி பதவியேற்பது எப்போது? புதிய அரசு பதவி ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இதற்கிடையே டெல்லி சட்டசபையின் சிறப்பு கூட்டம் வருகிற 26, 27-ந்தேதிகளில் நடைபெற உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
அன்றைய தினம் புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிஷி சிறப்புரையாற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 26, 27-ந்தேதிகளில் நடை பெறும் சிறப்பு கூட்டத்திற்கு டெல்லி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
டெல்லி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் முன்னோக்கி செல்லும் வழிகள் குறித்து இந்த கூட்டத்தில் அதிஷி பேசுவார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு, கவர்னர் வழங்கும் தேதிகளை பொறுத்து பதவியேற்பு விழா நடைபெறும்.
இதுவரை பதவியேற்பு விழா குறித்து உறுதியான தேதி முடிவாகவில்லை என்றனர்.
இது தொடர்பாக சட்ட வல்லுனர்கள் கூறுகையில், டெல்லி யூனியன் பிரசேதம் என்பதால் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் உள்ளது. டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மிக்கு முழு பெரும் பான்மை உள்ளது. எனவே அதிஷி முதல்-மந்திரியாக பொறுப்பேற்பதில் சிக்கல் எதுவும் இருக்காது என்றனர்.
- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி கெஜ்ரிவால் மார்ச் 21-ம் தேதி கைதுசெய்யப்பட்டார்.
- அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகாததால் கைது செய்யப்பட்டார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியை ஆளும் பா.ஜ.க. அரசு எதிர்க்கட்சித் தலைவர்களை செயல்பட விடாமல் தடுக்க புலனாய்வுத் துறையை பயன்படுத்துகிறது என மத்திய அரசின் மீது குற்றச்சாட்டை முன்வைக்கிறது எதிர்க்கட்சி.
ஒரு சில மாநிலங்களில் முதல் மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பதே இந்தக் குற்றச்சாட்டிற்கு காரணம்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் கெஜ்ரிவாலை கைதுசெய்ததன் மூலம் எதிர்க்கட்சிகளை அடக்குகிறது பா.ஜ.க. மிரட்டல் விடுக்கிறது என எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டின.

ஜூன் 12-ம் தேதி அமலாக்கத்துறை வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமின் கிடைத்தது. செப்டம்பர் 13-ம் தேதி சிபிஐ வழக்கிலும் அவருக்கு ஜாமின் கிடைத்தது. 5 மாத சிறைவாசத்துக்குப் பின் கெஜ்ரிவால் வெளியே வந்தார்.
இதேபோல், போலி ஆவணங்கள் மூலம் கோடிக்கணக்கில் மதிப்பிலான நிலங்களை சட்டவிரோதமாக கையகப்படுத்தினார் என ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன்மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. கடந்த ஜனவரி 31-ம் தேதி அவரை கைது செய்த, ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையடுத்து, ஜார்க்கண்ட் மாநில புதிய முதல் மந்திரியாக சம்பாய் சோரன் பொறுப்பேற்றார். இதனால் பிப்ரவரி 5-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஹேமந்த் சோரன் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் ஐகோர்ட் ஜாமின் வழங்கியதை அடுத்து, 150 நாட்கள் கழித்து கடந்த ஜூன் 28-ம் தேதி ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

மேலும், டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட மணீஷ் சிசோடியா சுமார் 17 மாதத்துக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இதே வழக்கில் கடந்த மார்ச் 15-ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல் மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஐதராபாத்தில் கைதுசெய்யப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ஜாமின் வழங்கிய நிலையில், 165 நாளுக்குப் பிறகு டெல்லி திகார் சிறையில் இருந்து கவிதா வெளியே வந்தார்