என் மலர்
நீங்கள் தேடியது "liquor shops"
- பெரியகுளம் தென்கரை காந்திசிலை பஸ்நிறுத்தம் அருகே வணிகவளாகங்கள் நிறைந்த பொதுமக்கள் கூடும் இடத்தில் தனியார் மதுபானக்கடை உள்ளது
- மதுபான கடைகளை மூடாவிட்டால் பொது மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்த ப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரை காந்திசிலை பஸ்நிறுத்தம் அருகே வணிகவளாகங்கள் நிறைந்த பொதுமக்கள் கூடும் இடத்தில் தனியார் மதுபானக்கடை உள்ளது. மேலும் தேனி சாலையிலும் வைகை அணை சாலையிலும் 2 தனியார் மனுபான கடைகள் இயங்கி வருகிறது.
இதனால் பொது மக்களுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறாக உள்ளதாக கூறி தனியார் மதுபான கடைகளை அகற்றவேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நிர்வாகிகள் இளங்கோவன், ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுபான கடைகளை மூடாவிட்டால் பொது மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டம் நடத்த ப்போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- திருவிழா காலங்களில் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது?
- மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுந்துள்ளது.
மதுரை
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணத்தில் மாசி மகாமக திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்ச் 6-ந் தேதி கும்ப கோணம் மாசி மகாமக திரு விழா நடைபெற உள்ளது. இதற்காக கும்பகோணத்தில் உள்ள 12 சிவ ஆலயங்கள், 5 பெருமாள் கோவில்களில் கொடியேற்றம் நடை பெற்றது. மாசி மகாமக திரு விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் வந்து கலந்து கொள்வார்கள்.
அப்போது சட்ட விரோத செயல்களை தடுக்க கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள டாஸ்மாக் கடை களை மூடவேண்டும், அன்று உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என 2021-ம் ஆண்டு உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஆனால், இதுவரை மாசி மகாமக திருவிழாவில் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. எனவே, கும்பகோணம் மாசி மக திருவிழாவில் பக்தர்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சட்டம், ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக கும்ப கோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கவும், உள்ளுர் விடுமுறை அளித்து உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விக்டோரியா கவுரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகளை மூடுவதற்கான அதிகாரம் யாருக்கு உள்ளது? எதன் அடிப்படையில் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது? இதற்கு அரசாணை ஏதேனும் உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அப்போது மனுதாரர் தரப்பில் அரசாணையின் அடிப்படையில் திருச்செந்தூர் திருவிழாக்களில் உள்ளூர் விடுமுறை மற்றும் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது. மதுரையிலும் இதுபோன்று நடைபெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு அரசு தரப்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் பெற்று தெரிவிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் அரசு தரப்பில் தகவல் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நாளை ஒத்தி வைத்துள்ளனர்.
- மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.
- மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபான க்கடைகள் அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூ டங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக்கூ டங்கள் ஆகியவை 4-ந் தேதி அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு, மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்ய உத்தரவிட ப்பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் தொடர்பு டையவர்கள் மீது உரிய சட்டப்பிரி வுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்து ள்ளார்.
- மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர் :
தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வருகிற 1-ந்தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூா் மாவட்டகலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தொழிலாளா் தினத்தை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள மதுபானக் கூடங்கள், உணவு விடுதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்கள் ஆகியவற்றுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே விடுமுறை நாளில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மதுக்கடைகளில் அதிகாரி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
தேவகோட்டை
தமிழகத்தில் தற்போது அரசு மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் தேவ கோட்டை கோட்டாட்சியர் பால்துரை நகரில் உள்ள அரசு மதுபான கடைகளில் ஆய்வு செய்தார்.
மது பாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறதா? மதுபாட்டில் அரசு விலைப்பட்டியல் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்தார். மது கடைகளில் அரசு விலை பட்டியல் நுகர்வோருக்கு தெரியும் படி இருக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.
அனுமதி இல்லாத பார்கள் செயல்படுகிறா? டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரும் பணியில் உள்ளார்களா? என்பது குறித்தும் அவர் ஆய்வு செய்தார். கடைகளில் உள்ள வருகை பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
பார்கள் இல்லாத மது கடைகளின் அருகே உள்ள பெட்டிக்கடைகளில் விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டிகள், தரமாக உள்ளதா? என்றும் ஆய்வு செய்தார்.
- கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி மனு
- புதுவை மண்ணின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சீர் குலைக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளர் கவுரி தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனை சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் கட்டுங்கடங்காது இயங்கி வரும் மதுக் கடைகளால் தமிழ் குடும்பங்கள் மிக வேகமாக சீரழிந்து வருகிறது. கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கும் அரசு, உயிருக்கும், வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடான மதுவினை விற்க அனுமதிப்பது எவ்வகையில் நியாயமாகும்?
பெரும்பாலான கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, சாலை விபத்து உள்ளிட்ட அனைத்து சமூக குற்றங்களுக்கும் அடிப்படை யாக இருப்பது மது பானங்கள்தான். புதுவை மாநிலத்தில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளம் விதவைகள் வாழ மதுவே காரணம். பெண்கள், குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்களுக்கும் மது காரணமாகிறது.
எனவே புதுவை மாநிலத்தில் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். சுற்றுலாதலம் என்ற பெயரில் புதுவை மண்ணின் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சீர் குலைக்கும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது மகளிர் பாசறை பொருளாளர் தேவிகா, சசிகலா, பிரியாலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இளங்கோவன், இரமேசு, திருமுருகன், காமராஜ், திவாகர், ஜெகதீஷ், வினோத், சுந்தர், சந்துரு, தனசேகரன், பிரியா, நிர்மல்சிங், யுவன்செந்தில், மதியழகன், வீராசாமி, பெரியான், செந்தில்முருகன், ஆனந்த் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் தலைமை செயலருக்கு ஏப்ரல் 11-ம் தேதியில் கடிதம் அனுப்பியிருந்தேன்.
புதுச்சேரி:
புதுவை மாநில அதிமுக துணை செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
கடந்த மார்ச் 20-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு புதுவையில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்துள்ளது. இந்த சாலைகளில் இருக்கக்கூடிய மது விற்பனை உரிமத்தை உடனடியாக 4 வாரத்தில் இடமாற்றம் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பித்திருந்தது.
சுப்ரீம்கோர்ட்டு குறிப்பிட்டுள்ள புதுவையில் உள்ள தேசிய, மாநில மற்றும் நகராட்சி முக்கிய சாலைகளில், என்.எச் 45 ஏ புதுவை- மதகடிப்பட்டு எல்லை முதல் முள்ளோடை எல்லை வரை, என்.எச் 66 புதுவை இந்திராகாந்தி சதுக்கம் முதல் கோரிமேடு எல்லை மாநில நெடுஞ்சாலை வரை, கணபதி செட்டிகுளம் முதல் பிள்ளைச்சாவடி வரை(கிழக்கு கடற்கரை சாலை), கருவடிகுப்பம் முதல் ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் வரை(கிழக்கு கடற்கரை சாலை), லால்பகதூர் சாஸ்திரி வீதி, எஸ்.வி.படேல் சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை, பாரதி வீதி, சின்ன சுப்பராயப் பிள்ளை வீதி, முகமது காசிம் சாலை, செஞ்சி சாலை, மறைமலை யடிகள் சாலை, திருவள்ளுவர் சாலை, ஆம்பூர் சாலை, உப்பளம் அம்பேத்கர் சாலை, வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம் முதல் மரப்பாலம் சந்திப்பு வரையுள்ள சாலை,
மகாத்மா காந்தி சாலை, ஜவகர்லால் நேரு வீதி, மிஷன்வீதி மெயின் சாலை, கருவடிக்குப்பம் மெயின்ரோடு, ஏழை மாரி யம்மன் கோவில் மெயின் ரோடு, கடலூர் மெயின்ரோடு, லெனின் வீதி, வில்லியனூர் மெயின்ரோடு, திருக்காஞ்சி மெயின்ரோடு, வில்லியனூர் முதல் பத்துகண்ணு வரையுள்ள மெயின்ரோடு, பத்துக்கண்ணு முதல் திருக்கனூர் வரை சோரப்பட்டு வழி செல்லும் சாலை, ராஜீவ்காந்தி சதுக்கம் முதல் திருக்கனூர் மெயின்ரோடு வரை, மதகடிப்பட்டு முதல் திருக்கனூர் வரை மெயின்ரோடு, திருக்கனூர் முதல் மணலிப்பட்டு வரை மெயின்ரோடு மற்றும் காரைக்கால், மாகி, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள முக்கிய வீதிகளும் அடங்கும்.
சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்ற வலியுறுத்தி புதுவை மாநில அதிமுக சார்பில் தலைமை செயலருக்கு ஏப்ரல் 11-ம் தேதியில் கடிதம் அனுப்பியிருந்தேன்.
அதற்கு எந்தவித பதிலும் தலைமை செயலாளர் அளிக்கவில்லை. இதனால் கடந்த மே 11-ம் தேதி சட்டவிரோதமாக அமைக்கப் பட்டுள்ள மதுபான கடைகளை அகற்றக்கோரி சட்டப்படி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் புதுவை அரசு எந்த நடவடி க்கையும் எடுக்கவில்லை.
சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை ஏற்காமல் இருப்பது, இந்திய அரசிய லமைப்பு சட்டத்தை மீறும் செயலாகும். எனவே புதுவை அரசுக்கு மத்திய உள்துறை மந்திரி, சுப்ரீம்கோர்ட் உத்தரவை புதுவை அரசு பின்பற்ற உறுதியான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என புதுவை மாநில அ.தி.மு.க சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கடிதத்தில் கூறியுள்ளார்.
- மதுபானக்கடைகள், மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் அனைத்தும் மூடப்படும்.
- தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிககை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் இயங்கி வரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், மனமகிழ் மன்றங்கள் மற்றும் உணவு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் அரசு உரிமம் பெற்ற மதுபான க்கூடங்கள் ஆகியவை 15.8.2023 அன்று நாள் முழுவதும் மூடப்பட்டு மதுபானங்கள் விற்பனை செய்வதை நிறுத்தம் செய்யப்பட வேண்டுமென உத்தரவிடப் பட்டுள்ளது.
தவறும் பட்சத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த முடிவு.
- உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் பிறப்பித்தார்.
உத்தரப் பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. அரசியல் பிரபலங்கள், திரைப் பிரபலங்கள் உள்பட ஏராளமானோருக்கு அழைப்பிதழும் வழங்கப்பட்டு வருகிறது.
விழாவை முன்னிட்டு, உத்தரப் பிரதேச அரசால் ஆளில்லா விமானங்கள், 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்ட கருவிகளை பயன்படுத்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒரு சில மாநிலங்களில் 22ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை கலால் ஆணையர் ஹரி சந்திர செம்வால் நேற்று பிறப்பித்தார்.
மேலும், இந்த அறிவிப்பால் மாநிலத்தில் மதுபான உரிமம் வைத்திருப்பவர்களுக்கு இழப்பீடு அல்லது உரிமைகோரல்கள் எதுவும் கிடைக்காது என்றும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரு தினங்களுக்கு டாஸ்மாக் மூடப்படுகிறது.
- தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி சென்னையில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
15.01.2025 (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர் தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினம் ஆகிய இரு தினங்களில் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1981 விதி 2511(a) ஆகியவைகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மற்றும் FL3(A), FL3(AA) மற்றும் FL11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 15.01.2025 (புதன்கிழமை) அன்று திருவள்ளுவர தினம் மற்றும் 26.01.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று குடியரசு தினம் ஆகிய தினங்களில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மதுரையில் நாளை மதுகடைகள் அடைக்கப்பட உள்ளது.
- மேற்கண்ட தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
நாளை (9-ந் தேதி) மிலாடி நபி தினம் கொண்டாடப்படுவதையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லரை விற்பனை கடைகள், மனமகிழ் மன்றங்கள், தங்கும் விடுதியுடன் கூடிய மது பார்கள், அயல்நாட்டு மதுபான சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை மூடப்பட்டு இருக்கும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
- மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபி ஆகிய தினத்தை முன்னிட்டு அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி, மிலாது நபியை முன்னிட்டு வரும் அக்டோபா் 2, 9 -ந் தேதிகளில் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்த மதுபானக்கூடங்கள், உணவு விடுதிகளுடன் கூடிய அரசு உரிமம் பெற்ற மதுபானக் கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மேற்கண்ட நாள்களில் மது விற்பனையில் ஈடுபடும் நபா்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.