search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Literary festival"

    • 28-ந்தேதி தொடக்கம்
    • ஆலோசனை கூட்டம் நடந்தது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் புத்தக கண்காட்சியுடன் இணைந்த 2-வது திருப்பத்தூர் இலக்கிய திருவிழா- 2023 28-ந்தேதி (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந்தேதி வரை திருப்பத்தூர் தூய நெஞ்ச கல்லூரி வளாகத்தில் நடக்கிறது.

    இது குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும் வணிகர் சங்கங் கள், பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வலர் கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் மற்றும் அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.

    அப்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா பேசுகையில், "இந்த இலக்கிய திருவிழாவில் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தக அரங்குகள் திறந்து வைக்கப்பட உள்ளது.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வட்டாரத்திலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் புத்தக கண்காட்சியை பார் வையிட்டு அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ளவும், புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை பெருக்கி கொள்ளவும் இந்த புத்தக கண்காட்சி அமையும். மேலும் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை 60-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், மொழிப்பெயர்ப்பா ளர்கள், பேராசிரியர் கள், கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.

    அனைத்து தரப்பு மக்களும் குடும்பத்துடன் கலந்து கொண்டு பெருமை சேர்க்க வேண்டும்" என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், வருவாய் கோட் டாட்சியர்கள் லட்சுமி, பிரேமலதா, துணை ஆட்சியர்;கள் கோவிந்தன், முத்தையா, பள்ளி, கல்லூரிகளின் முதல்வர்கள். தமிழ் பேராசிரியர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், எழுத்தா ளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×