என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "lives"
- கொரோனா மூன்று அலைகளிலும் பல லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.
- எங்களுக்கு நிரந்தர தன்மை உடைய ஒப்பந்த பணி வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை தலைமை தபால் நிலையத்தில் இன்று கொரோனா காலத்தில் ஆஸ்பத்திரியில் பணிபுரிய எம்.ஆர்.பி. தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் தமிழக முதல் -அமைச்சருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
இதில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
அவர்கள் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் எம்.ஆர்.பி. தேர்வு மூலம் கடந்த 2019-ம் ஆண்டு கட்டாய பணி ஆணை மூலம் கொரோனா மூன்று அலைகளிலும் பல லட்சம் மக்களின் உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.
எங்களுக்கு நிரந்தர தன்மை உடைய ஒப்பந்த பணி வழங்க வேண்டும்.
ஆனால் தற்போது தற்காலிக முறையில் ஒப்பந்த பணிக்கு செல்லுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்ற தவறான தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே தற்காலிக ஒப்பந்த பணியை ரத்து செய்து நிரந்தர ஒப்பந்த பணி வழங்க வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.