என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lord Muruga"

    • மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.
    • இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    பதினெட்டாம்படி கடந்து மேல் சென்றால் மலைச்சாரலில் மூன்று கற்கள் மாறுபட்ட நிறத்தோடு இருப்பதைக் காணலாம்.

    இம்மூன்று கற்களும் சிலையாய் போன திருடர்கள் என்பர்.

    முருகனடியார்கள் கோவில் திருப்பணி நடந்த போது பொன்னையும், பொருளையும் உண்டியலில் போட,

    இதை கண்ட மூன்று கள்வர்கள் ஒருநாள் இரவில் உண்டியலை உடைத்து பொன்னையும், பொருளையும் களவாடி மலைச்சரிவு வழியாக சென்றனர்.

    முருகப்பெருமான் குதிரை வீரனைப்போல சென்று அவர்களைப் பிடித்து, "நீவிர் கற்சிலைகளாகக் கடவீர்" எனச் சபித்ததால் அம்மூன்று கள்வர்களும் கற்சிலைகளாக நிற்பதாகச் செவி வழிச் செய்தி கூறுகின்றது.

    • மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.
    • இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம்.

    நம் நாட்டில் விளங்கும் புனிதமுடைய பற்பல கிணறு, குளம், ஆறு, கடற்கரை இவையாவும் சிமயத்தன்மை பெற்றிருப்பதால் நீராடியோரது உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் அவை போக்குகின்றன.

    இதனை திருநாவுக்கரசர், 'சென்ற நாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே' என்கிறார்.

    இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை.

    அவை....மருததீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க மூன்று தீர்த்தங்கள் உள்ளன.

    இத்தீர்த்தங்களில் நீராடுவோர்க்குச் செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்குமெனவும் திருத்துடிசைப் புராணம் கூறுகிறது.

    • நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
    • மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    இயற்கையழகுமிகு மலைகளுக்கிடையில் இதயம் போல காட்சியளிக்கும் அழகிய மலைக்கோவிலாம் மருதமலை இதயத்தை ஈர்க்கிறது.

    பேரெழில் வாய்ந்த முருகப்பெருமானின் பேரழகைக் கச்சியப்ப முனிவர்,

    'ஆயிரங்கோடி காமர் அழகெல்லாம் திரண்டு எழுந்த மேயின எனினும் செவ்வேள் விமலமாற் சரணந்தன்னில் தூய நல்லெழிலுக்கு ஆற்றாது என்றிடில் இணைய தொல்லோன் மாயிருவடிவிற்கெல்லாம் உவமையார் விடுக்க வல்லார்',

    என்று பாடுவார்.

    அதே போல் இத்திருக் கோவிலில் மருதமலையான், சிரசில் கண்டிகையுடனும், பின் பக்கம் குடுமியுடனும், கோவணங்கொண்டு, வலது திருக்கரத்தில் ஞானத்தண்டேந்தி,

    இடது திருக்கரத்தை இடையில் அமைத்து வினைகளை வேரறுத்து யமன் பயம் தீர்த்து உண்மையறிவை அறியச் செய்யும் நீண்ட வேலோடு உலகைக் காக்கும் மருதாசல மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மூர்த்தி தலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினார்க்கு வரத்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே!

    • இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.
    • இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    5 மரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து வளர்ந்த அழகிய பழமையான மரம் ஒன்று ஆலயத்தில் அமைந்துள்ள மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.

    இந்த மரத்தடியில் விநாயகர் சிலை ஒன்று உள்ளது.

    இந்த மரத்தின் காற்று எல்லா நோய்களையும் தீர்க்கவல்லது என்றும் பல முனிவர்கள் இன்றும் கண்களுக்கு தெரியாமல் மரத்தில் தவம் செய்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இந்த மரம் வேறு எங்கும் காண கிடைக்காத அபூர்வமான ஒன்றாகும்.

    இந்த மரம் நெடுங்காலமாக உள்ளது. இதன் வயது கணக்கிட முடியவில்லை.

    இந்த மரத்தின் இணைந்த மரங்கள் குறித்து இந்த மலையில் புராதனமாக வாழும் இருளர்கள் கூறும் போது, "கொரக்கட்டை, இச்சி, ஆலமரம், வக்கணை மரம் மற்றும் ஒட்டுமரம் ஆகிய 5 மரங்கள் தற்போது உள்ளது" என தெரிவித்தனர்.

    • தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்
    • வைகாசி- வைகாசி விசாகம்

    மருதமலை கோவிலில் ஆண்டு முழுவதும் முருகப் பெருமானுக்கு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

    சித்திரை - தமிழ் வருட பிறப்பு

    வைகாசி- வைகாசி விசாகம்

    ஆடி-ஆடி கிருத்திகை, ஆடி18

    ஆவணி-விநாயகர் சதுர்த்தி

    புரட்டாசி- நவராத்திரி

    ஐப்பசி-கந்த சஷ்டி, சூரசம்ஹாரம் விழா 7 நாட்கள் நடைபெறும், திருக்கல்யாணம்

    கார்த்திகை- கார்த்திகை தீபம்

    மார்கழி- தனூர் மாதம் பூஜை (ஜனவரி - ஆங்கில புத்தாண்டு)

    தை- தைப்பூச விழா 10 நாட்கள் நடைபெறும். தேர் திருவிழா- முருகன்- வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

    மாசி- சிவராத்திரி

    பங்குனி- பங்குனி உத்திரம். பங்குனி மாத ரோகிணி நட்சத்திரத்தில் கும்பாபிஷேக விழா

    • அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.

    சென்னிமலை:

    நவராத்திரியை முன்னிட்டு சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் கடந்த 9 நாட்களாக சாமிக்கு கொழு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும் தினமும் ஒரு சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

    நவராத்திரியின் 10-வது நாளான நேற்று மாலை விஜயதசமியை முன்னிட்டு அம்புசேவை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக மாலை 4.30 மணிக்கு அசுரனை வதம் செய்வ தற்காக சென்னிமலை கைலாசநாதர் கோவிலில் இருந்து வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களுடன் முத்துக்குமாரசாமி குதிரை வாகனத்தில் புறப்பட்டார்.

    அப்போது வள்ளி-, தெய்வானை ஆகியோர் தனி சப்பரத்தில் உடன் வந்தனர்.

    சாமிகள் ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து தினசரி மார்க்கெட் அருகில் உள்ள பிராட்டியம்மன் கோவில் வாசலை அடைந்தனர்.

    அங்கு சென்னிமலை முருகன் கோவில் தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவச்சாரியார் தலைமையில் முருகப்பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப் பட்டது.

    அதைத்தொடர்ந்து "வண்ணாசூரன்" என்ற அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அப்போது வாழை மரம் உருவத்தில் இருந்த வண்ணாசூரனை வில், அம்பு, வால் போன்ற ஆயுதங்களால் குத்தி வதம் செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து அசுரனை அழித்த உற்சாக மிகுதியில் இருந்த முத்துக்குமாரசாமி வண்ணாசூரனை 3 முறை வலம் வந்து மீண்டும் வள்ளி-தெய்வானையுடன் புறப்பட்டு கைலாசநாதர் கோவிலை அடைந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முருகன் தரிசனத்தால் நான்கு விதமான நன்மைகளைப் பெறலாம்.
    • .பிறவித் துன்பத்தைப் போக்கவல்லது

    முருகன் தரிசனத்தால் நான்கு விதமான நன்மைகளைப் பெறலாம் என்று "கந்தர் கலிவெண்பா" எடுத்துரைக்கிறது.

    1.பிறவித் துன்பத்தைப் போக்கவல்லது

    2.இடையூறுகள், நோய்கள், பில்லி, சூன்யம் போன்ற ஏவல் வினைகள், பாம்பு, பிசாசு, கொடிய பூதம், பெருந்தீ,

    வெள்ளம், பகைவர்கள் ஆகியவைகளிலிருந்தும் காக்கும்.

    3.தீமை விளைவிக்கும் கொடிய நஞ்சுகொண்ட விலங்குகள் முதலிய எவையாயினும்

    எவ்விடத்தும் எப்போது வந்து எதிர்த்தாலும் எழுந்தருளிக் காப்பார்.

    4.மரண பயத்தை நீக்கும்.

    • “கனககிரி” என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.
    • மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் “நீர்” தீர்த்தமாக கருதப்படுகிறது.

    "கனககிரி" என்று அழைக்கப்படும் பொன்மலை சுமார் 660 அடி உயரம் உடையது.

    இதன் உச்சியில் உள்ள வேலாயுத சுவாமி கோவிலுக்கு செல்ல 200 படிக்கட்டுகள் உள்ளன.

    மலை எறும் வழியில் இடும்பன் சன்னதி உள்ளது.

    மலை மீதுள்ள வற்றாதச் சுனைகளின் "நீர்" தீர்த்தமாக கருதப்படுகிறது.

    கிழக்கு திசை பார்த்தவாறு கோவில் அமைந்துள்ளது.

    கோவில் மகா மண்டபத்தினுள் இடதுபுறம் ஆனந்தமாக தல விநாயகர் காட்சி தருகிறார்.

    கருவறையில் வோலயுத சுவாமி என்ற பெயருடன் மூலவர் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார்.

    சுமார் 4 அடி உயரமுள்ள திருமேனி, வலக்கரத்தில் தண்டம் தரித்து இடக்கரத்தை இடுப்பில் வைத்த நிலையில் அருட்காட்சி தருகிறார்.

    ருத்ராட்சம் சுற்றி சூரிய சந்திரர்களையும் சூடி விளங்கும் திருமுடியுடன் கூடிய

    அழகன் முருகப்பெருமானின் அலங்கார காட்சி வேறு எந்த திருத்தலத்திலும் காணக்கிடைக்காத அருட்காட்சியாகும்.

    வேல் கொண்ட கையுடன் விளங்கும் இங்குள்ள வேலாயுத சுவாமியை கண்டு தொழ

    "நாலாயிரம் கண் அந்த நான்முகன் படைத்திலனே" என்று தனது கனககிரி திருப்புகழில் ஏங்குகிறார் அருணகிரிநாதர்.

    • நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.
    • தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    தமிழ்நாட்டில் எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு பழனி முருகன் கோவிலுக்கு உண்டு.

    அது பழனிக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் கட்டுக் கடங்காத பாதயாத்திரை கூட்டம்.

    தைப்பூசம் சீசனில் பழனி நோக்கி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நடந்தே பாதயாத்திரையாகச் சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

    உலகம் முழுவதும் இந்த பாதயாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தியவர்கள் நகரத்தார்கள் ஆவார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்கள் பழனி கோவிலுக்கு நடந்து வருவதை சில நடைமுறைகளுக்காக கடைப்பிடித்தனர்.

    பாதயாத்திரை வரும் போது ஒவ்வொரு குடும்பத்தினரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பார்கள்.

    அதை வைத்து அந்த குடும்பத்தினருடன் திருமண சம்பந்தம் ேபசி முடிப்பார்கள்.

    நாளடைவில் இந்த பாதயாத்திரை வழக்கம் தமிழர்கள் அனைவரிடமும் பரவி விட்டது.

    பாதயாத்திரையின் போது காவடி ஏந்தி செல்வதும், அலகு குத்தி தேர் இழுத்து செல்வதும் முக்கிய அம்சம்.

    முருகனிடம் இடும்பன் வரம் கேட்டபோது, நான் மலைகளை காவடி ஏந்தியது போல

    காவடி ஏந்தி வரும் பாதயாத்திரை பக்தர்களின் வேண்டுதல்களை, நீ நிறைவேற்ற வேண்டும் என்றான்.

    இதை ஏற்று காவடி ஏந்தி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வேண்டுதல்களை பழனி முருகன் நிறைவேற்றுகிறார்.

    நோய் தீர வேண்டும், நல்ல வரன் கிடைக்க வேண்டும், வியாபாரம் செழிக்க வேண்டும்,

    குடும்பத்தில் பிரச்சினை தீர வேண்டும் என்று லட்சக் கணக்கானவர்கள் ஆண்டுதோறும்

    பழனி முருகனை நாடி, நடந்தே வருகிறார்கள்.

    சமீப காலமாக சென்னையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது.

    • திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.
    • திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    திருப்போரூா் கந்தசுவாமி கோவில் தமிழ்நாட்டின், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் அமைந்த முருகன் கோவில் ஆகும்.

    இக்கோவில் நகரின் மையத்தில் அமைந்துள்ளது.

    திருபோரூரானது பழைய மகாபலிபுரம் சாலையில் அமைந்துள்ளது.

    திருப்போரூா் கந்தசாமி கோவில் சுப்பிரமணிய சுவாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

    அகத்திய மாமுனிவர் ஒருமுறை, "போகத்தையும் முக்தியையும் அளித்து, கந்தன் குருமூர்த்தியாய் உபதேசிக்கும் தலம் எது?"

    என்று கேட்டார்., "சர்வ பாவங்களையும் போக்கும் அறுபத்து நான்கு தலங்களில் ஆறு தலங்கள் நமக்குரியவை.

    அவற்றிலும் மிக உகந்தது யுத்தபுரி (திருப்போரூர்)" என்று கந்தப் பெருமானே போற்றிய திருத்தலம் திருப்போரூர்.

    சிதம்பர ஸ்வாமிகள் அருள் பெற்ற தலமும் கூட!

    திருப்போரூர் கந்தசாமியை வழிபட, சகல காரியங்களும் நல்லபடியாக நடைபெறும்.

    • திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.
    • தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    திருத்தணி முருகன் கோவில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது.

    இது தமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.

    முருகப் பெருமான் தேர்களின் துயரம் நீங்கும்பொருட்டு சூரபது மனுடன் செய்த பெரும் போரும்,

    வள்ளியம்மையை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாக நிகழ்த்திய சிறு போரும் முடிந்து,

    தணிந்து அமர்ந்த தலம் ஆதலின் திருத்தணிகை எனப் பெயர் அமைந்தது.

    தேவர்களின் அச்சம் தணிந்த இடம், முனியவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம்,

    அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை ஆகியவற்றைத் தணிக்கும் இடம் ஆதலாலும்,

    இதற்கு தணிகை என்று பெயர் அமைந்தது.

    • சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.
    • இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

    சென்னை மயிலாப்பூர், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் தெற்குப் பிராகாரத்தில் சிங்காரவேலர் சந்நிதி உள்ளது.

    ஆறுமுகங்கள், பன்னிரு கரங்களுடன் மயில் மீது அமர்ந்த கோலத்தில், மேற்கு நோக்கி சிங்காரவேலர் காட்சி தருகிறார்.

    இருபுறமும் ஸ்ரீவள்ளி தெய்வானை தேவியர் உள்ளனர்.

    செவ்வாய், வெள்ளிக் கிழமைகள், சஷ்டி, கிருத்திகை மற்றும் தைப்பூச தினங்களிலும்

    மயிலை சிங்காரவேலருக்கு நெய் தீபமேற்றி வழிபட, சகல பிரச்சினைகளும் காணாமல் போகும்.

    ஆண்டார்குப்பம்

    சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாகபொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது.

    ஆதியில் ஆண்டிகள் நிறைந்த அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படுகிறது.

    இங்கே காலையில் பாலனாக, நண்பகலில் வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார் முருகன்.

    "பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார்.

    எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்" என்கிறார்கள்.

    ×