என் மலர்
நீங்கள் தேடியது "lorry on fire"
- ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கிரானைட் கற்களை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது.
- திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, பின் பக்க் டயர் வெடித்ததில் டீசல் டேங்க்கில் தீப்பிடித்தது.
திருச்செங்கோடு:
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருச்செங்கோடு நோக்கி கிரானைட் கற்களை பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. லாரியை சரவணன் என்பவர் ஓட்டி வந்தார். அவருக்கு உதவியாக ராம சந்திர நாயுடு இருந்தார்.
இந்த நிலையில், திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது, பின் பக்க் டயர் வெடித்ததில் டீசல் டேங்க்கில் தீப்பிடித்தது. இதையடுத்து டிரைவர் சரவணன், ராமசந்திர நாயுடு ஆகியோர் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கினர்.
அதற்குள் லாரி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனிடையே டயர் வெடித்து தீப்பிடித்தபோது, லாரியின் பின்னால் வந்த இரு சக்கர வாகனத்திலும் தீப்பிடித்தது. இந்த இருசக்கர வாகனத்தில் வந்த திருச்செங்கோட்டை சேர்ந்த நரசிம்மன் மற்றும் சரஸ்வதி ஆகியோர், வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் இருவரும் சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியில் பிடித்த தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் திடீரென லாரி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.