என் மலர்
நீங்கள் தேடியது "Loterry Ticket"
- சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
- போலீசை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர்.
சிவகிரி:
சிவகிரி சப்-இன்ஸ்பெக்டர் சஞ்சீவ் தலைமையில் போலீசார் சிவகிரி பஸ் நிலையம், மெயின் பஜார், செக்கடி தெரு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 59) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டு இருந்தார்.
போலீசை கண்டவுடன் தப்பி ஓட முயன்ற அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 131 லாட்டரி சீட்டுகளை கைப்பற்றிய போலீசார் அவரை கைது செய்தனர்.
இதேபோன்று சிவகிரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கடற்கரை (70) என்பவர் அனுமதியின்றி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தபோது போலீசார் இவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்து 105 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இருவரிடமும் மொத்தம் 236 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.