என் மலர்
நீங்கள் தேடியது "lovers Suicide"
- அடிக்கடி சரவணன் தன் மீது சந்தேகப்படுவதால் கிருத்திகா மிகுந்த மன விரக்தி அடைந்துள்ளார்.
- கிருத்திகா விநாயகர் சதுர்த்தி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மணக்கடவு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சரவணன் (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தாராபுரம் நாடார் தெருவை சேர்ந்த வெற்றிவேந்தன் என்பவரது மகள் கிருத்திகா (வயது 18).
இவர் காங்கயத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். சரவணனும், கிருத்திகாவும் காதலித்து வந்த நிலையில், கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருத்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் நேற்று மாலை சரவணன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அலங்கியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் விசாரணையில் 2பேரின் தற்கொலைக்கான காரணம் குறித்த விவரங்கள் தெரிய வந்தது. சரவணன், கிருத்திகா 2 பேரும் உறவினர்கள். இருவரும் காதலித்து வந்த நிலையில், சரவணன் கோவையில் உள்ள கல்லூரியிலும், கிருத்திகா காங்கயத்தில் உள்ள கல்லூரியிலும் படித்து வந்துள்ளனர். அப்போது சரவணன் கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுடன் பேச, பழக கூடாது என்று கிருத்திகாவுக்கு கண்டிசன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அடிக்கடி சரவணன் தன் மீது சந்தேகப்படுவதால் கிருத்திகா, மிகுந்த மன விரக்தி அடைந்துள்ளார். இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் காதலி பிரிந்த சோகத்தை தாங்க முடியாமல் வாழ்ந்து வந்த சரவணன், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கிருத்திகாவை போன்றே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலனும், காதலியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாராபுரம் பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு பெற்றோர் சந்தேகம் அடைந்தனர்.
- தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள காடை இடையாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் என்பவரது மகன் அருண் (வயது 23). பள்ளி படிப்பை முடித்துவிட்டு கட்டிட கான்கிரீட் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த 9-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவியும், அருணும், கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாக காதலித்து வந்தனர். அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் காதலனுடன் ஊர் சுற்றியும் வந்துள்ளார்.
பள்ளிக்கு சென்றுவரும் மகளின் நடவடிக்கையில் மாற்றம் இருப்பதை கண்டு அவரது பெற்றோர் சந்தேகம் அடைந்தனர். அத்துடன் தங்களது உறவினர்கள் மூலம் அவரை கண்காணித்தபோது, மகள் காதல் வலையில் சிக்கி இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
முதலில் மகளிடம் பெற்றோர் படிப்பு தான் நமக்கு முக்கியம், காதல் எல்லாம் வேண்டாம் என்று பக்குவமாக எடுத்துக்கூறினர். ஆனால் அதனை மாணவி கண்டுகொள்ளவில்லை. வழக்கம்போல் தனக்கான பாதையில் சென்றார். கடந்த 1-ந்தேதி மகளை அவரது பெற்றோர் கடுமையாக கண்டித்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற மாணவி இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடினர்.
இதற்கிடையே அங்கு இருள்சூழ்ந்த பகுதியில் கோவில் அருகே உள்ள புளியமரத்தில் அருண், மாணவி இருவரும் தூக்கில் பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் நாகுடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தற்கொலை செய்துகொண்ட காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம்காதல் ஜோடி தற்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சினிமாவை மிஞ்சும் இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகன் சிவரஞ்சன் (வயது 18). இவர் கீழகல்பூண்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார்.
கீழகல்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகள் அபிராமி(16). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். பள்ளிக்கூடத்துக்கு சென்று வந்த போது சிவரஞ்சனுக்கும், அபிராமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்த நிலையில் இருவரும் பொதுத்தேர்வு எழுதி முடித்ததும் விடுமுறையில் வீட்டில் இருந்து வந்தனர். இருப்பினும் பல நேரங்களில் சிவரஞ்சனும், அபிராமியும் பொது இடங்களில் சந்தித்து தங்களது காதலை வளர்த்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே இவர்களது காதல் விவகாரம் அவர்களின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிவரஞ்சனையும், அபிராமியையும் சந்திக்க விடாமல் தடுத்து வந்தனர்.
இதை மீறி நேற்று முன்தினம் மாலை சிவரஞ்சனும், அபிராமியும் வீட்டை விட்டு வெளியேறி தொழுதூரை சேர்ந்த வேந்தன் என்பவரது விளை நிலத்துக்கு சென்று தனிமையில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவில் அங்கு வந்த வேந்தன், அவர்களை அங்கிருந்து விரட்டி விட்டார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர்.
ஆனால் காதல் ஜோடி வீட்டுக்கு செல்லவில்லை. இதனால் அவர்கள் 2 பேரையும் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். ஆனாலும் அவர்கள் கிடைக்கவில்லை. இது பற்றி தகவல் அறிந்த வேந்தன் தனது நிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அவரது கிணற்றின் அருகில் 2 ஜோடி செருப்புகள் கிடந்தன.
உடனே அவர் போலீசாருக்கும், சிவரஞ்சன், அபிராமி ஆகியோரது பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது சிவரஞ்சனும், அபிராமியும் துப்பட்டாவால் உடலை சுற்றி கட்டிய நிலையில் நீரில் மூழ்கிக் கிடந்தது தெரிந்தது.
பின்னர் இருவரது உடலையும் கிணற்றில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதற்கிடையே அங்கு வந்த இருவரது பெற்றோர் மற்றும் உறவினர்களும் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். இது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.
இதையடுத்து போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், காதலுக்கு அவர்களின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், இனி சேர்ந்து வாழ முடியாது என்று எண்ணிய இருவரும் ஒன்றாகவே சாவோம் என்ற விபரீத முடிவை எடுத்துள்ளனர். அதன்படி இருவரும் துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
புன்னகை மன்னன் சினிமா படத்தில் நாயகனும், நாயகியும் ஜோடியாக மலை உச்சியில் இருந்து குதிப்பார்கள். அந்த சினிமா படத்தை மிஞ்சும் வகையில் இவர்கள் துப்பட்டாவால் தங்கள் உடலை சுற்றி கட்டிக்கொண்டு ஜோடியாக கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.