என் மலர்
நீங்கள் தேடியது "lumber"
பூதலூர்:
கல்லணையிலிருந்து கோவிலடி வழியாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலை அகலப்படுத்தப்பட்டு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக கோவிலடி, திருச்சின்னம் பூண்டி உள்ளிட்ட கிராமங்களில் சாலையோரம் இருந்த பழமை வாய்ந்த பல மரங்கள் அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டன.
வெட்டப்பட்ட மரங்கள் அனைத்தும் அப்புறப்ப டுத்தப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சின்னம் பூண்டி கிராமத்தில் மிகப்பழமை வாய்ந்த மரமும் ஒன்று வெட்டி அகற்றப்பட்டது. அதன் அடிபாகம் வெட்டப்பட்டு வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படாமல் அந்த இடத்திலேயே சாலையோரம் கிடக்கிறது.அந்த மரத்துண்டில் சிவப்பு கொடி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
பகல் நேரங்களில் மரம் இருப்பதை சிகப்பு கொடியால் அறிந்துகொள்ள இயலும். இரவு நேரங்களில் பரபரப்பான போக்குவரத்து மிகுந்த சமயங்களில் மரம் கிடைப்பதை அறிந்து கொள்ளமுடியாமல் விபத்துக்கள் ஏற்படக்கூ டும். எனவே உடனடியாக வெட்டப்பட்டு அகற்றப்ப டாமல் இருக்கும் அடிமர த்தை அகற்றி போக்குவரத்து சீராக நடைபெற ஆவன செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.