search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "machine learning"

    • மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.
    • புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைக்கழகம் நோக்கியாவுடன் 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பற்றி கூட்டு ஆராய்ச்சி தொடர ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    வி.ஐ.டி. நிறுவனர் வேந்தர் டாக்டர். ஜி.விசுவநாதன், வி.ஐ.டி. துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன் மற்றும் டாக்டர் ஜி.வி. செல்வம் முன்னிலையில் விஐடி பதிவாளர் டாக்டர் டி.ஜெயபாரதி மற்றும் நோக்கியா பெங்களூரு பல்கலைக்கழக ஒத்துழைப்புத் தலைவர் பொன்னி ஆகியோர் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    விஐடி துணைவேந்தர் டாக்டர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் டாக்டர் பார்த்த சாரதி மல்லிக், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் துறை டீன் டாக்டர்.எஸ்.சிவானந்தம் மற்றும் நோக்கியா லேப்ஸ் தலைவர் எஸ்.மீனாட்சி, நோக்கியா விஐடி புரிந்துணர்வு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் க. கோவர்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம், விஐடி மற்றும் நோக்கியா ஆகியவை 5ஜி, செயற்கை நுண்ணறிவு (ஏ1உ) மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு, டிஜிட்டல் ட்வின், ரேடியோ அடிப்படையிலான உணர்திறன், இணைக்கப்பட்ட வான்வழி வாகனங்கள், மின்னணு ஆரோக்கியம் மற்றும் ஆட்டோமேஷன் போன்ற புதிய ஆய்வு துறைகளில் கவனம் செலுத்தும்.

    நோக்கியாவின் வல்லுநர்கள் விஐடியின் பாடத்திட்டக் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள், கற்றல், முன்மாதிரி மற்றும் மாணவர் திட்டங்களுக்கு வழிகாட்டுவார்கள்.

    நோக்கியா விஐடி மாணவர்களுக்கான கற்றல் வாய்ப்புகளை வழங்கும் மற்றும் குறுகிய கால தொடர் கல்வி திட்டங்களை கூட்டாக ஏற்பாடு செய்யும் என தெரிவித்தனர். 

    வாட்ஸ்அப் செயலியில் அதிகப்படியான குறுந்தகவல்களை அனுப்பும் மற்றும் தாணியங்கி நடவடிக்கைகளை கண்டறிய அதிநவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. #WhatsApp



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் போலி செய்திகள் பரப்பப்படுவதை எவ்வாறு தடுக்கிறது என்பதை தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் செயலியினுள் மெஷின் லேர்னிங் எனும் அதிநவீன தொழில்நுட்பத்தை உருவாக்கி இருப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்த தொழில்நுட்பம் வழக்கத்தை விட அதிகளவு குறுந்தகவல்களை அனுப்புவோர் மற்றும் பல்வேறு அக்கவுண்ட்களை உருவாக்கி தீங்கு விளைவிக்கும் போலி தகவல்களை பரப்புவோரை கண்டறியும். இதுபோன்ற அக்கவுண்ட்களை செயலி முழுக்க வெவ்வேறு தளங்களில் முடக்குவதாக வாட்ஸ்அப் உறுதியளித்துள்ளது.

    அந்த வகையில் போலி தகவல்களை பரப்புவதற்கென உருவாக்கப்படும் அக்கவுண்ட்கள் பதிவு செய்யப்படும் போது, குறுந்தகவல் அனுப்பும் போது அல்லது மற்றவர்கள் புகார் எழுப்பும் போது என பல்வேறு தளங்களில் முடக்கப்படுகின்றன. ஒவ்வொரு மாதமும் வாட்ஸ்அப் செயலியில் சுமார் இருபது லட்சம் அக்கவுண்ட்கள் இவ்வாறு முடக்கப்படுவதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.



    வாட்ஸ்அப் உருவாக்கி இருக்கும் மெஷின் லேர்னிங் மென்பொருளால் தற்சமயம் 20% அக்கவுண்ட்களை பதிவு செய்யப்படும் போதே முடக்கமுடிகிறது. அக்கவுண்ட்களை முடக்க பயனரின் ஐ.பி. முகவரி, அவர் வசிக்கும் நாடு, அவர்கள் பயன்படுத்தும் மொபைல் நம்பர், அக்கவுண்ட் எவ்வளவு பழையதாக இருக்கிறது என பல்வேறு விவரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

    ஒரே ஸ்மார்ட்போனில் பல்வேறு வாட்ஸ்அப் அக்கவுண்ட்களை பயன்படுத்த அனுமதிக்கும் விசேஷ மென்பொருள் உள்பட செயலியை தவறாக பயன்படுத்த அனுமதிக்கும் பல்வேறு வழிகளை வாட்ஸ்அப் கண்டறிந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியில் வியாபாரங்களை கண்கானிக்க பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.

    போலி தகவல்கள் பரப்பப்படுவதை கண்காணிக்க பயனர் ஒரு குறுந்தகவலை மற்றவருக்கு ஃபார்வேர்டு செய்யும் எண்ணிக்கையை குறைத்துள்ளது. இதுதவிர ரேடியோ, தொலைகாட்சி, வலைதளம் உள்ளிட்டவற்றில் போலி செய்திகள் பரப்புவது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விளம்பரங்களை வாட்ஸ்அப் வெளியிடுகிறது.
    இன்ஸ்டாகிராம் சேவையில் நியூஸ் ஃபீட் ஸ்டோரிக்களை ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேகமாக வழங்க அந்நிறுவனம் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.
    புதுடெல்லி:

    இன்ஸ்டாகிராம் சேவையில் ரிவர்ஸ் க்ரோனோலாஜிக்கல் ஃபீட் வழிமுறையை 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்தியது. அந்த வகையில் இன்ஸ்டாகிராம் புதிய ரேன்கிங் அல்காரிதத்தை அறிமுகம் செய்துள்ளது.

    அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் ஒவ்வொருத்தருக்கும் பிரத்யேக ஃபீட் வழங்க மெஷின் லெர்னிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் பயன்படுத்துவதால், மற்றவர்கள் பயன்படுத்தும் கணக்குகளையே நீங்கள் பயன்படுத்தினாலும் அவற்றுடன் நீங்கள் உரையாடும் விதத்தை கொண்டு பிரத்யேக ஃபீட் பார்க்க முடியும்.

    இன்ஸ்டாகிராம் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் போஸ்ட்கள் விருப்பம், பயன்பாட்டு அளவு மற்றும் உரையாடல் என மூன்று அம்சங்களை கணக்கில் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வகையிலான போஸ்ட்களுக்கு முன்னதாக நீங்கள் அணுகிய விதத்தை புரிந்து கொண்டு நியூஸ் ஃபீடில் வரும் போஸ்ட்களை நீங்கள் விரும்பும் வகையில் இருப்பதை இன்ஸ்டாகிராம் சரியாக புரிந்து கொள்ளும். 


    கோப்பு படம்

    மேலும் இந்த வழிமுறை போஸ்ட்களை பகிர்ந்து கொண்டவர்களிடம் நீங்கள் எத்தனை முறை உரையாடி இருக்கிறீர்கள் என்பதை கமென்ட், லைக் மற்றும் இதர அ்மசங்களை கருத்தில் கொண்டு கண்டறிந்து கொள்கிறது. மூன்று முக்கிய அம்சங்களை கடந்து ஃப்ரீக்வன்சி, பின்பற்றுவது மற்றும் பயன்பாடு உள்ளிட்டவற்றை அடுத்தக்கட்ட முக்கிய அம்சங்களாக எடுத்துக் கொள்கிறது.

    குறிப்பிட்ட நபர்களை ஃபாளோ செய்யும் போது ஃப்ரீக்வன்சி அம்சம் நீங்கள் எத்தனை முறை அவர்களின் போஸ்ட்களை பார்க்கின்றீர்கள் என்பதையும், பயன்பாடு என்பது நீங்கள் எத்தனை நேரம் போஸ்ட்களில் செலவிடுகின்றீர்கள் என்பதை புரிந்து கொள்ளும்.

    மேலும் ஃபீட்களில் எதுபோன்ற போஸ்ட்கள் வரவேண்டும் என்பதை கட்டுப்படுத்தவில்லை என்றும், இன்ஸ்டா வாசிகள் விரும்பும் போஸ்டகள் மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் அம்சங்களை புரிந்து கொண்டு புகைப்படம் அல்லது வீடியோ என அனைத்து ஃபீட்களும் தெரியும் என இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.
    ×