என் மலர்
நீங்கள் தேடியது "Madurai girl molested"
- மைனர் பெண்ணை பலாத்காரம் செய்து 10 பவுன் தங்க நகையை ஏமாற்றி அபகரித்ததாக பயாஸ்கான் மற்றும் சதீஷ், சரவணக்குமார், முத்துலெட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
- மேலும் நகை அடகு கடையில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பு உள்ள 10 பவுன் நகை மீட்கப்பட்டது.
மதுரை:
மதுரை கே.புதூரை சேர்ந்த பயஸ்கான். இவர் மதுரையை சேர்ந்த சிறுமி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் நெருங்கி பழகி உள்ளார். இது நாளடைவில் காதலாக மலர்ந்தது. அதன் பிறகு பயஸ்கான் அந்த சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பயாஸ்கான் அந்த சிறுமியிடம், நாம் ஊரை விட்டு ஓடிப் போய் விடலாம். 10 பவுன் நகையுடன் வா என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய சிறுமி, தனது வீட்டில் இருந்த நகையை எடுத்துச் சென்று பயாஸ்கானிடம் ஒப்படைத்து உள்ளார். அதன் பிறகு அவர் தலைமறைவாகி விட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தனர். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பயாஸ்கானை பிடித்து விசாரணை நடத்தினார்கள். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.
சிறுமியிடம் வாங்கிய 10 பவுன் நகையை எப்படி பணமாக மாற்றுவது? என்பது தொடர்பாக பயஸ்கான் நண்பர்கள் சதீஷ், சரவணகுமாரிடம் ஆலோசனை நடத்தி உள்ளார்.
இதைத்தொடர்ந்து அந்த நகையை சரவணக்குமாரின் தாய் முத்துலெட்சுமி மூலம் கே.புதூர், தனியார் கடையில் அடமானம் வைப்பது என்று முடிவு செய்துள்ளனர். அதன்படி முத்துலட்சுமி 10 பவுன் தங்க நகையை அடமானம் வைத்து, ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் வாங்கி கொடுத்து உள்ளார். இதில் பயாஸ்கான் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை எடுத்து கொண்டு, சதீஷ்க்கு ரூ.20 ஆயிரம், சரவணக்குமாருக்கு ரூ.30 ஆயிரம், முத்துலெட்சுமிக்கு ரூ.50 ஆயிரம் பங்குபோட்டுக் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து மைனர் பெண்ணை பலாத்காரம் செய்து 10 பவுன் தங்க நகையை ஏமாற்றி அபகரித்ததாக பயாஸ்கான் மற்றும் சதீஷ், சரவணக்குமார், முத்துலெட்சுமி ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் நகை அடகு கடையில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பு உள்ள 10 பவுன் நகை மீட்கப்பட்டது.
மதுரை மாவட்டம், கடச்சனேந்தல் நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தார்.
அதனை திருப்பிக் கொடுப்பதற்காக சேகர் கடந்த 5 மாதத்துக்கு முன்பு சென்றார். அப்போது வீட்டில் 14 வயது சிறுமி மட்டும் தனியாக இருந்தார்.
சபலம் அடைந்த சேகர் கேக்கில் மயக்க மருந்து கலந்து சிறுமிக்கு கொடுத்தார். சிறுமி மயங்கியதும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டார்.
இதில் அந்த சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் தந்தை அப்பன்திருப்பதி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்குப் பதிவு செய்து சேகரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.