என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "Madurai husband suicide"
மதுரை:
மதுரை மாவட்டம் அச்சம்பட்டி காந்தி தெருவைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட பிரபாகரன், யாரிடமும் பேசாமல் சோகத்துடன் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பிரபாகரன் சம்பவத்தன்று நள்ளிரவு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக பிரபாகரனின் தந்தை மாயாண்டி அலங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை மாவட்டம் எஸ்.நாகலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முனியாண்டி (37) இவருக்கு பல நாட்களாக தீராத வயிற்று வலி தொல்லை இருந்தது
இதற்காக அவர் பல இடங்களில் மருத்துவம் பார்த்தார். ஆனாலும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த முனியாண்டி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக முனியாண்டியின் தந்தை சாப்டூர் போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். #suicide