என் மலர்
நீங்கள் தேடியது "Madurai jewelry arrest"
மதுரை:
மதுரை மாவட்டம், கருப்பாயூரணி மீனாட்சி கார்டன் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி இந்திரா பிரியதர்ஷினி (வயது 29). இவர் சம்பவத்தன்று மாலை குழந்தைகளுடன் டென்னிஸ் கிளப் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த மர்ம கும்பல் இந்திரா பிரியதர்ஷினி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது.
இது தொடர்பாக இந்திரா பிரியதர்ஷினி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் கல்மேடு அம்மையார் தெருவைச் சேர்ந்த கண்ணன் மகன் தமிழரசன் (19), புளியங்குளம் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பாண்டி மகன் வசந்தகுமார் (18) ஆகிய 2 பேர் பிடிபட்டனர்.
அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இந்திரா பிரியதர்ஷினியிடம் செயினை பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய ஆதீஸ்வரன் என்பரை தேடி வருகின்றனர்.