என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Maduravoyal"
போரூர்:
மதுரவாயல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செயின்ட் அந்தோணி தேவாலயம் உள்ளது. இங்கு பாதிரியாராக ஏசுராஜ் உள்ளார். நேற்று இரவு பிரார்த்தனை முடிந்ததும் தேவாலயத்தின் கதவுகளை மூடிவிட்டு பாதிரியார் ஏசுராஜ், அருகே உள்ள தனது அறைக்கு சென்றார்.
இந்தநிலையில் அதிகாலை 2 மணி அளவில் தேவாலயத்தின் உள்ளே இருந்து சத்தம் கேட்டு ஏசுராஜ் சென்றார். அப்போது அங்கிருந்த மர்ம வாலிபர் தப்பி ஓட்டம் பிடித்தார். தேவாலய கதவு பூட்டை உடைத்து புகுந்த கொள்ளையன் அங்கிருந்த 2 உண்டியல்களை உடைத்து பணத்தை அள்ளிச்சென்று இருப்பது தெரிந்தது.
போரூர்:
கோவையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25) டிரைவர். இவர் பழனியில் இருந்து மதுரவாயலுக்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை ஏற்றிக் கொண்டு லோடு வேனில் வந்து கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரவாயல் பைபாஸில் வந்தபோது கட்டுபாட்டை இழந்த லோடு வேன் திடீரென முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி டிரைவர் கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த கிளீனர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் லோடு வேனை ஓட்டிய போது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் கண்ணியப்பன் (வயது 60). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.
நேற்று மாலை தன் நண்பர் ஒருவருடன் காரில் ஊத்துக்கோட்டையில் உள்ள உறவினர்களை சந்திக்க வந்தார். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி புளி மூட்டைகளுடன் வந்த லாரி திடீரென மோதியது.
இதில் கண்ணியப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
கண்ணியப்பனுடன் வந்த அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தாராட்சியை சேர்ந்த நவீன், பிரவீன், வைதேகி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
போரூர்:
மதுரவாயல் கார்த்திகேயன் நகரை சேர்ந்தவர் ரஜினிகாந்தன். இவரது மனைவி பிரத்திமா. நேற்று மாலை அவர் அதே பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் தெருவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வநத் 2 வாலிபர்கள் பிரத்திமா அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்து சென்று விட்டனர். இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போரூர்:
பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் விதமாக தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று இரவு மதுரவாயல் பைபாஸ் சாலை அருகில் உள்ள ஓடமாநகரில் கோயம்பேடு உதவி கமிஷனர் ஜெயராமன், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் கட்டுகட்டாக பணம் இருந்தது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் காரில் அந்த வழியாக வந்த 4பேரிடம் விசாரணை நடத்தியதில் காரில் ரூ. 78 லட்சம் பணம் உள்ளதாகவும் வங்கி ஏடிஎம் மையங்களுக்கு பணம் நிரப்புவதற்காக கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் காருடன் பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் ஆலப்பாக்கம் தாசில்தார் அலுவலகம் கொண்டு சென்று சீல் வைத்தனர். பின்னர் ரூ.78 லட்சம் பூந்தமல்லி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. #LokSabhaElections2019
போரூர்:
மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம் மெயின் ரோட்டில் டாஸ்மாக் மதுபான கடை மற்றும் பார் செயல்பட்டு வருகிறது.
இங்கு கடந்த ஒரு வருடமாக தங்கி வேலை பார்த்து வந்தவர் மகேந்திரன் (வயது60).
நேற்று முன்தினம் மதியம் மதுக்கடை அருகே உள்ள வாகன நிறுத்தும் இடத்தில் மகேந்திரன் இறந்து கிடந்தார். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை நடத்தினர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில் மகேந்திரனின் தலையில் பலமாக தாக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. இதையடுத்து பார் சூப்பர்வைசர் ராஜாவிடம் விசாரித்தனர்.
அவர் போலீசாரிடம் கூறும்போது, “நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற மகேந்திரன் வெகு நேரம் கழித்து தான் வேலைக்கு வந்தார். அப்போது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரம் அடைந்த நான் மகேந்திரனை பிடித்து தள்ளினேன். குடிபோதையில் இருந்த அவர் தடுமாறி அருகில் இருந்த இரும்பு கேட் மீது மோதி கீழே விழுந்து இறந்து விட்டார். உடனே அவரது உடலை வாகன நிறுத்தும் இடத்தில் கொண்டு வந்து படுக்க வைத்து விட்டு சென்று விட்டேன்” என்றார்.
இதையடுத்து சூப்பர்வைசர் ராஜாவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போரூர்:
மதுரவாயல் பாரதி நகர் 3-வது தெருவில் வசித்து வருபவர் நவின்குமார். பல் டாக்டர்.
இவர் ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகரில் சொந்தமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். நவின்குமார் சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் தனது உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு சென்றார்.
நேற்று வீடு திரும்பிய நவின்குமார் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்து இருந்த 25சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசில் நவின்குமார் புகார் அளித்தார். குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
சென்னை:
நெற்குன்றம் முனியப்பா நகரை சேர்ந்தவர் மணி வண்ணன். ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 9-ந் தேதி வானகரத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு ஆட்டோவை நிறுத்தி விட்டு டிபன் வாங்க சென்றார். திரும்பி வந்த போது ஆட்டோவை காணவில்லை. மர்ம நபர் ஆட்டோவை திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக மதுரவாயல் போலீசார் வழக்குப் பதிவு செய்து பழைய குற்றவாளியான கடம்பத்தூரை சேர்ந்த தியாகராஜனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
குரோம்பேட்டையில் மோட்டார் சைக்கிளை திருடியதாக நாமக்கல்லை சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
மதுரவாயல் அடுத்த வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இருசக்கர உதிரி பாகங்கள் கடை, டிஜிட்டல் பேனர் கடை மற்றும் ஒரு பெட்டி கடை அடுத்தடுத்து உள்ளன.
காலையில் ஊழியர்கள் கடையை திறக்க வந்த போது 3 கடைகளின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது கடைகளில் இருந்த ரொக்கப் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை போயிருந்தது. 3 கடைகளிலும் மொத்தம் ரூ. 48 ஆயிரத்தை மர்ம நபர்கள் சுருட்டி சென்றனர்.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் நடமாட்டம் மிகுந்த வானகரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்த கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போரூர்:
அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவர் கடந்த 23-ந்தேதி இரவு துபாய் செல்லும் நண்பரை வழியனுப்ப சென்னை வந்தார்.
இரவு 11 மணி அளவில் ஆலப்பாக்கம் பெருமாள் கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த போது 3 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தி 2 சவரன் செயினை பறித்து தப்பி சென்றனர்.
இதுதொடர்பாக மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் அதே பகுதி ஸ்ரீதேவி நகரைச் சேர்ந்த கார்த்திக், சூர்யா, அவர்களது மற்றொரு நண்பர் ஆகியோர் சேர்ந்து ஜெகதீஸ்வரனை கத்தியால் குத்தி செயினை பறித்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கத்தி, செல்போன், 2 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்பி ஓடிய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர். கைதான கார்த்திக் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் கைதாகி சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேனாம்பேட்டையில் கஜேந்திரன், சங்கரன், கந்தசாமி ஆகியோரிடம் அடுத்தடுத்து மர்ம நபர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நந்தனத்தை சேர்ந்த குள்ளுபிரதீப், நிர்மல், கண்ணகிநகர் சீனிவாசன், ராஜா ஆகிய 4 பேரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
போரூர்:
மதுரவாயல் ராஜீவ்காந்தி நகரில் உள்ள மதுபான பாரில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சத்யராஜ் (வயது30), தர்மராஜ்(32) ஆகியோர் வேலைபார்த்து வந்தனர்.
நண்பர்களான இருவரும் கடந்த 6ந் தேதி தீபாவளியன்று இரவு ஒன்றாக மது அருந்திவிட்டு பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.
அப்போது இருவருக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தர்மராஜ் பீர் பாட்டிலால் சத்யராஜ் தலையில் அடித்தார்.
இதில் பலத்த காயமடைந்த சத்யராஜ் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் தையல் போட்டு விட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி தலையில் வலியால் துடித்த சத்யராஜை உறவினர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவான பார் ஊழியர் தர்மராஜை தேடி வருகின்றார்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து வேலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ்களில் சென்னை புறநகர் பகுதியில் இருந்து கோயம்பேடுக்கு பயணிகளை ஏற்றி வருகிறார்கள்.
வெளியூர் பஸ்களில் தூரத்தின் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்கள் பூந்தமல்லியில் இருந்து போரூர், கிண்டி வழியாக இயக்கப்பட்டன.
தற்போது மதுரவாயல் வழியாக பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு செல்கின்றன. முன்பு போரூர், கிண்டி வழியாக 24 கிலோ மீட்டர் தூரத்தில் பஸ்கள் இயக்கப்பட்டன.
மெட்ரோ ரெயில் பணி மற்றும் போரூர் மேம்பாலம் பணி காரணமாக மாற்று பாதையான மதுரவாயல் வழியாக 16 கிலோ மீட்டர் தூரத்தில் இயக்கப்படுகின்றன. அப்பணிகள் முடிந்தாலும் தற்போதும் பஸ்கள் மதுரவாயல் வழியாகவே இயக்கப்படுகின்றன.
தூரத்தின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்படுவதால் பூந்தமல்லியில் இருந்து கோயம்பேடுக்கு மதுரவாயல் வழியாக செல்லும் வெளியூர் பஸ்சில் ரூ.13 கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் ரூ.19 கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று பயணிகள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதுகுறித்து பயணி ஒருவர் கூறும்போது, “வெளியூரில் இருந்து சென்னைக்குள் வரும் பஸ்களில் தூரம் குறைக்கப்பட்டாலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறார்கள். மதுரவாயல் வழியாக செல்லும் பஸ் குறைந்த தூரத்தில் செல்வதால் கட்டணம் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்வது இல்லை. ரூ.19 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில பஸ்களில் ரூ.24 கட்டணம் வசூல் செய்கிறார்கள்” என்றார்.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “கிண்டி வழியாக பஸ்களை இயக்க போக்குவரத்து போலீசார் அனுமதி அளிப்பது இல்லை. போலீசார் அனுமதி கொடுத்தால் சென்னை நகர சாலைக்குள் பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம்” என்றார்.
தினமும் கோயம்பேட்டில் இருந்து வெளியூருக்கு 500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு மாதமும் 50 லட்சத்துக்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. #Buses
மதுரவாயல், துண்டலம் தாஸ் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ். கார்பெண்டர். கடந்த 31-ந்தேதி அவர் செட்டியார் அகரம் கீரை தோட்டம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த 5பேர் கும்பலில் ஒருவன் சதிஷிடம் சென்று ஒரு போன் செய்துவிட்டு தருவதாக கூறி செல்போனை கேட்டார். உடனே சதிஷ் தனது செல் போனை அந்த நபரிடம் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் கழித்து செல்போனை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை தடுக்க முயன்ற சதீசை அவர்கள் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.
இதில் முதுகு, மூக்கில் படுகாயமடைந்த சதிஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தப்பி சென்ற கும்பலை தேடி வந்தனர்.
இந்தநிலையில் வழிப்பறி கும்பல் மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த சிவா, விஷ்ணு, கிரிதரன், ராஜேஷ், குன்றத்தூர் புதுவட்டாரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து மதுரவாயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிந்தது.
அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், திருட்டிற்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்