search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "magudeswarar temple"

    • கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
    • இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயண பெருமாள் கோவில் உண்டியல் திறப்பு நாமக்கல் மாவட்ட உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.

    ஆய்வாளர் தேன்மொழி முன்னிலையில் 20 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டன. இவை அனைத்தும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்யப்பட்டன.

    திருச்சி ஸ்ரீரங்கம் மகளிர் குழுவினர், சென்னிமலை மகளிர் குழுவினர், பக்தர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் ரூ.13 லட்சத்து 3 ஆயிரத்து 636 ரொக்க பணம், 45 கிராம் தங்கம், 82 கிராம் வெள்ளி உள்ளிட்ட காணிக்கையை பக்தர்கள் செலுத்திருந்தனர்.

    • கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொங்கியது.
    • இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    கொடுமுடி:

    கொடுமுடி மகுடேசுவரர் வீர நாராயணப்பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா வெகு விமரிசையுடன் தொங்கியது.

    இதனையொட்டி வீரநாராயணப் பெருமாள் கோவில் வளாகத்தில் காலையில் ஸ்ரீ சுதர்சன் ஹோமம், ஸ்ரீ லட்சுமி குபேர ஹோமம் நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா தொடங்கியது.

    கோவில் தலைமை பட்டாச்சாரியார் ஸ்ரீதர் மற்றும் ராஜா ஆகியோர் தலைமையில் வேத விற்பன்னர்களை கொண்டு லட்சார்சனை நடத்தப்பட்டது. வருகின்ற 1-ந் தேதி (திங்கட்கிழமை) ஆடிப்பூரம் அன்று காலை லட்சார்ச்சனை விழா நிறைவு பெறுகின்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சுகுமார் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    சுத்தூர் கிராமத்தில் உள்ள மாதேஸ்வரர் கோவிலில் ஆண்டு திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா வருணா தொகுதிக்கு உட்பட்ட சுத்தூர் கிராமத்தில் அமைந்திருக்கும் மாதேஸ்வரர் கோவிலில், சுத்தூர் மடம் சார்பில் ஆண்டுத்திருவிழா நடந்து வருகிறது. விழாவின் 3-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.

    தேரோட்டத்தை துமகூரு சித்தகங்கா மடாதிபதி சித்தலிங்க மகாசுவாமி, கொல்லாபுரத்தின் திகம்பர ஜெயின மடத்தின் லட்சுமி சேனா பட்டாரகா சுவாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். தேரில் மூலவரான மாதேஸ்வரர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    பக்தர்கள் வெள்ளத்தில் மாதேஸ்வரர் வீற்றிருந்த தேர் முதலில் வலம் வர, அதனைத்தொடர்ந்து ஆதிகுருசிவராத்திரீஸ்வரரின் உருவச்சிலைகள் அலங்கரிக்கப்பட்ட ரதங்களில் அணிவகுத்து வந்தன. தேரோட்டத்தை காண வந்த திரளான பக்தர்கள் கோவில் அருகே ஓடும் கபிலா ஆற்றில் புனித நீராடிவிட்டு பின்னர் தேரோட்டத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தேரோட்டத்தில் சாமனூர் சிவசங்கரப்பா, மண்டியா தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் சிவராமேகவுடா, மந்திரிகள் பண்டப்பா காசம்பூர், வெங்கடராவ் நாடகவுடா உள்பட பலர் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
    ×