search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahagathbandhan alliance"

    • பீகார் அரசியலில் பா.ஜ.க. உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார்.
    • ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

    பாட்னா:

    பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், ஆளுநரைச் சந்தித்து தனது முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.

    அதே நேரம், 160 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரினார். மெகா கூட்டணி மூலம் மீண்டும் பீகாரில் புதிய ஆட்சியை நிதீஷ்குமார் அமைக்க உள்ளார்.

    கவர்னருடனான சந்திப்புக்கு பிறகு நிதிஷ் குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியே வந்துள்ளேன். தனது கட்சியின் அனைத்து எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த முடிவு கட்சியின் முடிவு என கூறினார்.

    ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன.

    இதற்கிடையே, பீகாரில் மகாபந்தன் கூட்டணி கட்சிகளின் சட்டமன்ற குழு தலைவராக நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பீகாரில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரி நிதிஷ்குமார் மற்றும் தேஜஸ்விஆகியோர் ஆளுநரை சந்தித்தனர்.

    160 சட்டசபை உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு அழைக்கும்படியான கடிதத்தை அளித்தனர்.

    நிதிஷ்குமார் கூட்டணிக்கு ஜித்தன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சியும் ஆதரவு அளித்துள்ளது.

    ×