search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mahakaleshwar temple"

    • வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.
    • இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மத்திய பிரதேச மாநிலத்தின் உஜ்ஜைனில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவில். அப்பகுதியில் மிகவம் பிரபலமான இந்த கோவிலில் ரீல்ஸ் எடுப்பதை தடுத்த காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவத்தன்று மகாகாலேஸ்வரர் கோவிலில் தடை செய்யப்ட்ட பகுதியில் பெண்கள் ரீல்ஸ் எடுக்க முயன்றுள்ளனர். இதனை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமைடந்த பெண்கள் இருவரும் அங்கிருந்த வேறு சிலரும் காவலர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

    பாலக் மற்றும் பாரி என இரு பெண்கள் நடத்திய தாக்குதலில் மூன்று பெண் காவலர்கள் காயமுற்றனர். கோவிலில் பெண் காவலர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மஹாகல் காவல் நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படுகிறது.

    • ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.
    • மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.

    மகாகாலேஸ்வரர் கோவில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற இந்துக் கோவில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும்.

    சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும்.

    தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது. மகாகாலேஸ்வரர் கோவிலுக்கு மேலுள்ள கருவறைக்குள் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் முறையே கணேசர், பார்வதி, கார்த்திகேயன் ஆகிய கடவுளர் உள்ளனர்.

    தென்புறம் நந்தி சிலை உண்டு. மூன்றாவது தளத்தில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சிலையை வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். இக்கோவில் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

    • மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா கூறினார்.
    • இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தனர்.

    ஆஸ்திரேலிய அணிவுடனான 4-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள மஹாகாளேஷ்வர் கோயிலுக்குச் சென்றனர்.


    இருவரும் மற்ற பக்தர்களுடன் கோவிலுக்குள் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்த ஒரு நாள் கழித்து இன்று அவர்கள் கோயிலுக்கு சென்றுள்ளனர்.

    நாங்கள் பிரார்த்தனை செய்ய இங்கு வந்தோம். மஹாகாலேஷ்வர் கோவிலில் நல்ல தரிசனம் செய்தோம் என்று அனுஷ்கா ஷர்மா தெரிவித்துள்ளார்.


    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருவரும் தங்கள் மகள் வாமிகாவுடன் ரிஷிகேஷ் மற்றும் விருந்தாவனத்திற்கும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மார்ச் 9-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. 

    இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பிட் பத்ரா, மகாகாளேஸ்வரர் கோவிலுக்கு சென்ற ராகுல் காந்தியின் கோத்திரம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார். #SambitPatra #MahakaleshwarTemple #RahulGandhi #BJP #Congress
    போபால்:

    இந்துக்கள் அல்லாதோருக்கு அனுமதியில்லாத சோம்நாத் கோயிலுக்கு கடந்த ஆண்டு ராகுல் காந்தி சென்றபோது, அவர் பூணூல் அணிந்த சிவபக்தர் என விளக்கமளிக்கப்பட்டிருந்தது.

    தற்போது மத்தியப் பிரதேச சட்டமன்ற தேர்தலுக்காக அம்மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்த ராகுல் காந்தி உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். இதை இந்தூரில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியின்போது பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா சுட்டிக்காட்டினார்.



    அப்போது, சோம்நாத் கோயிலுக்கு ராகுல் சென்றதை நினைவுகூர்ந்த சம்பித் பத்ரா, ராகுல் பூணூல் அணிந்திருக்கிறார் என்றால் அவரது கோத்திரம் என்ன? என்றும், அவர் அணிந்திருக்கும் பூணூல் என்ன வகை? என்றும் கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பியுள்ளார். #SambitPatra #MahakaleshwarTemple #RahulGandhi #BJP #Congress
    மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மகா காளீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
    உஜ்ஜைன்:

    மத்திய பிரதேச மாநிலத்தில் வரும் நவம்பர் 28-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 15 ஆண்டுகளாக முதல்-மந்திரி சவுகான் தலைமையில் மத்தியப் பிரதேசத்தில் பா.ஜனதா ஆட்சியில் இருந்து வருகிறது. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை பிடிக்க காங்கிரசும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனன.


    இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மத்திய பிரதேசத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இன்று காலை உஜ்ஜைன் நகருக்கு வந்த ராகுல் காந்தி, புகழ்பெற்ற மகா காளீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் மாநில காங்கிரஸ் தலைவர் கமல் நாத், ஜோதிராத்தியா சிந்தியா ஆகியோரும் உடன் சென்றனர்.


    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று உஜ்ஜைன் மற்றும் தாபுவா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். பிரச்சார பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.

    தேர்தல் நெருங்கும் சமயத்தில் பிரதமர் மோடி, மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. #MadhyaPradeshElections #MahakaleshwarTemple #RahulGandhi
    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் பூ வியாபாரத்தில் ஏற்பட்ட மோதலில் பெண்கள் உட்பட 4 பேரை வாலிபர் கொடூரமாக தாக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. #Ujjain
    போபால்:

    மத்தியப்பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் நகரில் உள்ள மகாகாளேஷ்வர் கோவில் உள்ளது. இந்த கோவில் வாசலில் இரண்டு வாலிபர்கள் பூ வியாபாரம் செய்தனர். வியாபாரத்தில் இருவருக்கும் போட்டி நிலவி வந்தது.

    இந்நிலையில், நேற்று ஏற்பட்ட மோதலில் இருவரும் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கி கொண்டனர். ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் கோபமடைந்த வாலிபர் பெண்கள் என்று கூட பாராமல் கட்டையை கொண்டு தாக்கினார். யார் வந்து தடுத்தாலும் அவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் சண்டையிட்ட வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. #Ujjain
    ×