search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharaja Trophy KSCA T20"

    • மகாராஜா டிராபி என்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் இந்திய உள்நாட்டு டி20 போட்டியாகும்.
    • சமித் டிராவிட்டை மைசூர் வாரியர்ஸ் அணி 50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தது.

    மகாராஜா டிராபி KSCA T20 என்பது கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் இந்திய உள்நாட்டு டி20 போட்டியாகும். லீக் போட்டியில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பல்வேறு மண்டலங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆறு அணிகள் போட்டியிடுகின்றன.

    குல்பர்கா மிஸ்டிக்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், ஹூப்ளி டைகர்ஸ், மைசூர் வாரியர்ஸ், மங்களூர் டிராகன்கள், ஷிவமொக்கா சிங்கங்கள் ஆகிய அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.

    இந்த தொடருக்கான ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகனான சமித் டிராவிட்டை மைசூர் வாரியர்ஸ் அணி 50 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தது. 

    18 வயதான இவர் ஆல்ரவுண்டராக திகழ்கிறார். வலது கை வேகப்பந்து வீச்சாளர் மட்டும் மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடுகிறார். இவர் கருண் நாயர் தலைமையில் மைசூர் அணிக்காக விளையாட உள்ளார். மைசூரு அணியில், கே.கௌதம் மற்றும் ஜே.சுசித் போன்ற ஆல்ரவுண்டர்களை முறையே ரூ.7.4 லட்சத்துக்கும், ரூ.4.8 லட்சத்துக்கும் ஏலம் எடுக்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ரூ. 1 லட்சத்திற்கு ஏலம் போனார்.

    2023-24 கூச் பெஹார் டிராபியை வென்ற கர்நாடகா 19 வயதுக்குட்பட்ட அணியில் சமித் டிராவிட் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×