என் மலர்
மகேந்திரசிங் தோனி | Mahendra Singh Dhoni (MS Dhoni) news updates in Tamil
- சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான்.
- பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள்.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோல்வி தொடர்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 103 ரன்னில் சுருண்டு 8 விக்கெட் வித்தியாசத்தில் மிகவும் மோசமாக தோற்றது.
இந்த மோசமான தோல்வியால் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி மிகுந்த ஏமாற்றம் அடைந்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-
சில இரவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்காது, இதுவும் அப்படித்தான். நாம் அடிப்படைகளுக்குத் திரும்ப வேண்டும், நாம் எங்கு தடுமாறுகிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், சவாலை நேரடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த ஆட்டத்தில் போதுமான ரன்னை எடுக்கவில்லை.
பார்ட்னர்ஷிப் சரியாக அமையவில்லை. தொடக்க வீரர்கள் தரமானவா்கள். அவர்கள் சோர்வடைய தேவையில்லை. தொடக்கத்திலேயே விக்கெட் சரிவதால் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களால் அதை நிவர்த்தி செய்ய முடியவில்லை. இந்த தோல்வி எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும் விரக்தி அடையாமல் இருப்பது முக்கியம். போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை ஒப்புக்கொள்கிறேன்.
இவ்வாறு தோனி கூறி உள்ளார்.
- சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
- பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.
இதனை தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் சி.எஸ்.கே. கேப்டன் எம்.எஸ். தோனி எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சுனில் நரைன் வீசிய 16வது ஓவரின் மூன்றாவது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். நடுவரின் முடிவை தோனி மேல்முறையீடு செய்தார். அப்போது பந்து பேட்டை கடக்கும்போது சிறிய அல்ட்ராஎட்ஜ் ஸ்பைக் வந்தது. இதனை நீண்ட நேரம் பார்த்த மூன்றாவது நடுவர் இறுதியாக அவுட் கொடுத்தார்.
தோனி ரன்களை குவிக்காமல் உடனடியாக ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
- பேட்டிங்கின்போது நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை.
- எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை என்றார் தோனி.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. நிறைய சவால்கள் இருக்கிறது. அதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்.
நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பேட்டிங்கின்போது பந்து கொஞ்சம் நின்றுதான் வந்தது. நாங்கள் பவுலிங் செய்கையில் அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை.
நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம். எங்களது அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.
எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா பந்துளையும் சிக்சர் அடிக்கக் கூடியவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் திறன்வாய்ந்த தரமான பேட்டர்கள். ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும்.
பவர்பிளேவில் 60 ரன்கள் அடிக்கவேண்டும் என்று நினைத்து ஆடக்கூடாது. ஏனென்றால் பவர்பிளேவில் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்துவிட்டால் பின்னர் நடு வரிசை வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும். இதன்மூலம் பின்வரிசை வீரர்களால் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது என தெரிவித்தார்.
- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் ராயுடு விளையாடியுள்ளார்.
- 2023-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை அம்பதி ராயுடு பெற்றுக்கொள்ளுமாறு தோனி கேட்டுக்கொண்டார்.
ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்தில் உள்ளது. அடுத்த 3 மூன்று இடங்கள் முறையே டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் ஆகிய அணிகள் உள்ளன.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை அணி 9-வது இடத்தில் உள்ளன. சிஎஸ்கே பேட்டிங் கவலையளிக்க கூடிய வகையில் உள்ளது. கடைசி நேரத்தில் வந்து ஆட்டத்தை முடித்து கொடுக்கும் தோனி கடந்த சில போட்டிகளில் அதனை செய்யமுடியவில்லை. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆறு சீசன்களில் விளையாடிய ராயுடு, அணிக்கும் தோனிக்கும் தொடர்ந்து ஆதரவளிப்பதாக சமூக ஊடகங்களில் ஏராளமான எதிர்மறையான செய்திகள் பரவி வந்தன.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன், இருப்பேன் என சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பதி ராயுடு கூறியுள்ளார்.
இது குறித்து ராயுடு கூறியதாவது:-
நான் ஒரு தோனி ரசிகராக இருந்தேன். தோனி ரசிகராக இருந்து கொண்டிருக்கிறேன். எப்போதும் தோனி ரசிகராகவே இருப்பேன். யார் என்ன சொன்னாலும், என்ன நினைத்தாலும் அது பற்றி கவலையில்லை. இதனால் ஒரு சதவீதம் கூட மாற்றம் நிகழப்போவதில்லை.
எனவே தயவுசெய்து பணம் செலுத்திய பி.ஆர்-களில் பணத்தை செலவிடுவதை நிறுத்திவிட்டு, அதை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்குங்கள். பல ஏழை மக்கள் பயனடையலாம்.
என அம்பதி ராயுடு கூறினார்.
- தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.
- இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் 4 தோல்வி ஒரு வெற்றியை பெற்று தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது.
இந்நிலையில் சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம் என அந்த அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சிஎஸ்கேவின் செயல்பாடுகளில் நிச்சயம் எனக்கு ஆச்சரியம் தான் தருகிறது. ஏனென்றால் ஒவ்வொரு ஏலத்தின் முடிவிலும் சிஎஸ்கே அணி பலமான வீரர்களை தேர்வு செய்து, தங்களுக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முடிவு செய்து பிளேயிங் லெவனை தயார் செய்வார்கள்.
பேட்டிங்காக இருந்தாலும் சரி, பந்துவீச்சாக இருந்தாலும் சரி ஆனால் தற்போது சிஎஸ்கே அணி தடுமாறுவதை பார்க்கும் போது இது சிஎஸ்கே போல் தெரியவில்லை. நான் சிஎஸ்கே அணியில் இருந்த போது தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங் ஆகியோர் வீரர்களிடம் உங்களுடைய பணி இதுதான் என்று ஒருவருக்கு ஒவ்வொரு ரோலை கொடுத்து விடுவார்கள். அதற்கு தகுந்தார் போல் நாங்கள் தயாராவோம்.
ஆனால் இந்த ஏலம் முடிந்த பிறகும் சிஎஸ்கே அணியின் சில குறைகள் இருக்கிறது. அதை நிவர்த்தி செய்ய சிஎஸ்கே போராடி வருகிறது.
சிஎஸ்கே அணி அவ்வளவுதான் என்று யாரும் நினைத்து விட வேண்டாம். ஏனென்றால் அவர்களுக்கு எப்படி வெற்றி பெற வேண்டும் என்று நன்றாக தெரியும். அது பிளெமிங் ஆக இருக்கட்டும், தோனியாக இருக்கட்டும் ஒட்டுமொத்த அணியுமே வெற்றி பாதைக்கு எப்படி திரும்புவது என்பதை நன்கு அறிந்திருப்பார்கள். தோனி இன்னும் நன்றாக விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். இதைப் போன்று இன்னிங்சை பேட்டிங்கால் அபாரமாக முடிக்கும் திறனும் அவருக்கு இருக்கின்றது.
என்று வாட்சன் கூறியுள்ளார்.
- ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதியாகும்.
- 2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை.
சென்னை:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி கடந்த சில போட்டிகளில் அதிரடியாக விளையாட முடியாமல் தவித்து வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என பரவலாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் தோனி 35 வயதிலேயே ஓய்வு பெற்றுருக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னார்ள் வீரர் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

தோனி எப்போதோ ஓய்வு பெற்றிருக்க வேண்டும். விக்கெட் கீப்பருடைய வயது 35 தான். அதற்கு நானே ஒரு உதாரணம். நான் ஒரு வீரராக விளையாடும்போது உச்சகட்டத்தில் விளையாடவில்லை என்றால் எனது மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்திக்கும். நீங்கள் 15 ஆண்டுகாலம் சிறப்பாக விளையாடியிருந்தாலும் இளம் தலைமுறையினர் உங்களைப் பார்த்து ஈர்க்கப்பட மாட்டார்கள்.
2019 ஒருநாள் போட்டி உலகக்கோப்பையில் தோனியால் அணிக்கு எந்த நன்மையும் நடக்கவில்லை. அவர்கள் அப்போதே அதை புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
ஒரு வீரருக்காக ஒரு அணியை விடுவது என்பது இந்த விளையாட்டுக்கு செய்யும் அநீதியாகும். அப்படி செய்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக வேண்டி இருக்கும். நான் இரண்டு, மூன்று சிஎஸ்கே போட்டிகளை பார்த்தேன். தோனி வரும்போது மிகப் பெரிய சத்தம் எழுந்தது.
ஆனால் சிஎஸ்கே அணிக்கு இப்போது புள்ளிகள் தான் முக்கியம். அவர்கள் (சிஎஸ்கே) புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு வீரர்களால் தான் இது நடக்கிறது என்றால் நீங்கள் இந்த நேரத்தில் என்ன அவசியம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
என ரஷீத் லத்தீப் கூறினார்.
- ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.
- தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் ஒரு வெற்றி, 3 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.
இதில் எம்.எஸ்.தோனி இதுவரை ஆடிய 4 போட்டிகளிலும் அணியின் வெற்றிக்காக அதிரடியாக விளையாடவில்லை என்ற விமர்சனம் உள்ளது. இதையடுத்து தோனி ஓய்வுபெற வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் தோனி ஓய்வுபெற வேண்டும் என நேரடியாக தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக சேஸிங் செய்ய வேண்டிய சூழ்நிலையில் தோனி மிகவும் நிதானமாக ஆடி வந்தார். அப்போது வர்ணனை செய்து கொண்டிருந்த மேத்யூ ஹைடன், "
இதுதொடர்பாக மேத்யூ ஹைடன் கூறுகையில், இந்தப் போட்டிக்குப் பிறகு தோனி வர்ணனையாளர்கள் குழுவுடன் இணைய வேண்டும். அவர் கிரிக்கெட்டை தொலைத்து விட்டார். இனி அவ்வளவுதான். இந்த உண்மையை அவர் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலக வேண்டிய காலம் எப்போதோ வந்துவிட்டது என தெரிவித்தார்.
ஹைடனின் இந்த விமர்சனம் தோனி ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 2008 ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது.
- எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான எம்.எஸ். தோனி தனது ஓய்வு வதந்திகள் குறித்து மனம் திறந்துள்ளார்.
நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் தோனியின் பெற்றோர் வருகை தந்திருந்தனர். இதுவரை, அதாவது (2008) ஐபிஎல் தொடங்கியதில் இருந்து தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது. இந்நிலையில் நேற்று அவர்கள் வந்திருந்ததால் தோனி தனது ஐபிஎல் லீக் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் சமீபத்திய பாட்காஸ்டில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த தோனி, "இல்லை, இப்போதைக்கு இல்லை. நான் இன்னும் ஐபிஎல் விளையாடுகிறேன். நான் அதை மிகவும் எளிமையாக எடுத்துக்கொள்கிறேன். நான் அதை ஒரு வருடத்திற்கு ஒரு முறை செய்கிறேன்.
எனக்கு 43 வயது, ஐபிஎல் 2025 முடிவதற்குள், எனக்கு 44 வயது ஆகியிருக்கும். எனவே அதன் பிறகு நான் விளையாடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய எனக்கு 10 மாதங்கள் உள்ளன. ஆனால் முடிவு செய்வது நான் அல்ல, என் உடல்தான் முடிவு செய்கிறது. எனவே, இன்னும் ஒரு வருடம் இருக்கிறது, அதன் பிறகு பார்ப்போம்" என்று தெரிவித்தார்.
- சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் பார்த்தனர்.
- முதன்முறையாக சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்ததால் எம்.எஸ். தோனி ஓய்வை முடிவை அறிவிக்கலாம் எனத் தகவல் பரவியது.
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற போட்டியை எம்.எஸ். தோனியின் பெற்றோர் கண்டுகளித்தனர். 2008ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கியதில் இருந்து, இன்று முதன்முறையாக அவரது பெற்றோர்கள் போட்டியை பார்க்க வந்தனர்.
ஒருவேளை எம்.எஸ். தோனி இன்று ஓய்வு குறித்த முடிவை அறிவிக்கலாம். இதனால்தான் பெற்றோர்கள் அவரது கடைசி போட்டியை பார்க்க வந்துள்ளனர் எனச் செய்திகள் சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியது. ஆனால் எம்.எஸ். தோனி ஓய்வு குறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் சிஎஸ்கே அணி ஆலோசகர் ஸ்டீபன் பிளமிங் இது தொடர்பாக கூறுகையில் "எம்.எஸ். டோனி இன்னும் வலிமையாக சென்று கொண்டிருக்கிறார். இப்போதெல்லாம் எம்.எஸ். தோனியிடம் அவருடைய எதிர்காலம் குறித்து கேட்பதில்லை" என்றார்.
இதனால் எம்.எஸ். தோனி இந்த தொடர் முழுவதும் விளையாடுவார். டெல்லிக்கு எதிராக இன்று கடைசி வரை களத்தில் நின்று 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சருடன் 30 ரன்கள் அடித்தார்.
- எம்.எஸ். தோனியின் குடும்பம் ஆட்டத்தை பார்த்து வருகின்றனர்.
- முதன்முறையாக சேப்பாக்கத்திற்கு தோனியின் பெற்றோர் வருகை தந்துள்ளது ரசிகர்களிடம் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை காண எம்.எஸ். தோனியும் குடும்பம் வருகை தந்துள்ளது.
எம்.எஸ். தோனியின் பெற்றோர் போட்டியை கண்டுகளித்து வருகின்றனர். அதேபோல் அவரது மனைவி மற்றும் மகளும் போட்டியை ரசித்து வருகின்றனர்.
எம்.எஸ். தோனியால் முந்தைய காலங்களை போன்று சிறப்பாக விளையாட முடியவில்லை என்ற விமர்சனம் சிஎஸ்கே ரசிகர்களிடம் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே டோனியால் 10 ஓவர்கள் நிலைத்து நின்று விளையாட முடியாது என சிஎஸ்கே ஆலோசகர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இதுவரை, அதாவது (2008) ஐபிஎல் தொடங்கியதில் இருந்து எம்.எஸ். தோனியின் பெற்றோர் சென்னை சேப்பாக்கம் வந்து போட்டியை பார்த்தது கிடையாது. இன்றைய டெல்லியை பார்க்க வந்துள்ளனர். இதனால் எம்.எஸ். தோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என சமூக வலைத்தங்களில் தகவல் தீயாக பரவி வருகிறது.
இன்றைய போட்டியில் 5 விக்கெட்டுகளை சிஎஸ்கே இழந்த நிலையில், எம்.எஸ். தோனி பேட்டிங் செய்ய களம் இறங்கியுள்ளார்.
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
- சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கேப்டனாக களம் இறங்கினார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியை தோனியின் பெற்றோர் கண்டுகளித்து வருகின்றனர். அவர்களுடன். தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவர்களது மகளும் போட்டியை கண்டு வருகின்றனர்.
சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர் முதல்முறையாக அவரது ஆட்டத்தை நேரில் காண வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
- எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார்.
ஐபிஎல் தொடரின் நாளைய 17-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகிறது. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாளைய போட்டியில் சென்னை அணியின் கேப்டனாக தோனி செயல்படுவார் என சிஎஸ்கே அணி பேட்டிங் பயிற்சியாளர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த போட்டியில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமாகி ருதுராஜ் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை அவர் நாளைய போட்டியில் விளையாடாவிட்டால், வழிநடத்த ஸ்டம்புகளுக்கு பின்னே ஒருவர் உள்ளார். எங்கள் அணியின் இளமையான விக்கெட் கீப்பர் கேப்டன்ஷிப் செய்வார். ஆனால் இது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை.
ஓப்பனிங் விளையாடும் த்ரிபாதி கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பார்.
என சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி கூறினார்.