என் மலர்
நீங்கள் தேடியது "mahindra XUV700"
- AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரம் குறைந்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்கள் விலையை அதிரடியாக குறைத்துள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் XUV700 மாடலில் AX7, மற்றும் AX7 L என்ற 2 வேரியண்ட் கார்களின் விலைகள் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. AX7 வேரியண்ட் கார்களின் விலை ரூ.45 ஆயிரமும் AX7 L வேரியண்ட் கார்களின் விலை ரூ.75 ஆயிரமும் குறைந்துள்ளது.
ரூ.21.64 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.21.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ரூ.21.44 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 காரின் விலை ரூ.45,000 குறைக்கப்பட்டு ரூ.20.99 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ரூ.24.14 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 6 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.39 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ரூ.23.94 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் 7 இருக்கைகள் கொண்ட AX7 L காரின் விலை ரூ.75,000 குறைக்கப்பட்டு ரூ.23.19 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
- மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மாடலாக XUV700 அறிமுகம் செய்யப்பட்டது.
- இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் சில நகரங்களில் ஒரு ஆண்டு வரை அதிகரித்து இருக்கிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல் முன்பதிவில் 1.5 லட்சம் யூனிட்களை கடந்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் மஹிந்திரா XUV700 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய மஹிந்திரா XUV700 மாடலுக்கான முன்பதிவுகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் துவங்கியது.
தற்போது XUV700 மாடலுக்கான ஓபன் புக்கிங் 80 ஆயிரம் யூனிட்களாக இருக்கிறது. இந்த மாடலுக்கான காத்திருப்பு காலம் ஒரு வருடம் வரை நீண்டு இருக்கிறது. மஹிந்திரா XUV700 மாடலில் எல்இடி ஹெட்லேம்ப்கள், 189 இன்ச் அலாய் வீல்கள், பானரோமிக் சன்ரூப், டூயல் ஸ்கிரீன் செட்டப், 6/7 சீட்டர் ஆப்ஷன்கள், ஃபிளஷ் ஃபிட்டிங் டோர் ஹேண்டில்கள், ADAS அம்சங்கள், ஏர் பியூரிபையர், வயர்லெஸ் சார்ஜிங், எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக், கனெக்டெட் கார் அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் உள்ளன.

இந்திய சந்தையில் புதிய மஹிந்திரா XUV700 மாடல் MX, AX3, AX5 மற்றும் AX7 போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய மஹிந்திரா XUV700 மாடலின் விலை ரூ. 13 லட்சத்து 18 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. இந்த மாடல் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டர்போ டீசல் யூனிட் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் பெட்ரோல் என்ஜின் 197 ஹெச்.பி. பவர், 380 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
டீசல் என்ஜின் மேனுவல் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ஆட்டோமேடிக் வேரியண்ட் 182 ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பேஸ் வேரியண்ட்கள் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
- மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் XUV700 மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.
- புதிய XUV700 யூனிட்களில் பிழை கண்டறியப்பட்டு உள்ளது.
மஹிந்திரா நிறுவனம் தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ரிகால் நடவடிக்கை குறிப்பிட்ட வேரியண்ட்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா தனது XUV700 மாடல்களை ரிகால் செய்வது இதுவே முதல் முறை ஆகும்.
தற்போதைய தகவல்களின் படி ஆல் வீல் டிரைவ் வசதி கொண்ட மஹிந்திரா XUV700 டீசல் வேரியண்ட் மட்டுமே ரிகால் செய்யப்படுகிறது. மஹிந்திரா XUV700 AT AWD 7 STR மற்றும் AX 7 AT AWD லக்சரி பேக் 7 STR வேரியண்ட்கள் மட்டும் ரிகால் செய்யப்பட்டு இருக்கிறது. ரிகால் செய்யப்படும் மாடல்களில் என்ஜினை பின்புற ஆக்சிலுடன் இணைக்கும் ப்ரோபெல்லர் ஷாப்ட்-இல் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

பாதிக்கப்பட்ட யூனிட்களை பயன்படுத்துவோர் அருகாமையில் உள்ள சர்வீஸ் மையம் சென்று தங்களின் காரை சரி செய்து கொள்ள முடியும். இந்த பிரச்சினையில் எத்தனை மஹிந்திரா XUV700 யூனிட்கள் பாதிக்கப்பட்டு உள்ளன என்ற விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. இந்த பிரச்சினை காரணமாக இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிகிறது.
கடந்த மாதம் தான் மஹிந்திரா நிறுவனம் 30 ஆயிரம் மஹிந்திரா XUV700 யூனிட்களை வினியோகம் செய்தது. தற்போதைய சிப்செட் குறைபாடு காலக்கட்டத்தில் இத்தனை யூனிட்கள் ஒரே மாதத்தில் வினியோகம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இன்னும் 78 ஆயிரம் XUV700 யூனிட்களை வினியோகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் மஹிந்திரா நிறுவனம் இருக்கிறது.
