என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Major Dhyan Chand
நீங்கள் தேடியது "Major Dhyan Chand"
- தயான் சந்த் பிறந்த நாள் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது
- விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி
ஆக்கி போட்டியில் ஜாம்பவானாக திகழ்ந்த தயான் சந்த்-ன் பிறந்த நாள் இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியாவில் தேசிய விளையாட்டு தினம் கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி பிரதமர் மோடி, விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில் ''தேசிய விளையாட்டு தினத்தில், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள். நாட்டிற்கான உங்களுடைய பங்களிப்பால், இந்தியா பெருமையடைகிறது. பிறந்த நாள் தினத்தில் மேஜர் தயான் சந்திற்கு என மரியாதையை செலுத்துகிறேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹாக்கி போட்டி மூலம் வரலாற்றில் இடம்பிடித்த தயான் சந்தின் பிறந்த தினமான இன்று தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. #NationalSportsDay #MajorDhyanChand #PMModi
புதுடெல்லி:
இந்நிலையில், தேசிய விளையாட்டு தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ‘தேசிய விளையாட்டு தினத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். ஹாக்கி வீரர் மேஜர் தயான் சந்த் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துவோம். ஆரோக்கியமான இந்தியாவுக்காக விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவைக்கு முன்னுரிமை தரவேண்டும் என மக்களை கேட்டுக் கொள்கிறேன்.
![](https://img.maalaimalar.com/InlineImage/201808291028201329_1_asa._L_styvpf.jpg)
பல்வேறு விளையாட்டு போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்ற அனைவருக்கும் எனது வணக்கம். அவர்களின் கடின உழைப்பால் தான் நாம் பல்வேறு மைல்கற்களை எட்டிபிடிக்க முடிந்தது. விளையாட்டு துறை சகோதரர்களுக்கு இது சிறப்பான ஆண்டாக உள்ளது. ஆசிய விளயைாட்டு போட்டிகளிலும், காமன்வெல்த் போட்டியிலும் இந்திய தடகள வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக பங்காற்றி உள்ளனர்’ என்று பதிவிட்டுள்ளார்.
×
X