என் மலர்
நீங்கள் தேடியது "Makhaya Ntini"
- நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்யும் போது அவர் இன்னும் உத்வேகமடைந்து அபாரமாக செயல்படுவார்.
- மற்ற பேட்ஸ்மேன்களை வம்பிழுப்பது போல அவரிடம் நீங்கள் எதையும் செய்யாதீர்கள்.
இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந் தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலியை ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருப்பதே எதிரணி பந்து வீச்சாளர்களுக்கு நல்லது என முன்னாள் தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் மக்காயா நிடினி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒரு பவுலராக விராட் கோலியை பற்றி உங்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவெனில் அவரை திட்டி விடாதீர்கள். பொதுவாகவே எந்த எதிரணி வீரராவது நம்மை சீண்ட மாட்டார்களா அதனால் நாம் வெறித்தனமாக செயல்பட மாட்டோமா என்று அவர் பசியுடன் காத்திருப்பார்.
ஏனெனில் எதிரணியினர் தம்மை சீண்டாமல் இருந்தால் அது தான் அவருக்கு கடுப்பாக இருக்கும். எனவே அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள். அப்படி செய்தால் அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிப்பீர்கள். மாறாக ஸ்லெட்ஜிங் செய்யாமல் விட்டால் அவரே அலுப்பு தட்டி தவறு செய்வார். குறிப்பாக தென் ஆப்பிரிக்க பவுலர்களுக்கு நான் மீண்டும் சொல்கிறேன் அவரை ஸ்லெட்ஜிங் செய்யாதீர்கள்.
ஏனெனில் நீங்கள் ஸ்லெட்ஜிங் செய்யும் போது அவர் இன்னும் உத்வேகமடைந்து அபாரமாக செயல்படுவார். எனவே அவருக்கு எதிராக அமைதியாக இருங்கள். மற்ற பேட்ஸ்மேன்களை வம்பிழுப்பது போல அவரிடம் நீங்கள் எதையும் செய்யாதீர்கள். மாறாக அமைதியாக இருந்து அவருக்கு அலுப்பு தட்டுவதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துங்கள். அதுவே அவரை நீங்கள் அவுட் செய்வதற்கான சிறந்த வழியாகும்
இவ்வாறு அவர் கூறினார்.
- வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும்.
- தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா மோதும் முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட்டில் 258, ஒருநாள் போட்டியில் 157, டி20-யில் 58 என ஆக மொத்தம் 500 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் அதிகமான போட்டிகளில் விளையாடினால் ரபாடா பல சாதனைகளை படைப்பார் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நிதினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிதினி கூறியதாவது:-
ரபடா மிகவும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவர் சிறப்பாக பந்து வீசினார். அவரால் 400 விக்கெட்டை தாண்டி சாதனைகளை படைக்க முடியும். ஆனால் வருடத்துக்கு 2 டெஸ்டில் விளையாடினால் அவரால் எப்படி 400 விக்கெட்டை தொட முடியும். தென்ஆப்பிரிக்க அணி அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தென்ஆப்பிரிக்க வீரர்களில் டெஸ்டில் அதிக விக்கெட் சாய்த்தவர் ஸ்டெய்ன். அவர் 439 விக்கெட் எடுத்துள்ளார். பொல்லாக் 421 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், நிதினி 390 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும் உள்ளார். ரபடா 285 விக்கெட்டுடன் 7-வது இடத்தில் உள்ளார். அவர் குறைவான டெஸ்ட்களில் விளையாடி உள்ளார்.
- சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
முன்னாள் நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் டி20 தொடர் வருகிற 22-ந் தேதி தொடங்கி மார்ச் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இத்தொடரில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. இந்த தொடர் நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானம், ராஜ்கோட்டின் நிரஞ்சன் ஷா மைதானம் மற்றும் ராய்ப்பூரின் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானம் ஆகிய இடங்களில் நடைபெற உள்ளன.
இந்நிலையில் இந்த தொடரில் முன்னாள் நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், மகாயா நிடினி மற்றும் மான்டி பனேசர் ஆகியோர் இந்த தொடரில் அவரவர் நாட்டுக்காக விளையாட உள்ளனர். இதனால் ரசிகர்கள் ஆவலுடன் இந்த தொடரை எதிர் நோக்கி உள்ளனர்.