என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Makkal Neethi Maiam"
- மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
- பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை.
பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன்.
இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணா அவர்களைப் பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை.
அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சமூக ஆர்வலரை லாரி ஏற்றிக் கொலை செய்தவர் மீது கடும் நடவடிக்கை வேண்டும்.
- கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கரூர் மாவட்டம் க.பரமத்தி, குப்பம் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜெகநாதன், சட்டவிரோத கல்குவாரிகள் தொடர்பாக கனிமவளத் துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, நடவடிக்கை எடுக்கச் செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த கல் குவாரி கும்பலால் அவர் லாரி ஏற்றிக் கொல்லப்பட்டுள்ளார். ஜெகநாதன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தப் படுபாதகச் செயலில் ஈடுபட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இயற்கை வளங்களைச் சூறையாடுதல், ஊழல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு எதிராகப் போராடும் சமூக ஆர்வலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது.
கரூர், கன்னியாகுமரி உள்பட தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாகச் செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு, கனிமவளக் கடத்தலை முற்றிலுமாகத் தடுக்க வேண்டும். அனுமதி இல்லாமலும்,அளவுக்கு அதிகமாகவும் கனிம வளங்கள் வெட்டி எடுப்பதை தடுத்து நிறுத்தி,இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாற்றம் தருவார்கள் என மக்கள் நம்பும், தனித்து நிற்கும் கட்சிகளான மநீம, நாம் தமிழர் கட்சி தலைவர்கள் கூட அவர்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்கள் பற்றிய தகவல்கள், திறமை பற்றிய விவரங்களை கூறாமல் தம்தம் பெருமைகளையே பேசுகிறார்கள்..
— Cheran Pandian (@cherandreams) April 11, 2019
தொகுதியில் பங்களிக்கப்போவது வேட்பாளர்கள்தானே..
இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.
‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்