search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malaysia Masters Badminton"

    • காலிறுதி ஆட்டத்தில் பிரணாய் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை 25-23, 18-21, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
    • அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொள்கிறார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பலப்பரீட்சை நடத்தினர்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பிரணாய் ஜப்பானின் கென்டா நிஷிமோட்டோவை 25-23, 18-21, 21-13 என்ற கணக்கில் தோற்கடித்தார். அரையிறுதியில் அவர் இந்தோனேஷியாவின் கிறிஸ்டியன் அடினாடாவை எதிர்கொள்கிறார்.

    முன்னதாக பிவி சிந்து அரையிறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார். அவர் அடுத்த அரையிறுதியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் கிரிகோரியா மரிஸ்கா துன்ஜங்கை எதிர்கொள்கிறார்.

    • மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது.
    • முதல் செட்டில் 21-17 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 9-21 என வென்றார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. பெண்கள் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினார்.

    இந்நிலையில் ஆண்களுக்கான அரையிறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த பிரனோய் மற்றும் ஹாங் காங் வீரரான லாங் அங்குஸ் மோதினர். முதல் செட்டில் 17-21 இழந்த பிரனோய் இரண்டாவது செட்டை 21-9 என வென்றார். மூன்றாவது செட்டை லாங் அங்குஸ் 21-17 என போராடி வென்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன் மூலம் இந்தியாவின் பதக்க கனவு தகர்ந்தது.

    • முதல் செட்டை இழந்த பிவி சிந்து இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
    • காலிறுதியில் சீன தைபே வீராங்கனையிடம் பிவி சிந்து தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது.

    இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதியில் சீன தைபே வீராங்கனை டாய் சூ யீங்கை எதிர்கொண்டார்.

    முதல் செட்டை 13-21 என்ற கணக்கில் இழந்த பிவி சிந்து, இரண்டாவது செட்டை 21-12 என வென்றார். சுதாரித்துக் கொண்ட டாய் சூ யீங் 3வது சுற்றை 21-12 என கைப்பற்றினார்.

    சுமார் 55 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் பிவி சிந்து 13-21, 21-12, 12-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • காலிறுதிக்கு முந்தைய சுற்றில், சீன வீராங்கனையை எளிதாக வீழ்த்தினார் பி.வி.சிந்து
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் பிரணாயிடம், சீன தைபே வீரர் தோல்வி அடைந்தார்.

    கோலாலம்பூர்:

    மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு முந்தைய போட்டியில் சீன வீராங்கனை ஜாங் யீ மன்னை எதிர்கொண்டார்.

    28 நிமிடங்களே நடந்த இந்த போட்டியில், தரவரிசையில் 32 வது இடத்தில் இருக்கும் சீனாவின் ஜாங் யி மன்னை 21-12, 21-10 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வீழ்த்தி பி.வி.சிந்து வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்தியாவின் பிரணாய் 21-19 21-16 என்ற கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை வீழ்த்தினார். காலிறுதியில் அவர் ஜப்பானின் காண்டா சுனேயாமாவை எதிர்கொள்கிறார்.

    ×