என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "mamtha banerjee"
- கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம்.
- மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பரில் இருந்து அமலாக்கத்துறை 8 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் அவற்றை நிராகரித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு, சோதனை வாரண்டுடன் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அங்கு கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ்ரிவாலின் கைது நடவடிக்கையை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து, மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி முதல்வர்கள் வேண்டுமென்றே குறிவைக்கப்பட்டு கைது செய்யப்படும்போது, சிபிஐ/இடி விசாரணையின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் தண்டனையின்றி தங்கள் முறைகேடுகளைத் தொடர அனுமதிக்கப்படுவது மூர்க்கத்தனமானது. குறிப்பாக பாஜகவுடன் இணைந்த பிறகு.
இது ஜனநாயகத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால்.
- இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக யாத்திரைக்கு வந்துள்ளனர்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காங்கிரசுக்கு எதிராக கடுமையான கருத்துகளை முன்வைத்தார்.
மேலும், இந்தியின் இதயப் பிரதேசமான மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரசுக்கு மம்தா சவால் விடுத்தார்.
காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி, மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் பயணித்ததையும் மம்தா விமர்சித்தார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி மேலும் கூறியதாவது:-
நாடு முழுவதும் பாஜக முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் 300 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்று நான் முன்மொழிந்தேன். ஆனால் அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டனர்.
இப்போது, இஸ்லாமிய வாக்காளர்களை தூண்டிவிடுவதற்காக அவர்கள் மாநிலத்திற்கு வந்துள்ளனர்.
காங்கிரஸ் 300 இடங்களில் போட்டியிட்டால் குறைந்தது 40 இடங்களையாவது பெறுவார்களா என்பது எனக்கு சந்தேகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்ய வலியுறுத்தல்.
- நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், மத்திய புலனாய்வு அமைப்புகளை தங்கள் வீடுகளுக்கு அனுப்புவோம் என்று பாஜக மக்களை அச்சுறுத்துவதாக குற்றம்சாட்டினார்.
மேலும், குடியுரிமை (திருத்தம்) சட்டம் அல்லது சிஏஏவில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் இருப்பதை உறுதி செய்யுமாறு கூச் பெஹாரில் உள்ள உள்ளூர் மக்களுக்கு, குறிப்பாக ராஜ்பன்ஷிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைமை அறிவுறுத்தியது.
இதுகுறித்து மம்தா பானர்ஜி கூறுகையில்," பாஜக, மத்திய அமைப்புகளை தேர்தலுக்கு பயன்படுத்துகிறது. பா.ஜ.க கட்சிக்கு வாக்களிக்காவிட்டால், அமலாக்க இயக்குநரகம் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஆகியோரை தங்கள் வீட்டிற்கு அனுப்புவோம் என்று தொலைபேசியில் மக்களை மிரட்டுகிறது.
நான் ராமாயணம், குரான், பைபிள், குரு கிரந்த சாகிப் போன்றவற்றைப் பின்பற்றுகிறேன். வெளியில் இருந்து கொண்டு வரும் உணவை சாப்பிடுவதற்காக ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று நாடகம் ஆடுவதில்லை" என்றார்.
- ஜி20 மாநாடு நடைபெற இருப்பதால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
- வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் மம்தா சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந்தேதிகளில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள்.
மேலும், ஐரோப்பிய யூனியன் மற்றும் சர்வதேச அமைப்பின் தலைவர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதனால் டெல்லி விழாக்கோலம் பூண்டுள்ளது.
இதற்கிடையே, செப்டம்பர் 9ம் தேதி அன்று ஜனாதிபதி திரவுபதி முர்மு சார்பில் வழங்கப்படும் இரவு விருந்தில் பல்வேறு நாட்டு அதிபர்களும், உள்நாட்டு தலைவர்கள் என பலர் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று விருந்தில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரும் சனிக்கிழமை புதுடெல்லிக்கு செல்ல உள்ளார்.
மேலும், இந்நிகழ்வில் வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினாவுடன் மம்தா சந்திக்கவுள்ளதாகவும், அவருடன் நல்லுறவை பகிர உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். 45 பேர் காயம் அடைந்தனர். இதில் 15 பேரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த எங்கள் குடிமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அறிந்து வருத்தமாக இருக்கிறது. காயமடைந்த பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இறந்தவர்களின் விரைவான பிரேத பரிசோதனை, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை மற்றும் அவர்கள் வீடு திரும்ப உதவுவதற்காக மேற்குவங்க நிர்வாகம் ஒடிசா அதிகாரிகளுடன் ஒருங்கிணைக்கிறது. பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ உதயநாராயண்பூர் தலைமையிலான உயர்மட்ட குழு ஒடிசாவுக்கு விரைகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- பேரழிவு ஏதேனும் இருந்தால், மக்களைக் கவனிப்பது அரசின் கடமை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத், 'புதையும் நகரமாக' மாறியிருக்கிறது. அங்குள்ள வீடுகள், கடைகள் மற்றும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் நகரவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.
இதுவரை 169 குடும்பங்களைச் சேர்ந்த 589 பேர் இங்கிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பேரிடர் பாதித்த ஜோஷிமத் நகரத்தின் நிலைமை மிகவும் ஆபத்தானது என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில், "உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் பகுதியில் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்று ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தபோதும் தேவையான நடவடிக்கைகள் ஏன் எடுக்கப்படவில்லை? ஜோஷிமத்தில் தற்போதைய நிலைமை மிகவும் ஆபத்தானது. அதற்கு மலைநகரில் வசிப்பவர்கள் பொறுப்பல்ல. பேரழிவு ஏதேனும் இருந்தால், மக்களைக் கவனிப்பது அரசின் கடமை.
மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
- வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை பன்மடங்கு அதிகரித்துள்ளது.
- மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஜி 20 கூட்டமைப்பின் நிதிசார் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில், வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது என்று அவர் கூறினார்.
முதல்வர் மம்தா பானர்ஜி தனது உரையின்போது கூறியதாவது:-
மாநில அரசு 12 மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளது. வங்காளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது.வளர்ச்சிக்கான முகமாக மேற்கு வங்காள அரசு திகழ்கிறது
மாநிலத்தில் மதம், ஜாதி, மொழி வேறுபாடுகள் இருந்தபோதிலும் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றனர். எங்கள் வளர்ச்சி முயற்சிகளின் பலன்களை மக்கள் பெறுவதை உறுதி செய்வதற்காக 'உங்கள் வீட்டு வாசலில் அரசாங்கம்' (துவாரே சர்க்கார்) திட்டத்தை நாங்கள் தொடங்கினோம்.
இத்திட்டம் தேசிய விருதை வென்றது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
- வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.
மேற்கு வங்காள மாநிலத்தில் ஹவுரா-புது ஜல்பைகுரி இடையிலான வந்தே பாரத் அதிவேக ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 30ம் தேதி தொடங்கிவைத்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் மாலை அந்த ரெயில் புது ஜல்பைகுரியில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்றது. மால்டா மாவட்டத்தின் குமார்கஞ்ச் ரெயில் நிலையம் அருகில் சென்றபோது அடையாளம் தெரியாத விஷமிகள் சிலர் வந்தே பாரத் ரெயில் மீது கல் வீசி தாக்கினர்.
அதில் ஒரு பெட்டியின் கண்ணாடி கதவில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் ரெயில் தொடர்ந்து இயக்கப்பட்டு, அடுத்து வந்த வழக்கமான நிறுத்தமான மால்டா ரெயில் நிலையத்தில்தான் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், அண்டை மாநிலமான பீகாரில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், தனது மாநிலம் அல்ல என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், தனது மாநிலத்தை அவதூறு செய்த ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா பானர்ஜி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மூன்று நாட்களாக நிறைய டி.வி. சேனல்கள் வங்காளத்தை அவதூறாகப் பேசி வருவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். போலிச் செய்திகளைக் காட்டி, பொய்யான தகவலைப் பரப்பி வங்காளத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தியிருக்கிறார்கள். சட்டம் அதன் கடமையை செய்யும். இது வங்காளத்தில் நடக்கவில்லை. பீகாரில் நடந்துள்ளது. அவர்கள் ஏதாவது செய்திருந்தால் பீகார் மக்களுக்கு புகார் இருக்கும். இருப்பினும் பீகாரை அவமதிப்பது சட்டவிரோதமானது. இந்த சேவைகளை பெற அவர்களுக்கும் உரிமை உண்டு. அங்கு ஆட்சியில், அவர்களுக்கு இந்த சேவைகளை மறுக்க முடியாது.
வந்தே பாரத் ரெயிலில் சிறப்பு எதுவும் இல்லை. இது ஒரு புதிய என்ஜின் பொருத்தி புதுப்பிக்கப்பட்ட பழைய ரெயில்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று மம்தா தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் தையல் கடை நடத்தி வந்த கண்கையா லால் கடைக்கு வந்த இரண்டு பேர் அவரிடம் ஆடை தைக்க வேண்டும் என்று பேசியபடி வலுக்கட்டாயமாக அவரை இழுத்துச்சென்று, தலையை துண்டித்தனர்.
சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.க. முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாக கண்கையா லால் கருத்து தெரிவித்ததால் படுகொலை செய்ததாகவும் அவர்கள் தெரிவிருந்தனர். இது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் அவர்கள் வெளியிட்டதால் உதய்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையில் 24 மணி நேரத்திற்கு அப்பகுதியில் இணையதள சேவை முடக்கப்பட்டது. ராஜ்சமந்த் மாவட்டம் பீம் பகுதியில் இருந்து இரண்டு குற்றவாளிகள் கவுஸ் முகமது மற்றும் ரியாஸ் அகமது பிடிபட்டதாகவும், காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த கொடூர கொலையால் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க ராஜஸ்தான் முழுவதும் ஒரு மாதம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அப்போது, வன்முறை மற்றும் தீவிரவாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், " எதுவாக இருந்தாலும் வன்முறையும், பயங்கரவாதமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. உதய்பூரில் நடந்ததை வன்மையாகக் கண்டிக்கிறேன். சட்டம் நடவடிக்கை எடுப்பதால், அனைவரையும் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
- மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கேற்பில்லை.
- குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம்.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து மம்தா பானர்ஜி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் ஆம் ஆத்மி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை என தெரிகிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்த பிறகே எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
மேலும், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ., திமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளனர்.
- விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக மம்தா குறிப்பிட்டுள்ளார்.
- கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதுடெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸின் மூத்த தலைவர் சோனியா காந்தி கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை இப்போதுதான் அறிந்தேன். அவர் விரைவில் குணமடைந்து பொது வாழ்க்கைக்கு திரும்புவதற்கு நாம் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும் சோனியா அவர்களே.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக தெரிவித்த பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.
இது உங்கள் வெற்றி. இந்த போராட்டத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. தேர்தல் பயத்தால் வேளாண் சட்டங்கள் வாபஸ்- ப.சிதம்பரம் கருத்து
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்