search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manapadu"

    • உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைபள்ளி, புனிதமரியன்னை நடுநிலை பள்ளிகளில் விளையாட்டு விழா பள்ளியின் முன்னாள் மாணவரும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியின் பேராசிரியருமான பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது.
    • விழாவில் மாணவர்கள் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் வலம் வருதல், ஒலிம்பிக் கொடி ஏற்றுதல், விளையாட்டு உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு புனித வளன் மேல்நிலைபள்ளி, புனிதமரியன்னை நடுநிலை பள்ளிகளில் விளையாட்டு விழா பள்ளியின் முன்னாள் மாணவரும் தூத்துக்குடி மீன்வளக்கல்லூரியின் பேராசிரியருமான பார்த்திபன் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் லெரின் டிரோஸ் அடிகளார் வாழ்த்துரை வழங்கினார். பள்ளித்தலைமை ஆசிரியை பிளாரன்ஸ், புனித மரியன்னை நடுநிலை பள்ளித் தலைமை ஆசிரியை எலிசா டிரோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புனித யாகப்பர் ஆலய கமிட்டி தலைவர் திபுர்சியான், தூய ஆவி ஆலய கமிட்டி தலைவர்சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் மாணவர்கள் அணிவகுப்பு, ஒலிம்பிக் தீபம் வலம் வருதல், ஒலிம்பிக் கொடி ஏற்றுதல், விளையாட்டு உறுதிமொழி எடுத்தல் உள்ளிட்டவை நடைபெற்றது. ஆண்கள்4 அணியாகவும், பெண்கள் 4அணியாகவும் போட்டிகள் நடைபெற்றது. இதில் தாசன் அணி ஆண்களில் முதல் இடத்தையும், ரோச் அணி பெண்களில் முதல்இடத்தையும் பெற்றது.வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு விழாத்தலைவர் பரிசுகள் வழங்கினார்.உடற்கல்வி ஆசிரியை உஷா நன்றி கூறினார்.

    • சுற்றுலா பயணிகளுக்காக கடலில் பிடித்த மீன்கள், நண்டு போன்றவற்றை சுட சுட பொறித்து விற்பனை செய்கின்றனர்.
    • கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி யூனியனுக்கு உட்பட்டது மணப்பாடு கடற்கரையில் தீபாவளி தொடர்விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு இங்கு வந்தனர்.

    கடற்கரையையொட்டி இயற்கையாக அமைந்துள்ள உயரமான மணல் குன்று, குன்றின் மீதுஉள்ள திருச்சிலுவை நாதர் ஆலயம். ஆலயத்திற்குப் பின்புறம் உள்ள கலங்கரை விளக்கு, புனித சவேரியார் வாழ்ந்த குகை, தியான மண்டபம், நாழிக்கிணறுஆகியவற்றை பார்த்து ரசிப்பதும், மணல் குன்றின் மீதுஏறி விளையாடுவதும், பின்பு குடும்பத்துடன் கடலில் நீராடி தங்களது மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக தனிநபர்கள் கடலில் பிடித்த பலவகையான மீன்கள், நண்டு.இறால் போன்றவற்றை சுட சுட என்னனயில் பொறித்து விற்பனைசெய்கின்றனர். மேலும் ஐஸ் கீரீம் கடைகள் உட்பட பல வகை தனியார் கடைகள் உள்ளது.

    இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பொருட்களை விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். திருச்செந்தூரில் இருந்து கடற்கரை வழியாக உவரி, கன்னியாகுமரி செல்லும் சுற்றுலா பயணிகள் மணப்பாடு கடற்கரை வராமல் செல்வதில்லை. குளிர்ந்த காற்று சில்லென்று வீசிக்கொண்டு குற்றாலசாரல் போல மழை பெய்தாலும் தீபாவளி தொடர்விடுமுறையையொட்டி மணப்பாடுகடந்கரைக்கு கூட்டமாக மக்கள் வந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ் பாராட்டினர்

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை நடத்திய அண்ணா பிறந்த நாள், அண்ணல் காந்தியடிகள் நினைவுநாள் பேச்சுப்போட்டிகள் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பள்ளி, மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். அண்ணா பிறந்தநாள் பேச்சுப்போட்டியில் மணப்பாடு புனித வளன் மேல்நிலைப்பள்ளி மாணவர் சன்எபி முதலிடமும், அண்ணல் காந்தியடிகள் நினைவு போட்டியில் பள்ளி மாணவி தர்ஷினி முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளி தாளாளர் லெரின்டிரோஸ், தலைமை ஆசிரியர் அருள்பர்னாந்து மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர். பேச்சுப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுத்தொகை ரூ. 5 ஆயிரம் கலெக்டர் வழங்கினார்.

    • மணப்பாடு கடற்கரையில் உள்ள திருச்சிலுவை நாதர்ஆலயம் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற ஆலயமாகும்
    • இங்கு ஆண்டு தோறும் மகிமை பெரும் திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.

    உடன்குடி:

    திருச்செந்தூர் அருகே உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட மணப்பாடு கடற்கரையில் மிகப்பெரிய மணல்குன்று உள்ளது. இந்த குன்றின் மீது உள்ள திருச்சிலுவை நாதர்ஆலயம் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற ஆலயத்தில் ஒன்றாகும்.

    ஆண்டு தோறும் இங்கு மகிமை பெரும் திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு 442-வது மகிமை பெரும் திருவிழாவையொட்டி இன்று காலை 4.30 மணிக்கு ஆலயத்தில் முதல் திருப்பலி நடந்தது. அதைத் தொடர்ந்து காலை 6.30 மணிக்கு மணவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் செல்வம் மற்றும் ஏராளமான குருவானவர்கள் கலந்து கொண்டு மறையுரை, திருப்பலி மெய்யான சிலுவைஆசீர், அப்பம் வழங்கல் நிகழ்ச்சிகள் நடந்தது.

    பின்னர் கோவில் கொடி மரத்தில் காலை 8.15 மணிக்கு கொடியேற்றப்பட்டு தொடர்ந்து திருப்பலிகள் நடந்தது. இதில் சுற்றுப்புற பகுதியிலிருந்தும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா தொடங்கியதை யொட்டி தினசரி காலை, மாலை திருப்பலிகள் மறையுரை மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் ஒவ்வொரு நாளும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    விழாவில் முக்கிய நாளான வருகிற 13-ந் தேதி கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை வரவுள்ளதாகவும், அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படவுள்ள தாகவும் நிர்வாகிகள் தெரி வித்துள்ளனர். அன்று மாலை 7 மணிக்கு திருப்பலியும், மறையுரையும் நடைபெறும். விழாவில் நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். அவர்கள் வந்து செல்ல வசதியாக 2 நாட்கள் சிறப்பு அரசு பஸ்கள் இயக் கப்படும்.

    14-ந் தேதி காலை 4.30 மணிக்கு ஆலயத்தில் முதல் திருப்பலியும், பின்பு திருச்சிலுவைநாதர் ஆலயத்தில்மலையாள திருப்பலியும் 442-வது மகிமை பெரும் திருவிழா திருப்பலி 5 திருக்காய சபையினர் பவனி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.மாலை 5 மணிக்கு கொடி இறக்க திருப்பலியுடன் திருவிழா நிறைவு பெற உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் லரின் டிரேஸ், ஆரோக்கிய அமல்ராஜ், ரஷ்யன் மற்றும் மணப்பாடு சபை மக்கள் செய்துள்ளனர்.

    • மணப்பாடு கலங்கரை விளக்கை மாணவர்கள் பார்வையிட 17-ந்தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • பொதுமக்களுக்கு 15-ந்தேதி ஒரு நாள் மட்டும் அனுமதி அளிக்கபட்டுள்ளதாக முதன்மை அதிகாரி மதனகோபால் குறிப்பிட்டுள்ளார்.

    உடன்குடி:

    75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி வருகிற 17-ந்தேதி வரை மாணவர்கள் மணப்பாடு கலங்கரை விளக்கை பார்வையிடலாம் என்றும், நாளை (15-ந்தேதி) மட்டும் பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கலங்கரை விளக்க முதன்மை அதிகாரி மதனகோபால் ஒரு செய்திக்குறிப்பில் குறிப்பிட்டிருந்தார்.

    இதையடுத்து உடன்குடி, திருச்செந்தூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலங்கரை விளக்கை ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.தினசரி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கலங்கரை விளக்கை பார்க்க அனுமதி வழங்கபட்டுள்ளது.

    • மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.
    • கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வந்திருந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி அருகே உள்ள மணப்பாடு முழுக்க முழுக்க மீனவர்களே வசிக்கும் கிராமம் ஆகும். இங்குள்ள 90 சதவீத மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியே வாழ்கின்றனர்.

    இவர்கள் ஞாயிற்றுக் கிழமை தோறும் மீன்பிடிக்கச் செல்ல மாட்டார்கள். மற்ற நாட்களில் அதிகாலை 2 மணி அளவில் மீன்பிடிக்கச் சென்று விட்டு காலை 8 மணிக்கு வெளியே வருவதும், ஒரு நாள் முன்னதாக மாலையில் மீன்பிடிக்கச் சென்று விட்டு மறு நாள் காலையில் வெளியே வருவதும், ஒரு சில நாட்கள் தங்கியிருந்து மீன் பிடித்து வருவது என மூன்று பிரிவாக மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். நாட்டுப் படகு கட்டுமரம் பயன்படுத்தி தான் அதிகமான மீன்களை இப்பகுதி மக்கள் பிடித்து வருகின்றனர்.

    உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் மணப்பாடு கடற்கரைக்கு வந்துமீன்களை வாங்கி செல்கின்றனர்.

    கடலில் மீன்களை பிடித்து கரைக்கு கொண்டு வந்தவுடன் கடற்கரையில் வைத்து ஏலம் போடுவார்கள்.ஏலம் போட்ட பின்புதான் மீன்களை பதப்படுத்துவதற்கு ஐஸ்கட்டிகள் போடுவார்கள். மீன்களை பதப்படுத்தும் முன்பாகவே வாங்கிட இன்று ஏராளமான மக்கள் கடற்கரையில் குவிந்தனர்.

    இதுபற்றி கடற்கரைக்கு மீன் வாங்க வந்த ஒருவர் கூறியதாவது:-

    அசைவ உணவுகளில் மிகவும் சத்தானதுமீன்கள் மட்டும் தான். வீதி வீதியாக விற்பனைக்கு வரும் மீன்கள் ஐஸ் கட்டிகளைப் போட்டு பதப்படுத்தி கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் இங்கு வந்து வாங்கினால் கடலில் பிடித்து வரும் மீன்கள் உயிரோட்டம் உள்ளதாக இருக்கும்.

    மேலும் மணப்பாடு மீன்களுக்கு தனிச்சிறப்பு உண்டு. சுவையுண்டு, வாசனை உண்டு, அதனால் தான் நான் நாசரேத்திலிருந்து மீன்கள் வாங்குவதற்கு இங்கு வந்துள்ளேன். நான் எனது நண்பர்கள் என பலர் சேர்ந்து மீன்களை மொத்தமாக வாங்கி பிரித்து எடுத்து கொள்வோம் என்று கூறினார்.

    இதேபோல கேரளாவில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மீன்களை மொத்தமாக வாங்கிச் செல்வதற்கு வந்திருந்தனர். 

    ×