search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manimekalai"

    • நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.
    • இதற்காக 2022-23 ம் ஆண்டு செயல்திட்டத்தில், ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்டுள் ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசின் சார்பில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும், கிராம ஊராட்சி பகுதிகளிலுள்ள சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு மற்றும் கிராம வறுமை ஒழிப்பு சங்கம் மற்றும் நகர்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படுகிறது.

    இதற்காக 2022-23 ம் ஆண்டு செயல்திட்டத்தில், ரூ.2.10 கோடி ஒதுக்கீடு செய்து வெளியிடப்பட்டுள் ளது.எனவே 2022-23 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு சேலம் மாவட்டத்தில் உள்ள தகுதி யான மேற்கண்ட சமுதாய அமைப்புகளிடமிருந்து வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    மணிமேகலை விரு துக்கான முன்மொழிவுகளை வருகிற மே மாதம் 5-ந்தே திக்குள் திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு (மக ளிர் திட்டம்) அலுவலகம், இரண்டாம் தளம், அறை எண் : 207, மாவட்ட ஆட்சிய ரகம், சேலம்-636 001 என்ற முகவரியில் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×