என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Manimuthar"
- தேனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி.
- சுமார் 17 மணிநேரத்திற்கு பிறகு சென்றது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கிராமங்களுக்குள் அடிக்கடி சிறுத்தை, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் புகுந்து அட்ட காசத்தில் ஈடுபடுவது வழக்கம்.
பின்னர் அதனை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்து காட்டுப்பகுதியில் கொண்டு விடுவார்கள்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் மணிமுத்தாறு மெயின் ரோட்டில் கரடி ஒன்று சாலையை கடந்து சென்றுள்ளது. உடனே அதனை கண்ட மக்கள் அலறியபடி ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அந்த கரடி அங்கிருந்த பட்டாலியன் கமாண்டர் வீட்டில் புகுந்து அங்கிருந்த மரத்தின் மீது ஏறிக்கொண்டு இறங்காமல் நின்றது.
இதுகுறித்து அறிந்து, அம்பை வனச்சரகர் நித்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கரடியை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் கரடி இறங்காமல் இரவு வரையிலும் மரத்தின் மீது நின்று கொண்டே இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் அங்கேயே முகாமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.10 மணிக்கு அந்த கரடி மரத்தில் இருந்து நைசாக இறங்கி காட்டுப்பகுதிக்குள் ஓடியது. அந்த மரத்தில் தேன் கூடு கட்டி இருந்தது. அதனை உண்பதற்காக மரத்தில் ஏறிய கரடி, நள்ளிரவில் தேன் முழுவதையும் சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் மரத்திலேயே தூங்கியதாகவும், அதன்பின்னர் இறங்கி சென்றுவிட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
சுமார் 17 மணி நேரம் அந்த கரடி மரத்தின் மீதே நின்று கொண்டிருந்த நிலையில், அதன் பின்னர் இறங்கி சென்றுள்ளது. கடந்த மாதம் 16-ந்தேதி இதே இடத்திற்கு கரடி ஒன்று வந்து மரத்தில் ஏறி நின்றுவிட்டு நள்ளிரவில் இறங்கி வனத்துக்குள் சென்றது குறிப்பிடத்தக்கது.
- ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.
- பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது.
கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது.
பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்நாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள், மூலிகை தாவரங்கள் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் புலிகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்த ஆண்டு அம்பை கோட்டத்திற்கு உட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச் சரகங்களில் இன்று முதல் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி வருகிற 27-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இதனையொட்டி புலிகள் கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி முகாம் அம்பை கோட்ட துணை இயக்குனர் இளையராஜா தலைமையில் முண்டந்துறையில் இன்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பயிற்சி காலையில் முடிந்தவுடன் உடனடியாக மதியமே கணக்கெடுக்கும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட தொடங்கினர். தொடர்ந்து முண்டந்துறை அருகே நாளை (புதன்கிழமை) கணக்கெடுப்பு பணி நடக்கிறது.
இதனையொட்டி பாபநாசம், மணிமுத்தாறு சோதனை சாவடிகள் தற்காலிகமாக மூடப்படுகிறது. இதனால் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, சொரிமுத்து அய்யனார் கோவில் ஆகிய இடங்களுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனை அறியாமல் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
- மணிமுத்தாறு பகுதியில் பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
- சேதமடைந்த சாலையால் பல்வேறு தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள மணிமுத்தாறு பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2 பட்டாலியன் உள்ளது. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாலியன் போலீசார் பயிற்சி பெறும் பள்ளி உள்ளது. மேலும் பொதுப்பணித்துறை அலுவலகம், வனத்துறை அலுவலகம், பேரூராட்சி அலுவலகமும் உள்ளது.
மேலும் மணிமுத்தாறு பகுதியில் மாஞ்சோலை, மணிமுத்தாறு அருவி மற்றும் அணை உள்பட பல்வேறு சுற்றுலாத்தலங்கள் இருப்பதால் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த நிலையில் மணிமுத்தாறில் இருந்து பாபநாசம், அம்பாசமுத்திரம் செல்லும் பிரதான சாலை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
இந்த சேதமடைந்த சாலையை பயன்படுத்தி வரும் பட்டாலியன் போலீசார், சுற்றுலா பயணிகள், பள்ளி செல்லும் குழந்தைகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலை ஓரங்களில் உள்ள ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு சாலையில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் இந்த சாலை மேலும் சேதமடைந்து வருகிறது.
இந்த சாலையால் ஏராளமான பட்டாலியன் போலீசார், பள்ளி மாணவர்கள், அரசு அலுவலர்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.மேலும் இந்த சாலையில் ஏராளமான விபத்துகளும் ஏற்பட்டு உள்ளது.
மேலும் இந்த சாலையை அரசு உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
- ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
- அப்பகுதிகளில் நாளை காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.
கல்லிடைக்குறிச்சி:
கல்லிடைக்குறிச்சி மின் வாரிய செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஓ. துலுக்கப்பட்டி, வீரவநல்லூர் அம்பை, மணிமுத்தாறு மற்றும் கடையம் துணை மின் நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. எனவே அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆழ்வான்துலூக்கப்பட்டி, ஒ.துலூக்கப்பட்டி, செங்குளம், கபாலி பாறை, இடைகால், அனைந்தநா டார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தபாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்க ம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளா ங்குளி, ரெங்கசமுத்திரம், ஊர்க் காடு, அம்பாசமுத்திரம், வாகைக்குளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
அேதபோல் மணிமு த்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிக்குளம், பொன்மாநகர், தெற்கு பாப்பான் குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், கடையம், பண்டாரகுளம், பொட்டல் புதூர், திருமலையப் புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள் புரம், சிவநாடனூர், மாதாபுரம், மயிலப்புரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை மின்விநியோகம் தடைப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.
- மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
நெல்லை:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நெல்லையில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது மாவட்டத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் மணிமுத்தாறில் ரூ.7 கோடி மதிப்பில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என அறிவித்தார்.
இதைத்தொடர்ந்து மணிமுத்தாறு அணை பகுதியில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைய உள்ள பகுதியில் கலெக்டர் விஷ்ணு ஆய்வு நடத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்-அமைச்சர் அறிவிப்பை தொடர்ந்து மணிமுத்தாறில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இங்கு சாகச பூங்கா மற்றும் இளைஞர்களுக்கான அறிவியல் மையமும் அமைக்கப்படுகிறது.
இந்த திட்டங்கள் 23.6 ஏக்கர் இடத்தில் 2 பிரிவுகளாக அமைகிறது என்றார்.
தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனினும் நெல்லை மாவட்டத்தில் இன்னும் பருவமழை முழுமையாக பெய்யவில்லை. ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின் போது அணைகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் மேலும் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 2 மாதமாகவே வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனிடையே இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 8 மணி வரை நீடித்தது.
இதே போல் பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அகஸ்தியர் அருவியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #OldCoutralam
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்