என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "manju warrier"

    • வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.
    • மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ்.

    அசுரன், துணிவு திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மஞ்சு வாரியர் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகை மஞ்சு வாரியரிடம் ரூ.5.75 கோடி இழப்பீடு கேட்டு Footage பட நடிகை சீத்தல் தம்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளது மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த நோட்டீசில், "மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த Footage படத்தில் போதிய பாதுகாப்பின்றி காட்டுக்குள் படப்பிடிப்பு நடத்தியதால் தனக்கு காயம் ஏற்பட்டது. அந்த சமயத்தில் ஆம்புலன்ஸ் உட்பட எந்த வசதிகளையும் தயாரிப்பு நிறுவனம் செய்து கொடுக்காததால் எனது உடல்நிலை மேலும் மோசமானது.

    அப்படத்தில் நடிக்க தனக்கு ரூ1.80 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுக்கப்பட்டது . ஆனால் அப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட காயங்களுக்கான மருத்துவ சிகிச்சைகளுக்கு பல லட்சம் செலவானது. ஆகவே என்னுடைய காயங்கள் மற்றும் மருத்துவ செலவிற்காக ரூ.5.75 கோடி இழப்பீட்டை 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வேன்" என்று சீத்தல் தெரிவித்துள்ளார்.

    • இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
    • விடுதலை 2 ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

    வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் விடுதலை. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்த நிலையில், படத்திற்கு எதிர்பார்ப்பைக் கூட்டும் வகையில் முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தில் நடக்கும் சில காட்சிகளை வைத்திருந்தார் வெற்றிமாறன்.

    இதையடுத்து, விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி, சூரி, எஸ்.ஜே சூர்யா மற்றும் மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து கடந்த மாதம் விடுதலை பாகம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இரண்டு போஸ்டர்கள் வெளியான நிலையில் ஒரு போஸ்டரில் விஜய் சேதுபதியும் மஞ்சு வாரியரும் அன்பாக பேசிக்கொண்டிருக்கும் புகைப்படமும் மற்றொரு போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக கையில் கத்தியுடன் இருக்கும் புகைப்படமும் வெளியானது. மேலும் போஸ்டரில் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாகத் தெரிவித்து புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் முதல் பாடலான மனசிலாயோ பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு அறிவித்துள்ளது. வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகை மஞ்சு வாரியர் தற்போது நடித்து வரும் படம் 'ஆயிஷா'.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' பாடல் வெளியாகி உள்ளது.

    'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது 'ஆயிஷா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கிறார்.

     

    பாடல் நடனம் அமைக்கும் பணியில் பிரபுதேவா

    பாடல் நடனம் அமைக்கும் பணியில் பிரபுதேவா

    இந்நிலையில் 'ஆயிஷா' படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்த பாடலை பி.கே.ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது 'ஏ.கே.61' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பை வெளிநாட்டில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகளுக்கு இடையில் அஜித் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அஜித் - மஞ்சுவாரியர் 

    அஜித் - மஞ்சுவாரியர் 

     

    சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் லடாக் சென்று, அங்கிருந்து இமயமலை பகுதிகளில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இயற்கை காட்சிகளை ரசித்தபடி செல்லும் அவரது பைக் சாகச பயண புகைப்படங்கள் அவ்வப்போது வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

     

    அஜித் 

    அஜித் 

    இந்த பயணத்தில் அஜித்துடன் நடிகை மஞ்சுவாரியரும் இணைந்துள்ளார். பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொண்டதற்காக அஜித்துக்கு அவர் நன்றி தெரிவித்து வலைத்தளத்தில் பதிவும் வெளியிட்டிருந்தார். இந்த பயணத்தின் போது அஜித் கார்கில் போர் நினைவிடத்துக்கு சென்று சல்யூட் அடித்து மரியாதை செய்தார். அங்கு ராணுவ வீரர்கள் அஜித்துடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

     

    புத்தர் கோவிலில் வழிபாடு செய்த அஜித்

    புத்தர் கோவிலில் வழிபாடு செய்த அஜித்

    இந்நிலையில் அஜித் தற்போது புத்தர் கோவிலுக்கு சென்று வழிப்பட்டுள்ளார். அப்போது புத்த விகாரத்தை அஜித் சுற்றி வந்து வழிபடும் வீடியோ வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • எச்.வினோத் இயக்கத்தில் அஜித் தற்போது நடித்து வரும் படம் 'ஏ.கே.61'.
    • இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    அஜித் 'வலிமை' படத்திற்குப் பிறகு தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் 'ஏ.கே. 61' படத்தில் நடித்து வருகிறார். ஹைதராபாத், விசாகப்பட்டினம், சென்னை, புனே என பல்வேறு இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    அஜித்

     இதில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் அப்டேட் வெளிவரவில்லை என்றாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே இருக்கிறது.


    மஞ்சு வாரியர் - அஜித்

    இந்நிலையில், லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அஜித் மற்றும் அவரது நண்பர்களுடன் இணைந்து நடிகை மஞ்சு வாரியரும் பயணம் செய்து வருகிறார். இது குறித்து மஞ்சு வாரியர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எங்கள் சூப்பர் ஸ்டார் ரைடர் அஜித் குமார் சாருக்கு மனமார்ந்த நன்றிகள். எனது முதல் இரு சக்கர வாகனப் பயணத்திற்காக அட்வென்சர் ரைடர்ஸ் இந்தியா குழுவில் இணைவதில் பெருமை அடைகிறேன்" என்று குறிப்பிட்டு பயணத்தின்போது அஜித் உடன் எடுத்த புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.


    • பிரித்விராஜ் தற்போது காப்பா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் இருந்து பிரபல நடிகை விலகியுள்ளார்.

    மலையாள திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் மஞ்சு வாரியர் நடிகர் திலீப்பை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து பிரிந்தார். விவாகரத்துக்கு பிறகு படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். தமிழில் தனுஷ் ஜோடியாக அசுரன் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது எச்.வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமாருடன் இணைந்து நடித்து வருகிறார்.

    மஞ்சு வாரியர்

    மஞ்சு வாரியர்

    இந்த நிலையில் மலையாளத்தில் பிரித்விராஜுடன் காப்பா என்ற படத்தில் நடிக்க மஞ்சு வாரியரை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தை வேணு இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. பட வேலைகள் தொடங்கிய நிலையில் படக்குழுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படத்தில் இருந்து வேணு விலகினார். எனவே அவருக்கு பதிலாக ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. தற்போது இந்த படத்தில் இருந்து மஞ்சு வாரியரும் விலகி உள்ளார். இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மஞ்சு வாரியர் எதற்காக இப்படத்தில் இருந்து விலகினார் என்பதற்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் ’அசுரன்’ படத்தில் பிரபல இயக்குநர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    `வட சென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி ’அசுரன்’ படத்தில் இணைந்திருக்கிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கும் நிலையில், `காதல்', `வழக்கு எண் 18/9' உள்ளிட்ட படங்களை இயக்கிய  பாலாஜி சக்திவேல் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். அவரது காட்சிகள் படமாகி வருவதாகவும், அவரது பெரும்பாலான காட்சிகள் தனுசுடன் இணைந்து வரும்படி உருவாகுவதாகவும் கூறப்படுகிறது. அவர் வில்லனாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

    முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய `வட சென்னை' படத்தில் அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



    மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாஸ் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 

    எழுத்தாளர் பூமணியின் `வெக்கை' புத்தகத்தை தழுவி, இடம் கையகப்படுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை மையப்படுத்திய கதையாக இந்த படம் உருவாகுவதாக கூறப்படுகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier #BalajiSakthivel

    தனுஷ் நடிப்பில் `அசுரன்' படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கிய நிலையில், பிரபல நடிகர் ஒருவரின் மகன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    வட சென்னையை தொடர்ந்து ’அசுரன்’ படப்பிடிப்பை தொடங்கி உள்ளது தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி. இந்த படத்தில் நாயகியாக மலையாள திரையுலகின் பிரபல நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். அவருக்கு இது முதல் நேரடி தமிழ்ப்படம்.

    முக்கிய கதாபாத்திரத்தில் கருணாசின் மகன் கென் கருணாசை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. இவர் ஏற்கனவே அழகு குட்டி செல்லம், நெடுஞ்சாலை படங்களில் நடித்தவர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி, கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நடக்கிறது.



    ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier #KenKarunas

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் - மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. #Asuran #Dhanush #ManjuWarrier
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் இணையும் `அசுரன்' படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்குகிறது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

    படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. அதில் தனுஷ் கையில் வேல் கம்புடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் காட்சியளித்தார். அதனைத் தொடர்ந்து இன்று வெளியான மற்றொரு போஸ்டரில் தனுஷ் - மஞ்ச வாரியர் இருவரும் 1980-களில் இருப்பது போன்ற தோற்றம் வெளியாகி உள்ளது.


    கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ராமர் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜாக்கி கலை பணிகளை மேற்கொள்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier

    வெற்றிமாறன் இயக்கத்தில் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், தனுசுடன் நடிப்பதை எதிர்நோக்கி உற்சாகமாக உள்ளதாக மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். #Asuran #Dhanush #ManjuWarrier
    மலையாள சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் மஞ்சு வாரியர், தனுஷின் `அசுரன்' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். வெற்றிமாறன் இயக்க, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

    இந்த படத்துக்கான கதாநாயகியாக பலரை பரிசீலித்து தற்போது மஞ்சு வாரியரை படக்குழு தேர்வு செய்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனுஷ் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அந்த கருத்தை குறிப்பிட்டு, மஞ்சு வாரியர் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

    `இது தான் எனது முதல் தமிழ் திரைப்படம். இதைவிட ஒருவருக்கு வேறு என்ன வேண்டும். தனுஷ், வெற்றிமாறனுக்கு நன்றி. நானும் உற்சாகமாக உள்ளேன்'


    இவ்வாறு கூறியுள்ளார்.

    படப்பிடிப்பு குடியரசு தினத்தை முன்னிட்டு வருகிற 26-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. முதற்கட்ட திருநெல்வேலியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #Asuran #Dhanush #ManjuWarirer

    வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் `அசுரன்' படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். #Asuran #Dhanush #ManjuWarrier
    `வடசென்னை' படத்தை தொடர்ந்து தனுஷ் - வெற்றிமாறன் `அசுரன்' படத்தில் இணைந்திருக்கின்றனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு குடியரசு தினத்தன்று துவங்கவிருக்கிறது.


    இந்த நிலையில், இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதுவே மஞ்சு வாரியர் நடிக்கும் முதல் தமிழ் படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரங்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாக இருக்கிறது.



    நீண்ட இடைவேளைக்குப் பிறகு தனுஷ் - வெற்றிமாறன் இணையும் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #Asuran #Dhanush #ManjuWarrier

    ×