என் மலர்
நீங்கள் தேடியது "Manly competition"
- அகில இந்திய போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் மதுரை ஆயுதப்படை வீரர் முதலிடம் பிடித்தார்.
- அவருக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை
மத்திய பிரதேச மாநிலம், பூனே நகரில் 71-வது அகில இந்திய அளவிலான போலீசாருக்கான ஆணழகன் போட்டி நடந்தது. தமிழகம் சார்பில் மதுரை ஆயுதப்படை போலீஸ்காரர் சிவா கலந்து கொண்டார்.
இவர் 60 கிலோ எடை பிரிவில் மணிப்பூர், உத்தரகாண்ட் வீரர்களை தோற்கடித்து முதலிடம் பெற்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜெயப்பூரில் 2019-ம் ஆண்டு நடந்த போலீசாருக்கான ஆணழகன் போட்டியில் சிவா முதல் பரிசு பெற்றார். அதன் பிறகு கொரோனா காரணமாக 2 ஆண்டுகள் போட்டி நடக்கவில்லை. 2022-ம் ஆண்டுக்கான ஆணழகன் போட்டியில் மதுரை சிவா கலந்து கொண்டு மீண்டும் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஆணழகன் போட்டியில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற மதுரை போலீஸ்காரர் சிவாவுக்கு ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் சார்பில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.
- திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வீரர்களை பாராட்டினார்.
பல்லடம் :
திருப்பூர் மாவட்ட அமெச்சூர் பாடி பில்டிங் அசோசியேசன் சார்பில் பல்லடத்தில் ஆணழகன் போட்டி பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட சங்க தலைவர் டைமன்ட் பிரகாஷ் தலைமை வகித்தார். சங்க செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போட்டி ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் வரவேற்றார். 10 பிரிவுகளில் நடந்த ஆணழகன் போட்டியில் 120 பேர் கலந்து கொண்டனர். இதில் ஒட்டுமொத்த சாம்பியனாக திருப்பூரை சேர்ந்த தினேஷ்குமார் முதலிடத்தையும், மங்கலத்தை சேர்ந்த சிற்றரசு இரண்டாமிடத்தையும் வென்றனர். போட்டிகளில் வெற்ற பெற்றவர்களுக்கு திருப்பூர் சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி வீரர்களை பாராட்டினார்.
- மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது.
- பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
மதுரை
மதுரை தெப்பக்குளத்தில் உள்ள மகாலில் மதுரை மாவட்ட ஆணழகன் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 280-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியை ஐ.எப்.எப். செயலாளர் ஜெகந்நாதன், எம்.டி.ஐ.எப்.எப். செயலாளர் தனசேகரன் ஆகியோர் இணைந்து நடத்தினர். இதில் மிஸ்டர் மதுரையாக அகதியன் வெற்றி பெற்றார். மதுரை சிறந்த ஜிம் விருதை அண்ணாநகர் நியூ வேர்ல்ட் ஜிம் உரிமையாளர் தனசேகரனுக்கு கிடைத்தது. மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை மனோஜ்குமார் தட்டி சென்றார்.
மதுரை மாவட்ட சிறுபான்மை தலைவர் முன்னாபாய், தொழிலதிபர் சரவணன் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.