என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manmohan Singh"

    • பிரதமர் மோடியை குறிவைத்து எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றச்சாட்டு.
    • இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலிகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கணபதி பூஜை நடத்தினார். இந்த பூஜையில் பிரதமர் மோடி நேரில் சென்று கலந்து கொண்டார். தலைமை நீதிபதி இல்ல பூஜையில், பிரதமர் மோடி கலந்து கொண்டு எதிர்கட்சிகளை கேள்வி எழுப்ப செய்தது.

    இந்த விவகாரத்தில் எதிர்கட்சியினர் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்களையும், ஏராளமான கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வீட்டில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்ட விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து எதிர்க்கட்சிகள் இரட்டை வேடம் போடுவதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

    மேலும், பாஜக செய்தி தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவாலா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் இப்தார் விருந்து அளித்த போது எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து இருக்கிறார். 2009 ஆம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங் தனது இல்லத்தில் நடத்திய இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி. பாலிகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.

    இது குறித்த எக்ஸ் தள பதிவில் ஷெஹ்சாத் பூனவாலா, "2009- பிரதமர் மன்மோகன் சிங்கின் இப்தார் விருந்தில் அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். தற்போதைய தலைமை நீதிபதி இல்லத்தில் விநாயகர் பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார் - கடவுளே நீதித்துறை சமரசம் செய்யப்பட்டது," என குறிப்பிட்டுள்ளார்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது இல்லத்தில் 2009 ஆம் ஆண்டு இப்தார் விருந்து வழங்கியது போன்ற பழைய படத்தை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா பகிர்ந்துள்ளார். இதில் அப்போதைய இந்திய தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார்.

    இதோடு மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பல பிரமுகர்களை வரவேற்பதைக் காட்டும் இந்தியா டுடே ஆவணக் காப்பகங்களில் இருந்து பல புகைப்படங்களைப் ஷெஹ்சாத் பூனவல்லா பகிர்ந்துள்ளார்.

    • முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    • இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங்கின் சேவை என்றும் நினைவுகூரத்தக்கது.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங்கின் சேவை என்றும் நினைவுகூரத்தக்கது.

    மன்மோகன் சிங்கின் ஞானம் மற்றும் அர்ப்பணிப்பு அடுத்த தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

    • மன்மோகன் சிங் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன்.
    • உங்களின் தன்னலமற்ற சேவை, பகுத்தறிவு மற்றும் பணிவு எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

    முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் 92-வது பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில்,

    மன்மோகன் சிங்குக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் உங்களின் தன்னலமற்ற சேவை, பகுத்தறிவு மற்றும் பணிவு எனக்கும் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

    நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    • பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவி வகித்தார்.
    • இந்த ஆண்டு தொடக்கத்தில் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெற்றார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இன்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியானது.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் சென்று பார்த்தனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி காலமானார்.

    2004 முதல் 2014 வரை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இந்த ஆண்டு தொடக்கத்தில் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

    33 ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் மாநிலங்களவையில் சிங் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பி.வி.நரசிம்மராவ் அரசின் கீழ் மத்திய நிதி அமைச்சராக பதவியேற்றார்.

    • முன்னாள் பிரதமர் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
    • தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார் என்றார்.

    சென்னை:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன். பெரும் தலைவரான அவரது அறிவாற்றலும் தலைமைத்துவமும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை முன்னோக்கி வழிநடத்தியது. பிரதமராக அவரது பதவிக்காலம் நிலையான வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மேம்படுத்திய சீர்திருத்தங்கள் ஆகியவற்றைக் கொண்டதாகத் திகழ்ந்தது.

    தலைவர் கலைஞர் டாக்டர் மன்மோகன் சிங்குடன் இணைந்து செயல்பட்டது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது. அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த மதிப்பும், அவர்களது கூட்டணியும் மிகப் பெரும் சிறப்புத் திட்டங்களைக் கொண்டு வந்து, அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலுப்படுத்தின. தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக டாக்டர் மன்மோகன் சிங் இருந்தார். தென்னக மக்களின் குரல்கள் தேசிய அளவிலான திட்டங்களில், கொள்கைகளில் எதிரொலிப்பதை அவர் உறுதிசெய்தார்.

    நெருக்கடியான காலங்களிலும் டாக்டர் மன்மோகன் சிங்கும், தலைவர் கலைஞரும் உறுதியாக ஒன்றிணைந்து நின்று, நம்பிக்கை மற்றும் மாநில அடையாளங்களுக்கான மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட கூட்டணி அரசின் வலிமையை வெளிப்படுத்தினர். அவரது அமைதியான, ஆழ்ந்த சிந்தனை கொண்ட தலைமைப் பண்பானது பொதுவாழ்வில் காண்பதற்கு மிகவும் அரிதான பண்பாகும். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் மிகுதியாகச் சாதித்தார். அவர் வாய்ச்சொல் வீரராக அல்லாமல் தனது தீர்க்கமான செயல்களினால் பேசினார்.

    பிரதமர் என்பதையும் தாண்டி, தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நண்பராக அவர் விளங்கினார். நமது தேவைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தீர்த்து வைத்த அவரது செயல்பாடு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்காற்றுவதற்குத் துணைபுரிந்தது. பரந்துபட்ட அறிவைக் கொண்டிருந்தாலும், உயர்ந்த பதவியில் இருந்தாலும் மிகவும் அடக்கத்துடன் அவர் இருந்தார். இதன்வழியாக அவருடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர்களிடம் ஆழ்ந்த தாக்கத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

    தமிழ்நாட்டு மக்களின் சார்பாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் மன்மோகன் சிங் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த அனைத்துத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் பேரறிவும், பணிவும், தொண்டும் எதிர்காலத் தலைமுறைகளுக்கு ஊக்கமூட்டித் தொடர்ந்து வழிகாட்டும் என பதிவிட்டுள்ளார்.

    • பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
    • இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல்1985 வரை பணியாற்றினார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பஞ்சாபின் கா என்ற இடத்தில் (தற்போது பாகிஸ்தானில் உள்ளது) 1932, செப்டம்பர் 26-ம் தேதி பிறந்தவர். நாடு சுதந்திரம் பெற்றதும் மன்மோகன் சிங் குடும்பத்துடன் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

    பொருளாதாரத்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார்.

    பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும், டெல்லி பல்கலைக்கழகத்திலும் பணியாற்றி உள்ளார்.

    டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கவுரவ பேராசிரியராகப் பணியாற்றினார்.

    மத்திய அரசின் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார்.

    இவர் ரிசர்வ் வங்கி கவர்னராக 1982 முதல்1985 வரை பணியாற்றினார்.

    1985 முதல் 1987 வரை திட்டக்குழு துணைத்தலைவராக இருந்தார்.

    1990 -91 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசகராகவும் இருந்தார்.

    1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியில் நிதி மந்திரியாக மன்மோகன் சிங் இருந்தார். இக்காலத்தில் தான் புதிய பொருளாதார கொள்கை முதலில் அமல்படுத்தப்பட்டது.

    வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

    பிறகு 2004 முதல் 2014 வரை பிரதமராக தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவி வகித்தார்.

    இதன்மூலம் நேரு, இந்திரா காந்தி, நரேந்திர மோடிக்கு பிறகு நீண்ட நாட்கள் பிரதமர் பதவி வகித்தவர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.

    மாநிலங்களவை எம்.பி.யாக இருந்த இவர் கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வுபெற்றார். அப்போது முதல் வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார் என்றார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று இரவு காலமானார்.

    மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13-வது பிரதமராக பதவி வகித்தவர். அவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

    இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான மன்மோகன் சிங்கின் இழப்பிற்காக துக்கம் அனுசரிக்கிறது.

    அவர் எளிமையான இடத்தில் இருந்து மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதி மந்திரி உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றிய அவர், பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார்.

    பாராளுமன்றத்தில் அவர் செய்த தலையீடுகளும் புத்திசாலித்தனமாக இருந்தன. நமது பிரதமராக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.

    மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத்தின் முதல்வராகவும் இருந்தபோது நானும் அவரும் அடிக்கடி உரையாடினோம். ஆளுகை தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் தெரியும்.

    துக்கமான இந்த நேரத்தில், எனது எண்ணங்கள் மன்மோகன் சிங்கின் குடும்பத்தினர், அவரது நண்பர்கள் மற்றும் எண்ணற்ற அபிமானிகளுடன் உள்ளன என பதிவிட்டுள்ளார்.

    • மன்மோகன் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
    • நான் ஒரு வழிகாட்டி மற்றும் குருவை இழந்துவிட்டேன் என்றார் ராகுல் காந்தி.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

    மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13-வது பிரதமராக பதவி வகித்தவர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மன்மோகன்சிங்ஜி இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவரது பணிவு மற்றும் பொருளாதாரம் பற்றிய ஆழமான புரிதல் தேசத்தை ஊக்கப்படுத்தியது. கவுர் மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். நான் ஒரு வழிகாட்டி மற்றும் குருவை இழந்துவிட்டேன். அவரைப் போற்றிப் பாராட்டிய கோடிக்கணக்கான மக்கள் அவரை மிகவும் பெருமையுடன் நினைவு கூர்வர் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் மன்மோகன்சிங்ஜி! முன்னாள் பிரதமரான உங்கள் மறைவால், தொலைநோக்குப் பார்வை கொண்ட அரசியல்வாதியையும், மாசற்ற நேர்மைத் தலைவரையும், ஈடு இணையற்ற அந்தஸ்து கொண்ட பொருளாதார வல்லுநரையும் இந்தியா இழந்துவிட்டது என பதிவிட்டுள்ளார்.

    • மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு இரங்கல் தெரிவித்தார்.
    • அதில், அன்னாரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

    மன்மோகன் சிங் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக, ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

    கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும், எளிமையாக கையாண்ட அரிதான தலைவர் மன்மோகன் சிங்.

    இந்திய பொருளாதாரத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள முக்கிய பங்களிப்பு அளித்தவர்.

    நாட்டுக்கு அவர் ஆற்றிய சேவை, எளிமை குணம், மனிதாபிமான பண்பு, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றிற்காக, மக்கள் மனதில் என்றும் நினைவில் வைத்துக்கொள்ளப்படுவார்.

    அன்னாரது மறைவு நம் அனைவருக்கும் பேரிழப்பு. அன்னாருடைய குடும்பத்துக்கும், நட்புக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    • மன்மோகன் சிங் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
    • நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றது மத்திய அரசு.

    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

    அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

    நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் கடைப்பிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சூழலில், இன்று காலை 11 மணியளவில் மத்திய மந்திரிசபை கூடுகிறது. டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், கர்நாடகாவில் 7 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும். இன்று (27-ம் தேதி) ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கர்நாடக முதல் மந்திரி அலுவலக செய்தி தெரிவிக்கின்றது.

    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன்.
    • அவரின் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன.

    சென்னை:

    காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் நேற்று உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவால் மிகுந்த வேதனை அடைந்தேன். ஞானம், பணிவு மற்றும் நேர்மையின் உருவகமாக விளங்கிய அவர், இந்திய பொருளாதாரத்துக்கும் சவாலான காலங்களில் தேசத்தை வழிநடத்துவதற்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார். மக்கள் பணிக்கான அவரது அர்ப்பணிப்பு என்றும் நினைவுகூரப்படும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னராகவும், மத்திய நிதி மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். அவரின் நிதிக் கொள்கைகள் நாட்டின் பொருளாதாரத்தை வடிவமைத்தன.

    ஒரு சிறந்த பொருளாதார நிபுணர், திறமையான நிர்வாகி மற்றும் ஒரு முன்மாதிரியான அரசியல்வாதி. அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. அவரது மறைவு இந்திய நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது குடும்பத்தினருக்கும், நிர்வாகிகளுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

     


    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவரும், எனது பிரதமருமான மன்மோகன் சிங் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக தில்லியில் இன்றிரவு காலமானார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரது மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எனது வாழ்நாளில் நான் மறக்க முடியாத தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் மன்மோகன் சிங். 2004ல் அவரது தலைமையிலான அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது அவருக்கு வயது 72. எனக்கு அதில் பாதி வயது கூட இல்லை என்றாலும், என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தியவர். தேசிய ஊரக சுகாதார இயக்கம், புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், 108 அவசர ஊர்தி போன்ற திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்மொழிவுகளை அவரிடம் முன்வைத்த போது, என்னை பாராட்டி ஊக்குவித்தவர். மருத்துவத் துறையில் 50 ஆண்டுகளில் செயல்படுத்த முடியாத திட்டங்களை 5 ஆண்டுகளில் செயல்படுத்திக் காட்டியதாக என்னைப் பாராட்டியவர். தனிப்பட்ட முறையில் என் மீது மிகுந்த அன்பு செலுத்தியவர்.

    பொதுவாக, பொருளாதார வல்லுநர்களாக இருப்பவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி மட்டுமே கண்ணுக்குத் தெரியும்; கிராமப்புற மக்களின் துயரங்களை புரிந்துகொள்ள முடியாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இதற்கு முற்றிலும் விதிவிலக்கானவர் முனைவர் மன்மோகன்சிங் அவர்கள். கிராமப்புற மக்களுக்கு அனைத்து வகையான சுகாதார வசதிகளும் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அவர், அதற்கான திட்டங்களை செயல்படுத்துவதில் என்னை ஊக்குவித்தவர்.

    உலகின் மிகச் சிறந்த ஆளுமைகளில் ஒருவருடன் பணியாற்றியவன் என்ற பெருமிதத்தை எனக்கு வழங்கியவர் அவர். அவரது மறைவை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கிறது. மன்மோகன் சிங் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், பொருளாதார வல்லுநர்கள், சோனியா காந்தி அம்மையார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் அனைத்துநிலை தலைவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.



    தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

    அவர் இந்தியாவை மகத்தான ஞானத்துடனும் நேர்மையுடனும் வழிநடத்தினார். அவர் குறைவாகப் பேசினார், ஆனால் அதிகமாக செய்தார். இந்தியப் பொருளாதாரம் மற்றும் தேசத்திற்கான பிற உன்னத சேவைகளுக்கு அவரது ஈடு இணையற்ற பங்களிப்பு என்றென்றும் போற்றப்படும்.

    இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    • தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.
    • முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தவர் மன்மோகன் சிங்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வில் இருந்து வந்தார்.

    ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்.

    தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாகியது.

    இதுபற்றி கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    மேலும் டெல்லியில் இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பிரியங்கா டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

    தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92.

    இதுபற்றிய தகவலை எய்ம்ஸ் ஆஸ்பத்திரி நேற்றிரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அந்த ஆஸ்பத்திரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று இரவு 8.05 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இரவு 9.51 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர்.

    முன்னதாக டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. முக்கிய இடங்களில் துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×