என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "manufacture"
- தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது.
- அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
சேலம்:
தமிழக கைத்தறி துறையின் கீழ் செயல்படும் சேலம் தங்கம் பட்டு மாளிகை ரூ.2 கோடியே 35 லட்சம் செலவில் நவீனப்படுத்தப்பட்டு இன்று திறக்கப்பட்டது. இதனை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். அமைச்சர் நேரு முன்னிலை வகித்து நவீனப்படுத்தப்பட்ட விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். முதல் விற்பனையை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் மேலாண்மை இயக்குனர் ஆனந்தகுமார், கைத்தறி துறை கமிஷனர் விவேகா னந்தன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் தொகுதி எம்.பி. பார்த்திபன், எம்.எல்.ஏ.க்கள் ராஜேந்திரன், அருள், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் டி.எம்.செல்வகணபதி, எஸ்.ஆர்.சிவலிங்கம், மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து அமைச்சர் காந்தி நிருபர்க ளிடம் கூறியதாவது:-
கோ ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை ரூ.2.35 கோடி மதிப்பில் புதுப்பொழிவுடன் நவீனப் படுத்தப்பட்டுள்ளது.
இதுபோல் இந்தியா முழுவதும் 154 ஷோரூம்கள் உள்ளது. தமிழகத்தில் மட்டும் 105 ஷோரூம்கள் உள்ளன. கடந்த 2021-ம் ஆண்டு 7.61 கோடி நஷ்டத்தில் இயங்கி வந்தது. தொடர்ந்து முதல்- அமைச்சரின் தீவிர நடவடிக்கையால் 2022-ம் ஆண்டு ரூ.9.45 கோடி லாபம் ஈட்டினோம். ரூ.10 கோடி செலவில் ஷோரூம்கள் சீரமைக்கப்பட்டன. தற்போது லாபம் ரூ. 22 கோடியாக உயர்ந்துள்ளது.
வரவேற்பு
தங்கம் பட்டு மாளிகை 1941-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு ரூ.6 கோடியே 59 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது. தற்போது அது ரூ.12 கோடியாக இலக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக 500 ரக சேலைகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சில்க் சேலைகள், காட்டன் சேலைகள் கோட்டோ சேலைகள், ஷாப் சேலைகள் அதிக அளவில் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கோ ஆப்டெக்ஸ்-ல் கெமிக்கல் இல்லாத ஆர்கானிக் பட்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. நீங்கள் டிசைன் போட்டு ஒரு ஆர்டர் கொடுத்தால் அதற்கு ஏற்றவாறு உற்பத்தி செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு சிறப்பாக செயல்ப டுத்தப்பட்டு வருகின்றன. 86 விற்பனை நிலையங்களில் ஆன்லைன் மூலம் ரூ.1½ கோடி மதிப்பில் விற்பனை நடைபெற்றுள்ளது.
நடவடிக்கை
சில்வர் தங்கம் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அறிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் நீங்கள் எங்கு ஜவுளி வாங்கினாலும் அதை அந்த மெஷினில் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளலாம். அதில் தரம் குறைவாக இருந்தால் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. போலி பட்டு சேலை தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊட்டியில் சொசைட்டி இல்லாமல் இருந்தது. தற்போது சொசைட்டி தொடங்கப்பட்டு மலைவாழ் மக்களுக்கு பயிற்சி கொடுத்து துணிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதிய தொழில் முனைவோர்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்தி தொழிலை தமிழகத்திலேயே துவக்க மத்திய அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
- மத்திய, மாநில அரசுகளின் மானிய தொழிற்கடன் திட்டங்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்திக்கான புதிய தொழில் முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
திருப்பூர் :
ஜவுளி உற்பத்தியில் முன்னோடியாக இருந்தாலும் கூட ஜவுளி உற்பத்திக்கு தேவையான உதிரிபாகங்களுக்கு (அக்சசரீஸ்) சீனாவிடம் இருந்து வாங்க வேண்டிய நிலை இன்றும் தொடர்கிறது. மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தியில் பட்டன், ஜிப், லேஸ், ரோப், ஸ்டோன்ஸ், லேபிள் ஆகிய உதிரி பாகங்கள் பங்களிப்பு அவசியம்.அதற்காகவே ஏற்றுமதி ஆடைகள் மட்டுமல்ல, உள்நாட்டு விற்பனை ஆடைகளிலும் உதிரி பாகங்கள் பயன்பாடு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிலாளர், தொழில் கட்டமைப்பு வசதிகளை பெற்றிருந்தும் கூட, திருப்பூரில் ஜவுளி உற்பத்திக்கான அக்சசரீஸ் உற்பத்தி செய்வதில்லை.
அக்சசரீஸ்களை வாங்க சீனாவிடம் இருந்தும், டெல்லியில் உள்ள சில நிறுவனங்களை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.புதிய தொழில் முனைவோர்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்தி தொழிலை தமிழகத்திலேயே துவக்க மத்திய அரசு பிள்ளையார் சுழி போட்டுள்ளது.
இது குறித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாரியம் சார்பில் இம்போர்ட் சப்ஸ்டிடியூட் என்ற திட்டத்தை செயல்படுத்த தீவிர ஆலோசனையில் இருக்கிறது. இது குறித்து தேசிய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வாரிய உறுப்பினர் மோகன சுந்தரம் கூறியதாவது:- பனியன் தொழிலில் அக்சசரீஸ் என்பது மிக முக்கியமானது. உள்ளூரில் உற்பத்தி இல்லாததால், டெல்லி அல்லது சீனாவில் இருந்து பெறப்படுகிறது. உற்பத்தியாளர் நிர்ணயிப்பதே விலையாக இருக்கிறது.வெகு தொலைவில் இருந்து வாங்கிவர போக்குவரத்து செலவும் அதிகம் ஏற்படுகிறது.
இறக்குமதி செய்யவதற்கு பதிலாக மாற்று பொருட்களை நாமே உற்பத்தி செய்யலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதற்காக மத்திய, மாநில அரசுகளின் மானிய தொழிற்கடன் திட்டங்கள் வாயிலாக, அக்சசரீஸ் உற்பத்திக்கான புதிய தொழில் முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பின்தங்கிய கிராமங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், அக்சசரீஸ் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க உதவி செய்யப்படும். லகு உத்யோக் பாரதி அமைப்பு வாயிலாகவும் புதிய தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டம் தொடர்பாக அரசிடம் பேசி வருகிறோம். இதன்மூலமாக சிறு, குறு தொழிற்சாலைகள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவ–னம்
- ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
திருப்பூர், நவ.21-
திருப்பூரில் பின்னலாடை தொழில் பிரதானமாக நடந்து வருகிறது. நூல் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த சில மாதங்களாக பனியன் தொழில் மந்தநிலையில் காணப்படுகிறது. இந்தநிலையில் வெளிமாநில அரசு, தங்கள் மாநிலங்களில் பனியன் தொழில் தொடங்க திருப்பூர் பனியன் தொழில் துறையினருக்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள்.
அதன்படி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த அரசு அதிகாரிகள் 4 பேர் கொண்ட குழு–வி–னர் திருப்–பூர் வந்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்தனர். ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திருக்குமரன், பொருளாளர் கோபாலகிருஷ்ணன், இணை செயலாளர் சின்னசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிர்வாக செயலாளர் சக்திவேல் ஆகியோர் பங்கேற்றனர்.
மத்திய பிரதேச மாநில அரசின் வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் மணிஷ் சிங் தலையில் அதிகாரிகள் வந்தனர். ஏற்கனவே திருப்பூரை சேர்ந்த ஏற்றுமதியாளர் ஒருவர், மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைத்–துள்ளார். இதைத்தொடர்ந்து மத்திய பிரதேச மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்க வருபவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் சலுகைகள் குறித்து எடுத்துக்கூறினார்கள்.
கூடுதல் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உதவி, மின்கட்டண சலுகை, தொழில் முதலீட்டுக்கடன் சலுகை, ஆடைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய 400 கிலோ மீட்டர் தூரத்தில் துறைமுகவசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார்கள். தங்கள் மாநிலத்துக்கு வந்து பனியன் ஏற்றுமதி நிறுவனங்–களை தொடங்–கி–னால் சலுகை அளிப்பதாகவும், முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அழைப்பு விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்