search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manur"

    • நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.
    • கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் சில இடங்களில் காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு கிராமங்கள் தோறும் சுகாதாரத் துறையினர் முகாமிட்டு டெங்கு உள்ளிட்ட கொசு புழுக்கள் உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் வீடு வீடாக சென்று ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்நிலையில் நெல்லை மாவட்டதுணை இயக்குனர் (சுகாதார பணிகள்) டாக்டர் ராஜேந்திரன் அறிவுரைப்படி உக்கிரன்கோட்டை வட்டார மருத்துவ அலுவலர் குருநாதன் தலைமையில் மேல தாழையூத்து, அழகிய பாண்டியபுரம், பட்டவர்த்தி, வெண்கல பொட்டல் மற்றும் வன்னிகோனேந்தல் கிராமங்களில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டனர். கொசு புழு ஒழிப்பு பணி மற்றும் முதிர் கொசுக்கள் அழிப்பதற்கு புகை மருந்து அடிக்கப்பட்டது. மேலும் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த பணியினை மாவட்ட மலேரியா அலுவலர் மஞ்சுளா, மானூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயக்குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கண்காணிப்பு செய்தனர்்.

    • அரிவாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
    • இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் கிராமத்தை சேர்ந்தவர் ஆருண் (வயது 21). கல்லூரி மாணவர். இவரது உறவினர் ஆபிரகாம் (19).

    அரிவாள் வெட்டு

    நேற்று முன்தினம் இவர்கள் ஊரின் வடக்கே உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் ஆருணை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்று விட்டது.

    தகவலறிந்து இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆருணை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே அரி வாளால் வெட்டிய கும்பலை கைது செய்யக்கோரி ஆருணின் உறவினர்கள் அழகியபாண்டியபுரம் - சங்கரன்கோவில் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் தாழையூத்து டி.எஸ்.பி. ஆனந்தராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர். இதுதொடர்பாக கொலை முயற்சி, தீண்டாமை பிரிவு ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், இளைஞரணி முத்துப்பாண்டி, தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் மற்றும் பலர் வந்தனர். பின்னர் அவர்கள் எஸ்.பி. அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

    இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறும்போது, எங்கள் கிராமத்தில் எங்களுக்கும், மற்றொரு தரப்பினருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. எங்களது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. எனவே உரிய நடவடிக்கை எடுத்து இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மாணவனை அரிவாளால் வெட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர்.

    • மனுநீதி நாள் முகாம் அடுத்த மாதம் 14-ந்தேதி நடைபெற உள்ளது
    • மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மானூர் வட்டம் தடியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் அடுத்த மாதம் 14-ந்தேதி நடைபெற உள்ளது. எனவே அதற்கு முன்னோடியாக வருகிற 23-ந்தேதி தடியம்பட்டி ஊராட்சி மன்ற சமுதாய நலக்கூடத்தில் காலை 10 மணி முதல் 1 மணி வரை மனுக்கள் பெறப்பட உள்ளன. மேற்படி முகாமில் ஆர்.டி.ஓ., மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஆகியோர் கொண்ட குழுவினரால் மனுக்கள் பெறப்படும்.

    முகாம் நிறைவுற்றவுடன் அன்று பிற்பகல் அக்கிராமத்தில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்தும், மேற்படி குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வு குழுவிற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
    • மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.

    நெல்லை:

    மானூர் கிராமப்புற கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வருகிற 16-ந் தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டான்குளம், பிள்ளையார்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக நெல்லை கோட்ட செயற்பொறியாளர் ஜான்பிரிட்டோ தெரி வித்துள்ளார்.

    ×