என் மலர்
நீங்கள் தேடியது "marakkanam"
- பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
- பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர்.
மரக்காணம்:
விழுப்புரம் மரக்காணம் அடுத்த நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன். விவசாயி. இவரது விவசாய தோட்டத்தில் பசு மாடுகள் வளர்க்கிறார். அதில் ஒரு பசுமாடு சினையாக இருந்தது. இந்நிலையில், நேற்று அந்த மாடு அடுத்தடுத்து இரண்டு கன்றுக்குட்டிகளை ஈன்றது.
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் பசுமாடு மற்றும் 2 கன்றுக்குட்டிகளை பார்வையிட்டு சென்றனர். பசுவும், இரண்டு கன்றுகளும் ஆரோக்கியமாக உள்ளன.
கலப்பின மாடுகளுக்கு, செயற்கை கருத்தரிப்பு முறை கையாளப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பில் சினை பிடித்த பசுமாடு, 2 கன்றுகள் ஈன்றுவது அடிக்கடி நடக்கிறது. பசுவையும், கன்றுகளையும் நன்கு பராமரிக்க மரக்காணம் கால்நடைத் துறையின் ஆலோசனைகள் தேவைப்படுவதாகவும் அவர்கள் நேரில் பார்வையிடவும் விவசாயி கதிரவன் கோரிக்கை வைத்துள்ளார்.
- ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன.
- 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதிகளில் 19 மீனவ கிராமங்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. தற்போது மரக்காணம் பகுதிகளில் விவசாய நிலங்களின் மணிலா நெல்லு, மரவள்ளிக்கிழங்கு விவசாய நிலங்களில் பயிரிட்டு உள்ளார்கள். அது தற்போது மழையினால் மூழ்கியது.
கந்தாடு வண்டிப்பாளையம் கிளாப்பக்கம், ஓமிப்பேர், நாமக்கல் மேடுகாயல், மேலே எடசேரி, உப்பு வேலூர், கீழ்பெட்டை, அனுமந்தை, கூனிமேடு, மண்டபாய், ஆலப்பாக்கம் கலியங்குப்பம், செய்யாங்குப்பம் போன்ற கிராமங்களில் 100 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் சாகுபடி செய்தது மழை தண்ணீரில் மூழ்கியது.
அதுபோல், பக்கிங்காம் கால்வாயில் மழைநீர் செல்வதால் வண்டிப்பாளையம் ஆதிகுப்பம் பகுதியில் தண்ணீர் செல்வதால் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 25 கிலோமீட்டர் சுற்றி புதுவைக்கு செல்லும் அவல நிலை உள்ளது.
தற்போது மரக்காணம் பகுதிகளின் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி குளம் குட்டைகள் தண்ணீரில் நிரம்பி வருகின்றன. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் தொழிலாளி.
இவரது மகள் ஷாலினி (வயது 18). இவர் புதுவை அருகே சேதாரபட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் ஷாலினி வீட்டில் டி.வி.பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஷாலினியின் தாய் வீட்டில் எந்த வேலையும் செய்யாமல் இப்படி எப்பொழுதும் டி.வி. பார்த்து கொண்டிருக்கிறாயா? எனக் கூறி ஷாலினியை திட்டினார்.
இதில் மனம் உடைந்த ஷாலினி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். வீட்டில் இருந்தவர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் ஷாலினியை மீட்டு சிகிச்சைக்காக புதுவை தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஷாலினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனுசு (வயது 61). இவருக்கும், நல்லாம்பாக்கத்தைச் சேர்ந்த இவரது தம்பி ராஜாராமனுக்கும் நிலத் தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் ராஜா ராமன், தனுசின் வீட்டுக்கு சென்று அங்கிருந்த தனுசு மற்றும் அவரது மகன் துரை ஆகியோரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றி ராஜாராமன் ஆத்திரம் அடைந்து தனுசு, துரை ஆகியோரை தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த தனுசு, துரை ஆகிய 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து தனுசு, பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபு வழக்குப்பதிவு செய்து ராஜாராமனை கைது செய்தார்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பச்சையப்பன்(வயது 42). இவரது மனைவி ரேவதி(32). இவர்கள் நேற்று இரவு உணவு சாப்பிட்டு விட்டு காற்றுக்காக வீட்டிற்கு வெளியே தூங்கிக்கொண்டிருந்தனர்.
இதனை நோட்டமிட்ட மர்ம வாலிபர் ஒருவர் இன்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த ரேவதியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் தங்கசங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினார்.
இதில் திடுக்கிட்ட எழுந்த ரேவதி திருடன்... திருடன்... என அலறினார். அவரது அலறல் சத்தம்கேட்டு எழுந்த பச்சையப்பன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் நகையுடன் அந்த வாலிபர் தப்பி ஓடிவிட்டார். வாலிபர் திருடிச்சென்ற தங்கசங்கிலியின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ரேவதி மரக்காணம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் ரேவதியின் தங்கசங்கலியை பறித்து சென்ற வாலிபர் புதுவையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அந்த வாலிபரை பிடிக்க போலீசார் புதுவைக்கு விரைந்துள்ளனர்.