என் மலர்
நீங்கள் தேடியது "Markandeyan MLA"
- ஆற்றாங்கரை கிராமத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது.
- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், ஆற்றாங்கரை கிராமத்தில் 2021-2022 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆலோசனை முகாம் நடைபெற்றது. இதில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார். அரசின் சார்பில் கிராமத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், மக்களை தேடி மருத்துவம் உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும் கணவர் இல்லாத வயது முதிர்ந்த பெண்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க துறை சார்ந்த அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், முத்துக்குமார், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன், ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரகுராமர், கால்நடை உதவி மருத்துவர் கருப்பசாமி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரசல்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் முனியசாமி, மகளிர் திட்ட மேலாளர் அருள்செல்வி, வார்டு செயலாளர் லெனின், கிளை செயலாளர்கள் பிச்சை, சிங்கராஜ், கருப்பசாமி உட்பட துறை சார்ந்த அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், பூசனூர் மற்றும் புளியங்குளம் கிராமத்தில் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் பழக்கன்றுகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குனர் சாந்திராணி, வேளாண்மை உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், உதவி பொறியாளர் தமிம்அன்சாரி, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மத்தியஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் ராஜபாண்டி, பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், புளியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி, ஒன்றிய பொருளாளர் முனியசாமி, கிளை செயலாளர் பரமசிவம், கருப்பசாமி, முனியசாமி , வார்டு செயலாளர் மாரிராஜ், வார்டு கவுன்சிலர் செல்வகுமார் சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- புதூரில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
- மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் இந்து நாடார் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா முன்னிலை வகித்தார். வட்டார மருத்துவ அலுவலர் ரவீந்திரன் தலைமையி லான மருத்துவ குழுவினர் கிராம மக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில், ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கான பரிசோ தனை ஆகியவை நடத்தப்பட்டு, மருந்துகள், மாத்திரைகள் வழங்கப்பட்டன.
முகாமில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ஞானகுருசாமி, வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், பச்சைமலை ஆற்றங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சீத்தாராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, புதூர் ஊராட்சி ஒன்றியம், மாதலபுரம் கிராமத்தில் ரூ.2.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் கட்டுமான பணிகளையும், வாதலக்கரை கிராமத்தில் ரூ.1.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலக் கட்டுமான பணிகளையும் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை துரிதப்படுத்துமாறு அறிவுறுத்தினார்.
பின்னர், விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு நேற்று முன்தினம் இரவு நடந்த விபத்தில் உயிரிழந்த சுப்பிரமணி, அருமைநாயகம் ஆகியோர் குடும்பங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. சந்தித்து ஆறுதல் கூறி, 2 குடும்பங்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார்.
- விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது.
- மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது, திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் 3000-மீ ஓட்டப்பந்தயத்தில் வெறும் காலில் ஓடி 3-ம் இடம் பிடித்து வெற்றி பெற்ற லட்சுமிநாராயணபுரம் கிராமத்தைச் சேர்ந்த விளாத்திகுளம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு பயிலும் மாணவி ராதிகாவுக்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஊக்கத்தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியை ரோஸ்லின் சாந்தி, விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, நகர செயலாளர் வேலுச்சாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், வார்டு கவுன்சிலர்கள் வேல்ஈஸ்வரி, அன்பில்நாராயண மூர்த்தி, குறிஞ்சி ராம்குமார், பிரியா முனியசாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மினி மராத்தான் போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகா பெற்றார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது. போட்டியை விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைத்து மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மினி மராத்தான் போட்டி விளாத்திகுளம்-கோவில்பட்டி சாலையில் வைத்து ஆண்களுக்கு 16 கி.மீ., பெண்களுக்கு 10 கி.மீ. என இரண்டு பிரிவாக நடைபெற்றது.
பெண்களுக்கான பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி ராதிகாவும், இரண்டாம் பரிசு ரூ. 14 ஆயிரத்தை புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கோகிலாவும், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளி மாணவி கனகலட்சுமியும் பெற்றனர்.
ஆண்கள் பிரிவில் முதல் பரிசு ரூ.16 ஆயிரத்தை காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி மாணவர் மனோஜ் குமார், இரண்டாம் பரிசு ரூ.14 ஆயிரத்தை அதே பள்ளியை சேர்ந்த முகேஷ், மூன்றாம் பரிசு ரூ.12 ஆயிரத்தை ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரும் பெற்றனர்.
நிகழ்ச்சியில் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன், துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், டேவிட்ராஜ், விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், ராமசுப்பு, சின்னமாரிமுத்து, புதூர் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், கோவில்பட்டி ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன், விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சிப்பிகுளம் பொதுமக்கள் விளாத்திகுளத்தில் இருந்து பஸ் வசதி செய்து தர மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
- புதிய வழித்தட பஸ்கள் இயக்கத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சிப்பிகுளம் கிராம பொதுமக்கள் விளாத்திகுளத்தில் இருந்து பஸ் வசதி வேண்டுமென்றும், அதேபோல் என்.வேடப்பட்டி கிராம பொதுமக்கள் விளாத்திகுளத்தில் இருந்து பஸ் வசதி செய்து தர வேண்டும் என்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் பஸ் நிலையத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்க தொடக்க விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. புதிய வழித்தட பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்து, இனிப்புகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், அரசு போக்குவரத்து கழக மண்டல மேலாளர் அழகர்சாமி, விளாத்திகுளம் பணிமனை மேலாளர் மாடசாமி, பேரூராட்சி தலைவர் அய்யன் ராஜ், பேரூராட்சி துணை தலைவர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, ராமசுப்பு வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன், இம்மானுவேல், சமுக வளைதல பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் இ.வேலாயுதபுரம், மற்றும் பெரியசாமிபுரம் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
- கூட்டத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் இ.வேலாயுதபுரம், மற்றும் பெரியசாமிபுரம் கிராமத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.
மார்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். விழாவில் மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரி முத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், மாவட்ட கவுன்சிலர் நிக்கல் நவமணி, வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், தி.மு.க. பேச்சாளர் சரத் பாலா, மேல்மாந்தை ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா முத்தையாசாமி, வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ் உட்பட தி.மு.க. நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
பின்னர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
அனைவருக்கும் சமத்துவத்தை போதித்த கட்சி தி.மு.க. தான் பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் மக்களை தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
மத்திய அரசு மதப்பிரி வினையை ஏற்படுத்தி அரசியல் செய்கிறது ஆனால் மனிதனாக பிறந்தவனெல்லாம் சமம். அனைவரும் கோவிலுக்கு செல்லலாம். அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற ஒரு உன்னத மான திட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர். அதன் வழியில் தற்போதைய முதல்-அமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார்.
தமிழக முதல்-அமைச்சர் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அதற்கேற்றுவாறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக இல்லம் தேடி கல்வித் திட்டம் பள்ளி சிறுவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். நம்ம ஸ்கூல் திட்டம், இதுபோன்ற பல்வேறு திட்டங்களை முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார்.
கூடிய விரைவில் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி வழங்க திட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் அதை விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி முதல் எட்டயபுரம் வரை சாலைகளின் இரு புறமும் மொத்தம் 34 கிலோமீட்டர் தூரம் மரங்கள் நடப்படுகிறது.
- மரங்களுக்கு அமைக்கப்படும் கம்பி வேலியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி முதல் எட்டயபுரம் வரை சாலைகளின் இரு புறமும் மொத்தம் 34 கிலோமீட்டர் தூரம் மரங்கள் நடப்படுகிறது. முதற்கட்டமாக பிள்ளையார்நத்தம் முதல் சாலைகளின் இரு புறங்களிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நாளை முதல் கட்டமாக 4 கிலோமீட்டர் தூரம் நடப்படும். இதையொட்டி மரங்களுக்கு அமைக்கப்படும் கம்பி வேலியினை விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நிகழ்ச்சியில் மரங்கள் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராகவன், மரங்கள் மக்கள் இயக்கம் அமல்ராஜ், முருகன், சென்னை குமார், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
- முதலாவதாக நடை பெற்ற சிறிய மாட்டு வண்டி போட் டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே மேல்மாந்தை கிராமத்தில் பெத்தனாச்சி அம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் நெல்லை, தென்காசி, விருதுநகர்,தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டி போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். போட்டி வேம்பார் - தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டி, சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
சிறய மாட்டு வண்டி களுக்கு வெற்றி இலக்காக 10 கிலோமீட்டர் தூரமும், பெரிய மாட்டு வண்டிகளுக்கு 8 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும், பூஞ்சிட்டு மாட்டு வண்டிகளுக்கு 6 கிலோமீட்டர் தூரம் வெற்றி இலக்காகவும் நிர்ணயிக்கப்பட்டது.
முதலாவதாக நடை பெற்ற சிறிய மாட்டு வண்டி போட் டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடி யசைத்து தொடங்கி வைத்தார். இதில் 38 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
2-வது போட்டியாக பெரிய மாட்டு வண்டி பந்தயத்தை விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 14 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. 3-வதாக பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் 15 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.
சிறிய மாட்டுவண்டி போட்டியில் முதல் பரிசை புதியம்புத்தூர் விஜயகுமார் மாட்டு வண்டியும், பெரிய மாட்டு வண்டியில் முதல் பரிசை கடுகுசந்தை மோகன் மாட்டு வண்டியும், பூஞ்சிட்டு பந்தயத்தில் கயத்தாறு சரவணன் மாட்டு வண்டியும் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளருக்கும், சாரதிகளுக்கும் பரிசுகள் மற்றும் ரொக்க பணம் வழங்கப்பட்டது. விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று மாட்டு வண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சின்ன மாரி முத்து, வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல்,சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- என்.ஜெகவீரபுரத்தில் புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
- திறப்பு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட என்.ஜெகவீரபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் ரூ .13.80 லட்சம் மதிப்பிலான புதிய ரேஷன் கடையை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் புதூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், வெங்கடாசலம், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, என்.ஜெகவீரபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அழகு பாண்டி, கூட்டுறவு சங்கத்தலைவர் கண்ணன், கூட்டுறவு சங்க செயலர் ராமச்சந்திரன், கிளைச் செயலாளர்கள் இளங்கோவன், பவுன்ராஜ், பால்ச்சாமி, சென்னையன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வசீனிவாசகம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ்குமார், தகவல் தொழில்நுட்ப அணி காளிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- விளாத்திகுளம், புதூரில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார்.
விளாத்திகுளம்:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் விளாத்திகுளம், புதூரில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் கீழ் 6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது.
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கி பேசினார். இதில், விளாத்திகுளம், புதூர் வட்டாரத்தில் 6 மாதம் வரையிலான 159 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. விழாவில், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் தாஜூன்னிசா பேகம், திலகா, வட்டார மருத்துவர்கள் இன்பராஜ், விபிகா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமார், தங்கவேல், பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜன், மும்மூர்த்தி, செல்வராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மேலவெங்கடேசபுரம் கிராமத்தில் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
- நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர்கள் சரவணன், ராமச்சந்திரன், மூத்த பொது மேலாளர் தங்கராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்:
புதூர் ஊராட்சி ஒன்றியம், மேலவெங்கடேசபுரம் கிராமத்தில் ராம்கோ நிறுவனத்தின் சி.எஸ்.ஆர். திட்டத்தின் கீழ் ரூ.16.51 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப் பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தையும், ரூ.9.15 லட்சம் கிராம கண்மாயில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள படித்துறை யையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ராம்கோ நிறுவனத்தின் துணை பொது மேலாளர்கள் சரவணன், ராமச்சந்திரன், மூத்த பொது மேலாளர் தங்கராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி முருகேசன், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் அய்யாதுரை, மாவட்ட கவுன்சிலர் ஞான குருசாமி, கிளை செயலாளர் கனகராஜ், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.