என் மலர்
நீங்கள் தேடியது "Markanteyan MLA"
- விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனப் பொருட்கள் வழங்கினார்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 350 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீதனப் பொருட்களான தட்டு, புடவை, வளையல், பூ, மஞ்சள், குங்குமம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் தாஜுன்னிசா பேகம், மாவட்ட திட்ட அலுவலர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தங்கவேல், மருத்துவர் பிரபா, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, நகர செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கொண்டனர்.
- கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
- மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கிராம இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார்நத்தம் கிராமத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பாக மரங்கள் வளர்ப்பதற்கும், கிராமத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் கிராம மக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டவாறு மார்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பிள்ளையார்நத்தம் முதல் வேலிடுபட்டி செல்லும் சாலையில் அமைக்கப்படும் பாலங்களின் கட்டுமான பணிகளை பார்வையிட்டு பருவ மழைக்கு முன்பாக பணியினை துரிதமாக முடிக்குமாறு அதிகாரி களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. முன்னிலையில் கிராம இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர் முனீஸ்வரி, மரங்கள் மக்கள் இயக்க நிர்வாக அதிகாரி ராகவன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் இம்மானு வேல், மகேந்திரன், சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் உடனிருந்தனர்.