என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Markazhi"

    • மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.
    • மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    மாதங்களில் நான் மார்கழி என்பது கீதாசார்யனின் அமுதமொழி.

    வைகுண்ட ஏகாதசி வருவதால் வைஷ்ணவர்களுக்கும், ஆருத்ரா வருவதால் சைவர்களுக்கும் உகந்த மாதம் மார்கழி.

    ஏகாதசி திதி தோன்றியதும் இந்த மாதத்தில் தான்.

    கிருதயுகத்தில் முரன் என்ற ஓர் அசுரன் இருந்தான். தேவர்கள் உட்பட அனைவரையும் அவன் துன்புறுத்தினான்.

    தேவர்களின் பிரார்த்தனைக்கு இறங்கி, மகா விஷ்ணு முரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

    முரனின் படைக்கலன்களை எல்லாம் அழித்த பகவான், அவன் திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் என்று திருவுள்ளம் கொண்டார்.

    அதன்படி போர்க்களத்திலிருந்து விலகி, பத்ரிகா ஆசிரமத்தில் இருந்த ஒரு குகையில் போய் உறங்குவது போல் படுத்துக்கொண்டார்.

    பகவானைத் தேடிக்கொண்டு அந்தக் குகைக்கு வந்த முரன், பகவான் உறங்குவதாக நினைத்துக் கொண்டு, அவரைக் கொல்ல வாளை ஓங்கினான்.

    அப்போது மகா விஷ்ணுவின் திருமேனியிலிருந்து ஓர் அழகான பெண் தோன்றினாள்.

    ஆயுதங்களுடன் காட்சி தந்த அந்தப் பெண், முரனை போருக்கு அழைத்தாள்.

    பெண்ணென்று அலட்சியமாக நினைத்த முரன், 'பெண்ணே, உன்னை கொல்ல ஓர் அம்பே போதும்' என்று அம்பை எடுக்க முனைந்தபோது, அந்த பெண், "ஹூம்்" என்று ஓர் ஒலி எழுப்பினாள்.

    அவ்வளவில் முரன் பிடி சாம்பலாகிப்போனான்.

    ஏகாதசி

    அதே நேரத்தில் ஏதுமறியாதவர் போல் கண் விழித்த பகவான், தன் திருமேனியிலிருந்து வெளிப்பட்ட

    சக்தியைப் பாராட்டியதுடன், அவளுக்கு ஏகாதசி என்ற பெயரையும் சூட்டி,

    "ஏகாதசியே, நீ தோன்றிய இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுபவர்களுக்கு, சகல செல்வங்களையும்

    அருள்வதுடன், முடிவில் வைகுண்ட பதவியையும் அருள்வேன்" என்று அருளினார்.

    • மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி ‘உற்பத்தி ஏகாதசி’ ஆகும்.
    • மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    மார்கழி மாத தேய்பிறையில் தோன்றிய ஏகாதசி 'உற்பத்தி ஏகாதசி' ஆகும்.

    மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி வைகுண்ட ஏகாதசி ஆகும்.

    அதுவே மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது.

    மார்கழி ஏகாதசி

    ஏகாதசி என்றால் பதினொன்று என்று பொருள்.

    ஞானேந்திரியம் ஐந்து, கர் மேந்திரியம் ஐந்து, மனம் ஒன்று என்னும் பதினொன்றும் பகவானிடம் ஈடுபடுவதே ஏகாதசி விரதமாகும்.

    அந்த நாளில் பகவானை மட்டுமே நினைத்து, அவன் புகழ்பாடி விரதமிருந்தால், மனக்கவலைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை ஏற்படும் என்பது ஐதீகம்.

    • இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.
    • பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

    இரண்டு அசுரர்களை முன்னிட்டு தோன்றியது வைகுண்ட ஏகாதசி.

    முற்காலத்தில் பிரம்மாவுக்கு ஏற்பட்ட அகங்காரத்தை ஒடுக்க நினைத்த மகா விஷ்ணு, தன் காதுகளிலிருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்படச் செய்தார்.

    அவர்கள் பிரம்மாவை கொல்ல முயன்ற போது, அவர்களைத் தடுத்த மகாவிஷ்ணு, பிரம்மாவை விட்டு விடும் படியும்,

    அவர்கள் கேட்கும் வரத்தை தருவதாகவும் கூறினார்.

    அந்த அசுரர்கள் மகா விஷ்ணுவிற்கு வேண்டுமானால் தாங்கள் வரம் தருவதாகக் கூறினர்.

    மகா விஷ்ணுவும் தன்னால் அவர்கள் வதம் செய்யப்பட வேண்டும் என்ற வரத்தை கேட்டார்.

    அசுரர்களானாலும் கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைத்த அசுரர்கள், தங்களை சமாளித்துக் கொண்டு,

    'பகவானே, ஒரு விண்ணப்பம், தாங்கள் ஒரு மாதம் எங்களுடன் யுத்தம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகே நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்' என்று வேண்டினார்கள்.

    பகவானும் அப்படியே வரம் தந்தார். யுத்தத்தின் முடிவில் பகவான் அவர்களை வீழ்த்தினார்.

    பகவானின் மகிமைகளை உணர்ந்த அசுரர்கள், அவனின் பரமபதத்தில் தாங்கள் நித்தியவாசம் செய்ய வேண்டும் என்ற வரத்தை கேட்டனர்.

    மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியன்று பரமபதத்தின் வடக்கு வாசலை (சொர்க்க வாசல்) திறந்து, அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்துக்கொண்டார்.

    அசுரர்கள் தாங்கள் பெற்ற பேரின்பம் அனைவரும் பெற வேண்டும் என்று விரும்பி, பகவானே,

    தங்களை ஆலயங்களில் விக்கிரக வடிவில் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று,

    தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை ஓர் உற்சவமாக கடைபிடிக்க வேண்டும்

    அன்று ஆலயத்தின் சொர்க்க வாசல் வழியாக எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் சொர்க்க வாசல்

    வழியாக வெளியே வருபவர்களும் மோட்சம் அடைய வேண்டும் என்று வரம் கேட்டனர்.

    பரம தயாளனாகிய பகவானும் அவர்கள் கேட்டபடியே வரம் அருளினார்.

    • பகவானும் பிரம்ம தேவர்களுக்கு காட்சியளித்து அவர்களை காத்தருளினாராம்.
    • மறு பிறவியில் வைகுண்டவாசம் சொர்க்க வாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    ராவணனின் இன்னல்களை சகிக்க முடியாத தேவர்கள் பிரம்மாவுடன் வைகுண்டம் சென்று மார்கழி மாத சுக்லபட்ச

    (வளர் பிறை) ஏகாதசியன்று நாராயணனை வணங்கி தங்கள் துன்பங்களை கூறினர்.

    பகவானும் பிரம்ம தேவர்களுக்கு காட்சியளித்து அவர்களை காத்தருளினாராம்.

    இவ்வாறு தேவர்களின் துன்பத்தை போக்கியதால் வைகுண்ட ஏகாதசிக்கு முக்கோடி ஏகாதசி என்ற பெயரும் உண்டு.

    தேவர்களும், அசுரர்களும் அமுதம் பெற வேண்டி இரவும், பகலும் விரதம் இருந்து பாற்கடலை கடைந்தபோது

    அமுதம் வெளிப்பட்டது என்றும், துவாதசியன்று மகாலட்சுமி சமுத்திரத்தில் இருந்து வெளியே வந்து

    தேவர்களுக்குத் திருக்காட்சி அளித்து அவர்களுக்கு அருளாட்சி புரிந்தார் என்றும்,

    அன்று முதல் ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹா விஷ்ணுவை துதிப்போருக்கு

    இந்த பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன் மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு,

    மறு பிறவியில் வைகுண்டவாசம் சொர்க்க வாசல் வழங்குவதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.

    • புத்ரதா - தை - சுக்ல-- புத்ர பாக்கியம் கிடைக்கும்.
    • பாப மோசனிகா - சித்திரை - க்ருஷ்ண-பாவங்கள் அகலும்.

    1. உற்பத்தி (ஏகாதசி),- மார்கழி - கிருஷ்ண (பக்ஷம்)-சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

    2. மோட்ச - மார்கழி-சுக்ல - வைகுண்டம் கிடைக்கும்.

    3. ஸபலா - தை - க்ருஷ்ண- -பாபநிவர்த்தி.

    4. புத்ரதா - தை - சுக்ல-- புத்ர பாக்கியம் கிடைக்கும்.

    5. ஷட்திலா - மாசி - க்ருஷ்ண- - அன்னதானத்திற்கு ஏற்றது.

    6. ஜயா - மாசி - சுக்ல-- பேய்க்கும் மோட்சம் உண்டு.

    7. விஜயா - பங்குனி- க்ருஷ்ண-ராமர் சீதையை மீட்க, பகதாப்யர் எனும் முனி வரின் உபதேசப்படி, விரதம் இருந்த நாள்.

    8. ஆமலதீ - பங்குனி - சுக்ல- -கோ தானம் செய்ய ஏற்றது.

    9. பாப மோசனிகா - சித் திரை - க்ருஷ்ண-பாவங்கள் அகலும்.

    10. காமதா - சித்திரை - சுக்ல - நினைத்த காரியம் நடக்கும்.

    11. வருதிந் - வைகாசி க்ருஷ்ண-ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

    12. மோஹினி - வைகாசி-- சுக்ல - பாவம் நீங்கும்.

    13. அபார - ஆனி - க்ருஷ்ண- குரு நிந்தனை, பொய் சாட்சி போன்றவை அகலும்.

    14. நிர்ஜலா (பீம) - ஆனி- சுக்ல - எல்லா ஏகாதசி பலனும் உண்டு.

    15. யோகினீ - ஆடி- க்ருஷ்ண - நோய் நீங்கும்.

    16. சயிநீ - ஆடி - சுக்ல-தெய்வ சிந்தனை அதிகமாகும்.

    17. சாமிகா - ஆவணி க்ருஷ்ண-விருப்பங்கள் நிறைவேறும்.

    18. புத்ரஜா - ஆவணி - சுக்ல- புத்ர பாக்கியம் கிடைக்கும்.

    19. அஜா - புரட்டாசி க்ருஷ்ண-இழந்ததை பெறலாம்.

    20. பத்மநாபா - புரட்டாசி -சுக்ல-பஞ்சம் நீங்கும்.

    21. இந்திரா - ஐப்பசி - க்ருஷ்ண -பித்ருக்கள் நற்கதி பெறுவர்.

    22. பாபாங்குசா - ஐப்பசி சுக்ல-கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும், பாவங்கள் அகலும்.

    23. ரமா - கார்த்திகை க்ருஷ்ண-உயர்ந்த பதவி, வைகுண்ட பதவி கிடைக்கும்.

    24. ப்ரபோதின் - கார்த்திகை சுக்ல-பொதுவாக உயர்ந்த நன்மைகள் உண்டாகும்.

    25. கமலா-மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

    • மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    • ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினோராம் தினம் என்று பொருள்.

    மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    திருமங்கையாழ்வார் இந்த ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி உற்சவமாக கொண்டாட ஏற்பாடு செய்தார்.

    ஏகாதசி என்ற சொல்லுக்கு பதினோராம் தினம் என்று பொருள்.

    ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள், மனம் அனைத்தையும் பெருமாளுடன் ஐக்கியப் படுத்தி தியானம் இருப்பதே ஏகாதசி விரதம்.

    உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம்.

    தென் மாவட்டங்களில் தோசை, இட்லி சகிதமாகவும், வட மாவட்டங்கள் சிலவற்றில் பலவகை டிபன் சகிதமாகவும் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கின்றனர்.

    விரதத்தன்று சாதம் மட்டும் சாப்பிடக்கூடாது, வேறு எது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இவர்கள் நினைக்கிறார்கள்.

    ஆனால், ஏகாதசி விரதம் இருப்பவர்கள் பூரண உபவாசம் (பட்டினி) இருக்க வேண்டும்.

    குளிர்ந்த நீர் குடிக்க தடையில்லை.

    ஏழு முறை துளசி இலை சாப்பிட வேண்டும்.

    ஏகாதசி குளிர் மாதமான மார்கழியில் வருவதால், உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிட வேண்டும்.

    பட்டினி கிடப்பதால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.

    • அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.
    • கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள்துவாதசியன்று நடத்த வேண்டும்.

    அன்று கோவில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.

    கூடுமான வரை கோவில்களில் பிரசாதம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகள், நோயாளிகள், முதியவர்களுக்கு கொடுக்கலாம்.

    ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான்.

    இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது.

    தேவையானதை முதல்நாளே பறித்து வைத்துவிட வேண்டும்.

    • இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மட்டுமே.
    • உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோவிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார்.

    இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களை கொண்ட கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மட்டுமே.

    இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும்.

    பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும்.

    ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கோவிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர்.

    ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு.

    உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோவிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார்.

    மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு.

    இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

    • பல்வேறு சிறப்புகளையுடைய “வைகுண்ட ஏகாதசி” என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.
    • ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.

    பல்வேறு சிறப்புகளையுடைய "வைகுண்ட ஏகாதசி" என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.

    ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.

    எல்லா ஊர்களிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

    என்றாலும், ஸ்ரீரங்கத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.

    பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி எப்படி விசேஷமோ, தீபம் என்றால் திருவண்ணாமலை எப்படி விசேஷமோ, அப்படி வைகுண்ட ஏகாதசி விசேஷம் கொண்டது ஸ்ரீரங்கம்.

    • இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள்.
    • கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான்.

    நமது ஒரு வருஷம் தேவர்களுக்கு ஒரு நாளாகும். அந்த வகையில் மார்கழி மாதமானது தேவர்களுக்கு விடியற்காலை நேரம்.

    அதாவது சூரியன் உதிப்பதற்கு முன்புள்ள 2 நாழிகை நேரமே தேவர்களின் விடியற்காலமாக கருதப்படுகிறது.

    இந்த 2 நாழிகை நேரத்தை பிரம்ம முகூர்த்த நேரம் என்பார்கள்.

    இந்த நேரத்தில் தான் தேவர்கள் கோவிலுக்குச் சென்று திருப்பள்ளி எழுச்சி சொல்வார்கள்.

    இறைவன் கண் விழித்ததும் முதல் ஆராதனையை செய்வார்கள்.

    அந்த சமயத்தில் நாமும் வழிபாடு நடத்தினால் பகவானின் அருளை மிகச் சுலபமாக பெற முடியும்.

    அதனால் தான் மார்கழி மாதம் மங்களகரமான, புண்ணிய மாதமாக கருதப்படுகிறது.

    மாதங்களில் நான் மார்கழி என்று பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார்.

    பாரத யுத்தம் இந்த மாதம் தான் நடந்தது. பகவத் கீதை அருளப்பட்டது மார்கழியில் தான்.

    திருப்பாற்கடல் கடையப்பட்டதும், அதில் இருந்து தோன்றிய விஷத்தை சிவபெருமான் உண்டதும் மார்கழி மாதத்தில்தான் என்று புராணம் சொல்கிறது.

    அய்யப்பன், ஆஞ்சநேயர் அவதரித்ததும், ஆண்டாள் அதிகாலையில் எழுந்து நீராடி, திருப்பாவை பாடி திருமால் மனதில் இடம் பிடித்ததும் இந்த மாதத்தில்தான்.

    கிருஷ்ணர் கோவர்த்தன மலையை குடையாக பிடித்து மக்களை காத்தது மார்கழி மாதத்தில்தான்.

    இத்தகைய சிறப்புடைய மார்கழி மாதத்தை சிலர் மனம் போன போக்கில் பீடை மாதம் என்கிறார்கள்.

    உண்மையில் மார்கழியை நம் முன்னோர்கள் "பீடுடை மாதம்" என்றழைத்தனர்.

    பீடுடை என்றால் சிறப்பான மங்களகரம் நிறைந்தது என்று பொருள்.

    பீடுடை என்ற வார்த்தை உச்சரிப்பில் திரிந்து, மருவி பீடை என்றாகி விட்டது.

    இனியாவது மார்கழியை பீடை மாதம் என்று சொல்லாதீர்கள்.

    எல்லா சிறப்புகளும் வாய்ந்த மார்கழி மாதம் முழுவதும் இறைவழிபாடு செய்தால் ஒரு வருடம் முழுவதும் இறைவனை வழிபட்ட பலன் கிடைக்கும்.

    திருப்பாவை, திருவெம்பாவை ஓதி வழிபட்டால் நம் பாவங்கள் அழிந்து புண்ணியம் வந்து சேரும்.

    மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசியன்று உண்ணா நோன்பு இருந்து பரமபத வாசல் தரிசனம் செய்தால் எல்லா பலன்களும் கிடைக்கும்.

    எல்லா வைணவத் தலங்களிலும் பரமபதவாசல் உண்டு.

    • திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு.
    • மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    திருமாலுக்குரிய திவ்ய தேசங்கள் 108. அவற்றில் நாம் பூமியில் காண முடியாதது இரண்டு.

    ஒன்று வைகுண்டம், மற்றது பரமபதம்.

    விஷ்ணுவை எப்போதும் பாடிப் பரவுகின்ற பக்தர்கள், பகவானின் அணுக்கத் தொண்டர்களாக வசிப்பது இந்தப் பரமபதத்தில் தான்.

    அந்தப் பரமபதத்தில் பகவானுடன் உறையும் பெருமையைப் பெறுவதான வாயில்தான் பரமபத வாசல்.

    ஒரு சமயம் பிரளயத்தில் மூழ்கிவிட்ட உலகத்தை மீண்டும் படைத்த திருமால், மற்ற உயிரினங்களை உண்டாக்க பிரம்மாவை படைத்தார்.

    அப்போது பிரம்மாவை வதைக்க 2 அசுரர்கள் வந்தனர். அவர்களை திருமால் அழித்தார்.

    அப்போது அந்த 2 அசுரர்களும் திருமாலிடம், "நாங்கள் ஸ்ரீவைகுண்டத்தில் வாசம் செய்யும் பாக்கியம் தர வேண்டும்" என்றனர்.

    அதை ஏற்றுக் கொண்ட திருமால் அவர்கள் இருவரையும் மார்கழி மாத சுக்ல ஏகாதசியன்று வடக்கு நுழைவாயில் வழியாக பரமபதத்துக் அனுப்பி வைத்தார்.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த 2 அசுரர்களும் எங்களுக்கு அருளிய இந்த பரமபத சொர்க்க வாசலை பூமியில் திருவிழாவாக கொண்டாட வேண்டும்.

    அதோடு இந்த வாசல் வழியாக வரும் உங்களை தரிசிப்பவர்களுக்கும், இவ்வாசல் வழியாக வருபவர்களுக்கும்,

    அவர்கள் எவ்வளவு பெரிய பாவியாக இருந்தாலும் முக்தி அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

    அதன்படியே மார்கழி சுக்ல ஏகாதசியன்று பரமபத வாசல் திறக்கப்படுகிறது.

    அதை உணர்த்தும் விதமாகத்தான், பெருமான் தானே வைகுண்ட ஏகாதசியன்று பரமபத வாசல் வழியே பக்தர்கள் புடைசூழ வருகிறார்.

    "என்னோடிருப்பீர்களாக" என்று பக்தர்களுக்கு அருளை அளிக்கிறார்.

    • காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும்.
    • அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.

    வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் நீராடி நெற்றியில் நாமம் அல்லது திருநீறு பூசி,

    துளசியும், தீர்த்தமும் அருந்த வேண்டும்.

    காலை 3 மணிக்கு பக்தி பாடல்களை பாட வேண்டும்.

    3.30 மணிக்கு சமையலைத் துவங்கி பல்வேறு வகை கறிகளுடன் (தென்மாவட்டங்களில் 21 கறி வைப்பார்கள்) உணவு தயாரிக்க வேண்டும்.

    சூரிய உதயத்திற்குள் சமையல் முடித்துவிட வேண்டும்.

    அகத்திக்கீரை பொறியல், நெல்லிக்காய் துவையல், வறுத்த சுண்டைக்காய் ஆகியவை முக்கியமானவை.

    இதை குடும்பத்தாருடன் சேர்ந்து சாப்பிட வேண்டும்.

    ஆனால், துவாதசியன்று இரவில் சாப்பிடக்கூடாது.

    ×