என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marks low"

    • மனோநாராயணன் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்
    • கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் மனோநாராயணன்(வயது 20). இவர் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் கோச்சிங் சென்டரில் படித்து வந்துள்ளார்.

    ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி அடையவில்லை என்பதால் 2-வது முறை தேர்வு எழுத பயிற்சி பெற்று வந்துள்ளார். கோச்சிங் சென்டரில் மாதம்தோறும் நடைபெறும் மாதிரி பயிற்சி தேர்வில் தொடர்ந்து குறைவாக மதிப்பெண் பெற்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மனோ நாராயணன் நேற்று மாலை வீட்டில் இருந்த விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    அவரை அவரது குடும்பத்தினர் மீட்டு கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலன் இல்லாமல் மனோநாராயணன் உயிரிழந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×