search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage hall"

    • மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மண்டபத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பாலக்கோடு:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்குட்பட்ட நல்லூர் ஊராட்சி சென்னப்பன் கொட்டாய் கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய திருமணம் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறக்கப்பட்டது.

    மண்டபத்திற்க்கு அடிப்படை தேவைகளான சமையல் பாத்திரம், நாற்காலி, கேஸ் அடுப்பு, மணமக்கள் நாற்காலிகள் உள்ளிட்ட ரூ.5 இலட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் திருமன மண்டபத்தில் புகுந்து நாற்காலி, எலக்ட்ரிக் சுவிட்ச், கழிவறை பைப்புகள், ஜன்னல் கண்ணாடி, சாமிபடம் உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதபடுத்தி சென்றுள்ளனர்.

    அவ்வழியாக சென்றவர்கள் மண்டபம் திறந்து கிடப்பதையும், பொருட்கள் சேதமாகி உள்ளதையும் கண்டு மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த மாரண்ட அள்ளி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து மண்டபத்தில் உள்ள பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும்.
    • சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி நாடாளுமன்றத் தொகுதி மற்றும் மயிலம் சட்டமன்றத் தொகுதி பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு தலைமையில் ரெட்ட ணையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பா ளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமை ச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசும் போது ,

     இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்து, வருகின்ற நாடாளு மன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். திருவ ண்ணாமலையில் நடைபெற இருக்கின்ற பாக முகவர்கள் மண்டல மாநாட்டிற்கு வருகின்ற 22 -ந்தேதி வருகை தரும் தி.மு.க. தலைவர், தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலினுக்கு விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய இடங்களில் சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், மாசிலாமணி செந்தமி ழ்செல்வன்,தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய செயலாள ர்கள் மணிமாறன், செழியன், அண்ணாதுரை, ராஜாராம், துரை, இளம்வழுதி, ஒன்றிய குழு தலைவர்கள் அமுதா ரவிகுமார், யோகேஸ்வரி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.சின்னசாமி ,பொதுக்குழு உறுப்பினர் வீடுர் ரவி, மாவட்ட விவசாய அணி துணை தலைவர் நெலி சுப்பிரமணி, சாந்தி ஏழுமலை மற்றும் பாக முகவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விக்கிரமங்கலத்தில் அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அறிமுக கூட்டம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் விக்கிரமங்கலம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் பாண்டி தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஐ.மகேந்திரன் சிறப்புரையாற்றினார். தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளரும் உசிலம்பட்டி நகர்மன்ற உறுப்பினருமான பிரகதீஸ்வரன், அம்மா தொழிற்சங்க செயலாளர் பாண்டியன், மாவட்டத் துணைச் செயலாளர் நிலையரசி, மாவட்ட பேரவை தலைவர் செந்தில், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் தமிழ்ச்செல்வன், பால்சாமி, ராஜா, வாலிப்பாண்டி, மணிகண்டன், சீர்காளன், மலேசியா பாண்டியன், குணசேகர பாண்டியன், ராமகிருஷ்ணன், ரகுபதி, ஜெயக்கொடி, பெரியகருப்பன், மணிமாறன், முத்தையா, பிரபு, பாலசுப்பிரமணியன் மற்றும் செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது.
    • ரூ.7.50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து கீழ் செயல்படும் பாகூர் கமலா நேரு திருமண மண்டபத்திற்கு நீண்ட நாட்களாக வாகனம் நிறுத்துமிடம் இல்லாமல் அப்பகுதி மக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து பாகூர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ 7.50 லட்சம் செலவில் வாகனம் நிறுத்துமிடம் அமைக்க செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஏற்பாடு செய்தார்.

    இதற்கான பணி முடிந்த நிலையில் திறப்பு விழா  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக செந்தில்குமார் எம்எல்ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், மேலாளர் ரவி, இளநிலை பொறியாளர் புனிதவதி, மற்றும் அப்பகுதி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2 தளத்துடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைபிரியா, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி செண்பக வல்லி அம்பாள் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சுமார் ரூ.2 கோடி 10 லட்சம் மதிப்பீட்டில் 2 தளத்துடன் கூடிய திருமண மண்டபம் கட்டும் பணியை சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர், செயற்பொறியாளர் கணேசன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, கழுகுமலை பேரூராட்சி துணை தலைவர் சுப்பிரமணி, இந்து சமய அறநிலையத்துறை உதவிக் கோட்ட பொறியாளர் சத்யன், உதவி பொறியாளர் ரெங்கசாமி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி,

    இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவகலைபிரியா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகேசன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் இந்துமதி கவுதம், தி.மு.க. வர்த்தக அணி நிர்வாகி சேதுரத்தினம், பொறியாளர் அணி ரமேஷ், நகர் மன்ற உறுப்பினர்கள் ஏஞ்சலா, சண்முகவேல், லவராஜா, விஜயக்குமார் (பா.ஜ.க.), சுதாகுமாரி, உலகராணி, சித்ரா, புவனேஸ்வரி, தி.மு.க. நிர்வாகிகள் மணி, மாரிச்சாமி, சின்னத்துரை, ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.
    • மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    செயற்கைக்கோளின் செயல்பாடு மற்றும் அதை விண்ணில் ஏவுவது குறித்து மாணவர்களுக்கு நேரடியாக விளக்க பயிற்சியை அப்துல்கலாம் அறக்கட்டளை நடத்தி வருகிறது.

    புதுவை அரசு பள்ளி மாணவிகளுக்கான செயல் விளக்க கருத்தரங்கு பஸ் நிலையம் பின்புறம் உள்ள மங்கலட்சுமி திருமண நிலையத்தில் இன்று நடைபெற்றது.

    சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

    கணினி மற்றும் எல்.இ.டி. ஸ்கிரீன் மூலம் மாணவர்களுக்கு விளக்கம் செய்யப்பட்டு கொண்டிருந்த போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீ விபத்து ஏற்பட்டது.

    இதனால் ஆசிரியர்களும் மாணவியரும் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர். அதற்குள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மின் கசிவு, தீ விபத்தையும் தடுத்தனர்.

    இதனால் அப்பகுதியில் 10 நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது. மின்துறைக்கு தகவல் தெரிவித்தவுடன், அதிகாரிகள் நேரில் வந்து மின் இணைப்பை சரி செய்தனர். 15 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிகழ்ச்சி தொடர்ந்தது.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.
    • மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன், துணைமேயர் கே.ஆர்.ராஜூ, கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கினர்.

    தச்சநல்லூர் ஆனந்த புரத்தை சேர்ந்த முருகன் என்பவர் அளித்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    நான் நயினார்குளம் நீர்பாசன உதவி செயலாளராக இருந்து வருகிறேன். எங்கள் பகுதியில் 180-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பகுதியில் திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் நடைபெறவில்லை.

    தற்போது எம்.எல்.ஏ. நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்ட அறிவிப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது. அதனை ஏற்கனவே அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்கத்தொட்டியை சுற்றி காம்பவுண்டு சுவர் கட்டித்தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டெல்லி ரஜோரி பூங்கா பகுதியில் ஒரு திருமணத்திற்காக பிரமாண்ட மான பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பந்தலில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

    தீ மளமளவென பந்தல் முழுவதும் பரவியது. இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி அவர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் பந்தல் முழுவதும் சேதம் அடைந்தது. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. நல்ல வேளையாக நள்ளிரவில் தீப்பிடித்ததால் பெரிய அளவிலான விபத்து தடுக்கப்பட்டது.

    இந்நிலையில், தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    • ரூ. 3.70 கோடி மதிப்பில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
    • திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    திருமங்கலம்

    இந்து சமய அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமங்கலம் வேங்கடசமுத்திரம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான 12 ஏக்கர் நிலம் திருமங்கலம் பாண்டியன் நகர் அருகே உள்ளது.

    இந்த இடத்தில் பொது மக்கள் பயன்படுத்தும் விதமாக திருமண மண்டபம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது இதையடுத்து மண்டபம் கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய ப்பட்டு அனுப்பி வைக்க ப்பட்டது.

    தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 3.70 கோடி மதிப்பீட்டில் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது.

    மண்டபத்தில் ஒரே நேரத்தில் 268 பேர் அமர்ந்து பார்க்கக் கூடிய வசதியுடன் 238 பேர் ஒரே நேரத்தில் சாப்பிடும் விதமாகவும் 15,000 சதுர அடியில் மண்டபம் கட்டப்படவுள்ளது. இந்த பூமி பூஜையில் திருமங்கலம் நகர் மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதியமான், கவுன்சிலர்கள் திருக்குமார், வீரக்குமார், வினோத் மற்றும் நிர்வாக அதிகாரி ரம்யா சுபாஷினி, தக்கார் சக்கரை அம்மாள், திருமங்கலம் அறநிலைய துறை ஆய்வாளர் சாந்தி, கோவில் உதவி அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    திருமணமண்டபத்துக்கு சான்று வழங்க ரூ.6 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதாரத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த திலோக் சந்துரு என்ற வக்கீல் அவரது திருமண மண்டபத்திற்கு சுகாதார தரச்சான்று வழங்கக்கோரி சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

    இதுகுறித்து சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் (தொழில்நுட்ப பிரிவு) சுந்தர்ராஜ் ஆய்வு செய்துள்ளார். பின்னர் சான்று வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வழங்க வேண்டும் என்று திலோக்சந்துருவிடம் அவர் கேட்டுள்ளார்.

    அதன்பிறகு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ரூ.6 ஆயிரமாக குறைக்கப்பட்டது. லஞ்சம் கொடுக்க மனமில்லாத அவர் இதுகுறித்து திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், திலோக்சந்துருவிடம் ஆலோசனை வழங்கி ரசாயனம் தடவிய 6 ஆயிரத்திற்கான ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். அவர்களது அறிவுரையின் பேரில், திருவண்ணாமலை பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியில் இருந்த நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜிடம் ரூ.6 ஆயிரத்தை திலோக் சந்துரு கொடுத்தார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக சுந்தர்ராஜை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். #tamilnews
    அரூர் அருகே சித்தேரியில் ரூ.50 லட்சம் மதிப்பில் திருமண மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் அன்புமணி எம்.பி. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். #anbumani
    அரூர்:

    தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் அரூர் சட்டமன்ற தொகுதி சித்தேரியில் நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்படத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 

    பின்னர் அவர் பேசியதாவது, இப்பகுதி மக்களின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய திருமண மண்டபம் கட்டப்பட உள்ளது. மக்கள் அதனை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என பேசினார். மேலும் அப்பகுதி மக்கள் இம்மலை பகுதியில் உள்ள குக்கிராமங்களுக்கு சாலை வசதி செய்து தர வேண்டும், மேலும் செல்போன் டவர் இல்லாததால் சில கிராமங்களில் போன் வசதி பெற இயலாமல் உள்ளது எனவே செல்போன் டவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தனர்.

    செல்போன் டவர் அமைப்பது குறித்து ஏற்கனவே பி.எஸ்.என்.எல். அதிகாரிகளிடம் முறையிடப்பட்டுள்ளது. உடனடியாக அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். சேலம் சென்னை 8 வழி சாலையால் இப்பகுதி வளர்ச்சி அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானது.இதனால் எவ்வித வளர்ச்சியும் ஏற்படாது. சேலத்திலிருந்து சென்னை செல்வதற்கு ஏற்கனவே 3 தேசிய சாலைகளும் விமான, ரயில் வசதியும் உள்ளது. இதையெல்லாம் விடுத்து புதியதாக 8 வழி சாலை அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார். 

    விழாவில் கோட்டாட்சியர் புண்ணியகோடி, மாநில துணை பொது செயலாளர் வெங்கடேஸ்வரன், மாவட்ட செயலாளர் இமயவர்மன், உள்பட பலர் கலந்து கொண்டனர். #anbumani
    ×