என் மலர்
நீங்கள் தேடியது "Marriage Pariharam"
- மாங்கல்ய தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும்.
- தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.
திருமணம் என்றவுடன் பிள்ளையார் சுழி போடுவது ஒருவரின் பிறப்பு ஜாதகம்தான். திருமண பேச்சை எடுத்ததுமே, ஜாதகம் பார்த்தாச்சா ஜாதகம் எப்படி இருக்கு? தோஷம் இருக்கா? பரிகாரம் செஞ்சீங்களா? என உற்றார், உறவினர், நண்பர்கள், அக்கம்பக்கத்தினர் மாறிமாறி கேட்பார்கள். திருமண விஷயத்தில் ஒருவரின் சுய ஜாதக கிரக அமைப்புக்கு முக்கிய பங்கு உண்டு.
சில வகையான தோஷங்கள், சில கிரக சேர்க்கைகள், சில தசா, புத்திகள், கோட்ச்சார நிலை போன்ற பல்வேறு காரணங்களால் திருமணம் தாமதமாகிறது. இது போன்ற காரணங்களால் திருமணம் தாமதமானால் என்ன செய்வது? அதற்கு ஏதேனும் பரிகாரம் உண்டா? என்பது பலருக்கும் வரும் சந்தேகம். தோஷங்கள் பற்றி சொல்லும் ஜோதிட சாஸ்திரம் அவற்றுக்கான பரிகாரங்களையும் சொல்லியிருக்கிறது.
இந்த தோஷம் பெண் ஜாதகத்தில் மட்டுமே காணப்படும். 8-ம் பாவகம் மாங்கல்ய ஸ்தானமாகும். இதுவே ஆயுஸ் ஸ்தானம் அதாவது லக்னத்துக்கு 8-ம் இடத்தில் சூரியன், ராகு, கேது, சனி, செவ்வாய் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இது திருமணத் தடையை மிகைப்படுத்தும் தோஷ அமைப்பாகும்.
8-ம் இடத்தில் நீச, அஸ்தங்கம் பெற்ற கிரகம் அமர்வது மாங்கல்ய தோஷத்தைக் கொடுக்கும். இதில் 8-ம் இடத்தை சுப கிரகங்கள் மற்றும் குரு பார்த்தாலும் 8-ம் அதிபதி பலம் பெற்றாலும் தோஷ நிவர்த்தி.
வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மணிக்குள் சுக்கிர ஓரையில் வயதான சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்கள் தந்து ஆசி பெற வேண்டும்.
- பிற தோஷங்களை ஒப்பிடுகையில் சுக்கிர தோஷம் கெடுதல்களை அளிப்பதில்லை.
- இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது.
ஒருவரின் வாழ்வில் சகல சௌபாக்கியங்களை பெற்று வாழ வேண்டுமெனில் அவரின் ஜாதகத்தில் சுக்ரனின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே அவரின் திருமண வாழ்க்கை, சுக போகங்கள், மகிழ்ச்சி ஆகியவை கிட்டும். எனவே தான் ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரனின் நிலை மிக முக்கியமாகும். இப்பொழுது சுக்கிர தோஷம் ஏற்பட்டால் அதற்கு என்ன பரிகாரங்கள் மேற்கொள்ளலாம் என்பதை பற்றி விரிவாக பார்ப்போம்.
ஒருவரின் சாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் மட்டும் தனித்து இருந்தாலோ, கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் இணைந்து இருந்தாலோ, லக்கனத்திற்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலோ, அல்லது சுக்கிரனக்குரிய இடமாக இல்லாமல் இருந்து அது 7-ம் வீட்டில் இருந்தாலோ, அல்லது லக்கனத்திற்கு 3-ம் வீட்டில் மறைந்து இருந்தாலோ, 12-ம் இடத்தில் மறைந்திருந்தாலோ அது சுக்கிர தோஷம் ஆகும்.
இந்தத் தோஷம் திருமணத்தடை மற்றும் திருமணத்திற்கு தாமதம் ஏற்பட காரணமாக இருக்கிறது.
அதாவது சாதகத்தில் சுக்கிர பகவான் ஏதாவது ஒரு கெடுதல் செய்யும் கோளுடன் இணைந்து இருத்தலே, இந்தத் தோஷத்திற்குக் காரணமாக உள்ளது.
சரியான தசா புத்தி வரும்வரை காத்திருப்பது நல்ல பரிகாரம் ஆகும். இல்லையென்றால் தேவையற்றப் பிரச்சனைகளை வாழ்வில் சந்திக்க நேரிடும்.
பிற தோஷங்களை ஒப்பிடுகையில் சுக்கிர தோஷம் கெடுதல்களை அளிப்பதில்லை. எனினும், திருமண உறவில் விரிசல் அல்லது பிரிவுக்கு சில நேரங்களில் அது ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது.
இதற்கு பரிகாரம் தனித்து இருக்கும் சுக்கிர பகவானை வழிபடுவதன் மூலம், சுக்கிர தோஷத்தின் கெடுதல்களைக் குறைக்க இயலும்.
களத்திரகாரகரான சுக்ரன் 7-ல் அமர்வது காரகோ பாவக நாஸ்த்தி. சிலருக்கு திருமணத்தை தாமதப்படுத்துகிறது. இந்த தோஷம் பெண்களை விட ஆண்களை மிகவும் பாதிக்கிறது.
பரிகாரம்
சுக்கிர பகவானுக்கு வெண்ணிற ஆடைகள் சாற்றி, தாமரை பூவால் அர்ச்சனை செய்து வர வேண்டும். மொச்சைப் பயிரை பிரசாதமாக செய்து கோவிலுக்கு வருபவர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் வீட்டில் அத்தி மரங்கள் வளர்த்து வரலாம்.
இரவில் மொச்சை பயிரை ஊற வைத்து அந்த தண்ணீரை இந்த மரத்திற்கு ஊற்றி அந்த மொச்சை பயிரை பசுவிற்கு கொடுத்து வர வேண்டும். மேலும் வீட்டில் மஹாலக்ஷ்மி உருவ படத்தை வைத்து வெள்ளிக் கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இவ்வாறு செய்து வந்தால் சுக்கிர தோஷம் குணமடையும்.
வெள்ளிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்த நாளில் சிவ வழிபாடு செய்ய வேண்டும்.
- தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.
- இந்த தோஷம் ஆண் – பெண் இருவருக்கும் ஏற்படுகிறது.
ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவ களங்களான 1,27,8 ஆகிய பாவகங்களில் இயற்கை பாவ கிரகங்கள் அமர்வது அல்லது 7-ம் பாவகாதிபதி நீசம் அஸ்தமனம் அடைவது போன்றவை களத்திர தோஷத்தை ஏற்படுத்தும். மேற்கண்ட தோஷம் ஆண் – பெண் இருவருக்கும் ஏற்படுகிறது. இந்த களஸ்திர தோஷம் காரணமாக திருமணம் தடைபடுதல், தாமதப்படுதல் ஏற்படுகிறது.
இந்த தோஷம் அமையப் பெற்ற ஜாதகருக்கு திருப்தியற்ற மணவாழ்க்கை , காலதாமத திருமணம் , களத்தரத்தின் மூலம் பெருமளவு ஆதாயமின்மை, தம்பதியரிடம் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும். இந்த தோஷத்தை கீழ்க்கண்ட எளிய பரிகாரங்கள் மூலம் போக்கி சிறப்பான திருமண வாழ்வு அமைய பெறலாம்.
இவர்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் 9 மண வரை சுக்ர ஓரையில் அர்த்தநாதீஸ்வரரை வழிபட வேண்டும்.
வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்கு செவ்வாய்கிழமையில் சென்று கோவில் அர்ச்சகரிடம் களஸ்திர தோஷம் நீங்குவதற்கான வழிபாடு, பூஜை செய்ய ஏற்பாடு செய்து வழிபட வேண்டும். முருகன் சந்நிதியில் கொடுக்கபட்ட பிரசாதமான தீருநீறு மற்றும் குங்குமத்தை பூஜை அறையில் வைத்து வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்த 90 வது நாளில் களஸ்திர தோஷம் முற்றிலுமாக நீங்கி விடும். திருமணம் சிறப்பாக நடந்து நீண்ட ஆயுளுடன் வாழ்வர். திருமணத்திற்கு பிறகு தம்பதி சகிதம் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் சந்நிதிக்குச் சென்று வழிபட்டு வர வேண்டும்.
ஒன்பது செம்பருத்தி பூக்கள், ஒரு சிவப்புநிற ஜாக்கெட் துணி, 27 கொண்டைக் கடலைகள் ஆகியவற்றை சேகரித்து கொள்ள வேண்டும். ஒரு வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை காலையில் வீட்டை பசுமாட்டு கோமியம் தெளித்து சுத்தம் செய்த பின், சிவப்பு ஜாக்கெட் துணியில் செம்பருத்திப்பூ மற்றும் 27 கொண்டைக்கடலைகளை வைத்துகட்டி, பூஜை அறையில் வைக்க வேண்டும். மஞ்சள் துணியில் தங்களது குலதெய்வத்திற்குத் தனியே காணிக்கை எடுத்து வைக்க வேண்டும். பகல் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் விரதமிருந்து மாலையில் யாரும் பார்க்காதவாறு அந்த முடிச்சை எடுத்துச்சென்று தெப்பகுளம், கண்மாய், ஆற்றுபடுக்கை போன்ற நீர்நிலைகளில் போட்டு விட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் களஸ்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும்.
- இந்த பரிகாரத்தை ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடவே இல்லை.
- இந்த தோஷத்திற்கு மிக எளிமையான பரிகாரம் உள்ளது.
இருதார தோஷம் உள்ளவர்கள் வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டி விடுவார்கள்! இப்படிப்பட்ட ஒரு பரிகாரம் இந்த இருதார தோஷத்திற்கு செய்து வருகிறார்கள். இது ஏற்புடையதா? என்றால் நிச்சயமாக இல்லை.!
எந்த ஜோதிட நூல்களிலும் இப்படிப்பட்ட பரிகாரத்தை ஜோதிட சாஸ்திரங்கள் குறிப்பிடவே இல்லை. பொதுவாக இந்தப் பரிகாரத்தைச் செய்பவர்கள் வாழைமரத்தை ஏற்கெனவே வெட்டி எடுத்து வந்து, அதற்கு தாலி கட்டச் சொல்வார்கள். ஏற்கெனவே வெட்டப்பட்ட வாழைமரம் உயிர்ப்போடு இருக்காது என்பது எல்லோரும் அறிந்ததே.
இன்னும் ஒரு சிலர் வாழைத்தோப்புக்கே கூட்டிச் சென்று, அங்கே ஒரு வாழை மரத்திற்கு தாலி கட்டி, அந்த வாழை மரத்தை வெட்டுவதைச் செய்கிறார்கள். இது எதுவுமே பரிகாரத்தில் வரவே வராது. இதில் வருந்தக் கூடிய விஷயம் என்னவென்றால் பெண்களுக்குக் கூட இந்த வாழைமர பரிகாரத்தை செய்கிறார்கள் என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
அப்படியானால் இந்த இருதார தோஷத்திற்கு என்னதான் பரிகாரம்? என்று கேட்டால்..! மிக எளிமையான பரிகாரம் உள்ளது.... இரு தார தோஷம் இருப்பவர்கள் திருமணம் முடிந்தவுடன், மூன்றாவது மாதத்தில், கட்டிய தாலியை ஏதாவது ஒரு ஆலயத்தின் உண்டியலில் செலுத்தி விட்டு, அந்த ஆலயத்தின் இறைவன் முன்னிலையில் மீண்டும் தாலி கட்டிக்கொள்வதே எளிமையான பரிகாரம்! இரு தாரம் எனும் தோஷம் இப்படித்தான் விலகும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
- கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- இந்த மாலையை பெறுவதற்கு 98425 99006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நவக்கிரக நாயகர்களில் செவ்வாய் பகவானுக்குரியதாக விளங்கும் கருங்காலி மாலை அணிவதன் மூலம் தடங்கல்கள் நீங்கி அனைத்து காரியமும் வெற்றி பெறும் என்பது நம்பிக்கை. இந்த கருங்காலி மாலையானது அதிக உறுதி தன்மை கொண்ட மரத்தில் இருந்து மணிகளாக செதுக்கி, 108 மணிகளை கொண்டு மாலையாக தயாரிக்கப்படுகிறது. இது கதிர்வீச்சுகளை ஈர்த்து சேமிக்கும் தன்மை கொண்டது. எனவே அனைத்து எதிர்மறை எண்ணங்களையும் நீக்கி நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் சக்தி படைத்தது.
இத்தகைய சிறப்பு பெற்ற கருங்காலி மாலை ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே ராட்டை சுற்றிபாளையம் காங்கேயம் மெயின்ரோட்டில் உள்ள பைரவர் கோவில் வளாகத்தில் செயல்படும் பைரவா பவுண்டேசனில் கிடைக்கிறது.
இதுகுறித்து பவுண்டேசன் நிர்வாகி விஜயசாமிகள் கூறியதாவது:-
கருங்காலி மாலை மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த மாலை முறைப்படி பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த மாலையை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பவர்களுக்கு வாழ்வின் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடைந்து உள்ளது. குறிப்பாக தொழிலில் வெற்றி இலக்கை எட்ட வேண்டுமென்றால் இந்த கருங்காலி மாலையை அணிந்து கொள்ளலாம்.
அனைவரது வாழ்க்கைக்கும் அடித்தளமாக உறவுகள் அமையும். தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள் என உறவினருடன் எந்தவொரு பெரிய பிரச்சினையும் ஏற்படாமல் சந்தோஷமாக வாழ்வதற்கு கருங்காலி மாலை வழிவகுக்கிறது. மேலும், வணிக தொடர்பு கொண்ட உறவின் வளர்ச்சிக்கும் சிறப்பு வாய்ந்தது.
பைரவரின் ஆசீர்வாதம் கிடைப்பவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அவரது ஆசீர்வாதத்தை பெறுவதற்கான மிக எளிய வழியாக கருங்காலி மாலை உள்ளது. இதை கழுத்தில் அணிவது மூலமாக அவரது ஆசீர்வாதத்தை பெறலாம். இதன் மூலமாக பைரவர் கொடுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.
நவக்கிரகங்களில் மிக வலுவானதாகவும், வேகமானதாகவும் செவ்வாய் கிரகம் உள்ளது. அந்த கிரகத்துக்குரிய மாலையாகவும் கருங்காலி மாலை திகழ்கிறது. இந்த மாலையை அணிந்திருந்தால் பிரச்சினைகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவராக விளங்கலாம். மன உறுதி அதிகமாகும். இறைவனுக்கு ஸ்லோகங்கள் சொல்லவும் பயன்படுத்தலாம். இறை ஆகர்ஷண சக்தி அதிகமுள்ள கருங்காலி மாலை பயன்படுத்துவதால் உடலில் உள்ள பிரச்சினை நீங்குவதோடு தன வசியம், வாழ்வில் முன்னேற்றம், குல தெய்வ அருள் கிடைக்கும். துன்பங்கள் மறையும். செல்வவளம் பெருகும். எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும். மனக்கசப்புகள் அகலும். சகல கிரக தோஷ நிவர்த்தி உண்டாகும்.
கருங்காலி மாலை அணிந்து இருந்தால் உடலில் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மேலும் மாங்கல்ய பலத்தை பலப்படுத்தும். உடல் உறுதியடைய செய்யும். கோபங்கள் சிறிது சிறிதாக குறையும். நம் மன பயத்தை நீக்கி தைரியத்தை வழங்கும். பெண்களில் செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இந்த மாலையை அணிந்தால் தோஷம் நீங்கி திருமண தடைகளை நீக்கும். கணவன்-மனைவி பிரச்சினை நீங்கி உறவு மேம்படும். வறுமை நீங்கும்.
மகத்தான நன்மைகள் நிறைந்த கருங்காலிமாலையை நமது பைரவ பீடத்தில் முறைப்படி பூஜை செய்து, மந்திரங்களால் உரு ஏற்றி வழங்கப்படுகிறது. எனவே இந்த மாலையை அணிந்து பைரவரின் முழு அருளையும் பெற்று சந்தோஷமாக வாழலாம். இந்த மாலையை பெறுவதற்கு 98425 99006 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.
- அம்பாளின் பெயர் கிரிசுந்தரி.
தஞ்சாவூர்-கும்பகோணம் செல்லும் வழியில் பாபநாசத்துக்கு கிழக்கே 3 கிலோ மீட்டர் தூரத்தில் நல்லூரில் கல்யாண சுந்தரர் கோவில் அமைந்துள்ளது. நல்லூர் கல்யாணசுந்தரர் கோவில் மூலவர் கல்யாண சுந்தரர் லிங்கத்திருமேனியாக 14 அடி உயர மேற்பரப்பில் அருள்பாலிக்கிறார். அம்பாளின் பெயர் கிரிசுந்தரி. மூலவர் சுயம்புலிங்கமாக தாமிரநிறத்தில் காட்சியளிக்கிறார்.
நீண்ட நாட்கள் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களும், ஆண்களும் இந்த கோவிலுக்கு வந்து வாசனையுள்ள மலர் மாலையை சிவபெருமானுக்கு சூட்டி, பின் ஒரு மாலையை வாங்கி அணிந்து பிரகாரத்தை வலம் வந்து வழிபட்டு சென்றால் தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்று தலபுராணம் கூறுகிறது.
ஒரு முறை பாண்டவர்களின் தாய் குந்திதேவி இந்த கோவிலுக்கு வந்து நாரதமுனிவரை சந்தித்தார். அன்று மாசிமக நாள் என்பதால் கடலில் நீராடுவது சிறந்த புண்ணியம் என நாரதர் கூறினார். இதைக்கேட்ட குந்திதேவி, சிவபெருமானிடம் வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சிவபெருமான், குந்தி தேவிக்காக கோவில் எதிரில் உள்ள தீர்த்தக்குளத்தில் உப்பு, கரும்புச்சாறு, தேன், நெய், தயிர், பால், சுத்தநீர் ஆகிய 7 கடல்களையும் வருமாறு செய்தார். அதில் குந்திதேவி நீராடி பேறு பெற்றார்.
இந்த 7 கடல்களை குறிக்கும் 7 கிணறுகள் இக்குளத்துக்குள் உள்ளது. அன்று முதல் இது சப்தசாகரம் எனப் பெயர்பெற்றது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிவபெருமானை வேண்டி இக்குளத்தின் பன்னிரு துறைகளிலும் நீராடி கோவிலை 48 நாட்கள் வலம் வந்தால் நோய் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தஞ்சையில் இருந்து கும்பகோணத்துக்கு செல்லும் வழியில் பாபநாசம் அருகே நல்லூர் பகுதியில் கல்யாணசுந்தரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்ல தஞ்சையில் இருந்தும், கும்பகோணத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் கும்பகோணத்துக்கு வந்து அங்கிருந்து பஸ் அல்லது கார் மூலம் பாபநாசம் அருகே உள்ள நல்லூருக்கு வந்து கல்யாண சுந்தரரை தரிசனம் செய்யலாம். தென் மாவட்டங்களில் இருந்து நல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் ரெயில் மூலம் தஞ்சை வந்து அங்கிருந்து கார் அல்லது பஸ் மூலம் பாபநாசத்துக்கு வந்து கோவிலை அடையலாம்.
- ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோவில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும்.
- திருமணத்திற்கு தடை ஏற்படுபவர்கள் இந்த பரிகாரங்களைச் செய்யலாம்.
இப்போது திருமணத்திற்கு தடை அல்லது தாமதம் ஏற்படுபவர்கள் எந்த மாதிரியான பரிகாரங்களைச் செய்யலாம், எந்த ஆலயங்களுக்குச் சென்று வந்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பதைப் பார்ப்போம்.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயம்... இங்கே முருகப்பெருமானுக்கும் தேவயானைக்கும் திருமணம் நடந்தது என்பது நாம் அறிந்ததே! இந்த ஆலயத்திற்குச் சென்று வருவது திருமணத்தடையை நீக்கும்.
திருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம், திருமணத் தடைகளை முற்றிலுமாக அகற்றி திருமணத்தை விரைவாக நடத்தி தரக்கூடிய ஆலயம். கருமாரி அம்மனை தரிசித்து வேண்டுதல் வைத்து வந்தால் உடனே திருமணம் நடக்கும்.
திருமணஞ்சேரி என்னும் திருத்தலம், கும்பகோணம் ஆடுதுறைக்கு அருகில் உள்ளது. இந்தத் திருத்தலம் திருமணத் தடைகளை அகற்றி திருமணத்தை நடத்தித் தரும் என்பது உலகறிந்தது! இந்த திருத்தலத்திற்கு சென்று வந்தாலே தடைகள் அனைத்தும் அகன்று திருமணம் நடக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை!
கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் என்னும் ஊரில் இருக்கக்கூடிய ஆலயம், இங்கு இறைவன் உமா மகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அன்னை அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் காட்சி தருகிறார்கள். இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வைபவம் போல் இருப்பதால் இந்தத் தலம் திருமணத் தடைகளை அகற்றி விரைவாக திருமணம் நடத்தி தரும் ஆலயம் என்று போற்றப்படுகிறது. இந்த ஆலயத்திற்குச் சென்று ஈசனையும் பராசக்தியையும் வணங்கி வந்தால் விரைவில் திருமணம் நடக்கும்.
சென்னை - மகாபலிபுரம் சாலையில் திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் ஆலயத்தில் பெருமாளை சேவித்து வேண்டுதல் வைத்து வந்தால் விரைவாக திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏதாவது ஒரு கோவில் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாக இருக்கும். அப்படிப்பட்ட ஆலயங்களுக்குச் சென்று தரிசித்து பிரார்த்தித்து வருவது நல்ல பலனை தரக் கூடியதாக இருக்கும். அது மட்டுமல்லாமல் குலதெய்வ வழிபாடும் திருமணத் தடையை அகற்றி வம்சம் செழிக்க வழிவகை செய்யும். எனவே தவறாமல் குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்., திருமணத்தடை மட்டுமல்லாமல், குடும்ப வளர்ச்சி, வம்சவிருத்தி போன்றவற்றுக்கும் துணையாக இருக்கும்.
ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது, புதுமணத் தம்பதிக்கு ஆடைகள் வாங்கித் தருவது, கட்டில் மெத்தை போன்றவற்றை பரிசாகக் கொடுப்பது போன்றவையும் திருமணத் தடைகளை நீக்கக் கூடியதாகும்.
- குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் உள்ளன.
- குரு பகவானை வழிபட்டால் கோடி நன்மை உண்டாகும்.
ஆன்மிக பூமியான தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆலயங்கள் நிறைந்துள்ளன. நவக்கிரக கோவில்களும் நட்சத்திர கோவில்களும் இங்குதான் உள்ளன. குரு பரிகார தலங்கள் தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உள்ளன. அவற்றில் முக்கியமான ஆலயங்கள் பற்றி பார்ப்போம்.
தென்குடி திட்டை
திட்டை திருத்தலம், தஞ்சாவூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வசிஷ்டேஸ்வரர் என்ற பெயருடன் இறைவன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார். இறைவியின் நாமம் மங்களாம்பிகை என்பதாகும். இறைவனுக்கும், இறைவிக்கும் நடுவில் நின்ற நிலையில் குரு பகவான் ராஜ குருவாக வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இது வேறு எந்த தலத்திலும் காண முடியாத தனிச் சிறப்பாகும்.
பாடி திருவலிதாயம்
சென்னைக்கு அருகில் உள்ள பாடி திருவலிதாயத்தில் அமைந்துள்ள வலிதாய நாதர் கோவில், குரு பகவான் வழிபட்ட தலமாகும். வியாழ பகவான், தான் செய்த ஒரு தவறால், தனது தமையனின் மனைவி மேனகையிடம் சாபம் பெற்றார். இதற்கு விமோசனம் கிடைக்க மார்க்கண்டேய மகரிஷியின் உதவியை நாடினார். அவரது ஆலோசனை படி, இத்தலத்து சிவனை வணங்கினார். அவருக்கு காட்சி தந்த சிவன், விமோசனம் கொடுத்தருளினார். குருவுக்கு இங்கு சன்னிதி உள்ளது. இவர் சிவனை வணங்கும் வகையில் மேற்கு நோக்கி இருப்பது சிறப்பான அமைப்பு.
திருச்செந்தூர்
குரு பகவானுக் குரிய தலங்களில் பிரதான இடம் பெறுவது, முருகனுக் குரிய ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் ஆகும். தேவர்களைக் காக்க முருகப்பெருமான் அசுரர்களை அழிக்க இங்கு வந்தார். அப்போது, தேவர்களின் குருவான பிரகஸ்பதி அசுரர்களைப் பற்றியும், அவர்களது குணம் பற்றியும் முருகனுக்கு எடுத்துச் சொன்னார். இதனால், இத்தலம் குரு தலமாகக் கருதப்படுகிறது.
இங்குள்ள மேதா தட்சிணா மூர்த்தியும் விசேஷமானவர். இவர், கூர்மம் (ஆமை), அஷ்ட நாகம், அஷ்ட யானைகளுடன் கூடிய பீடத்தின் மீது காட்சி தருகிறார். வலதுகையில் சிவபெருமானுக் குரிய ஆயுதமான மழுவும், இடக்கையில் மானும் உள்ளது. இவருக்குப் பின்புறமுள்ள கல்லால மரத்தில் நான்கு வேதங்களும், கிளி வடிவில் உள்ளது. தட்சிணாமூர்த்தியின் இத்தகைய அமைப்பை வேறெங்கும் காண முடியாது. குரு தோஷம் உள்ளவர்கள், குரு பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் அவசியம் ஒரு முறையாவது சென்று வரவேண்டிய தலம் இது.
குருவித்துறை
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் உள்ள குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோவிலில், ஒரே சன்னிதியில் குரு பகவானும், சக்கரத்தாழ்வாரும் சுயம்பு மூர்த்திகளாகக் காட்சி தருகின்றனர். அசுர குருவான சுக்ராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் 'மிருத சஞ்சீவினி' மந்திரம் கற்றிருந்தார். இதனால், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் நடக்கும்போது, அவர் எளிதாக அசுரர்களை உயிர்ப்பித்தார். அந்த மந்திரத்தை கற்க விரும்பிய தேவர்கள், தங்கள் படையிலிருந்து ஒருவரை சுக்ராச்சாரியாரிடம் அனுப்ப முடிவு செய்தனர்.
தேவகுரு பிரகஸ்பதியின் (வியாழன்) மகன் கசன், அந்த மந்திரத்தை கற்று வருவதாகச் சொன்னான். அதன்படி சுக்ராச்சாரியாரிடம் சென்றவன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு செலுத்துவது போல நடித்தான். அவரிடம் மந்திரத்தைக் கற்று வந்தான். கசன், தேவகுலத்தைச் சேர்ந்தவன் என்பதை அறிந்த அசுரர்கள், அவனை எரித்து சாம்பலாக்கி, சுக்ராச்சாரியார் பருகிய பானத்தில் கலந்து கொடுத்துவிட்டனர்.
கசனைக் காணாத தேவயானி, தந்தையிடம் அவனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினாள். சுக்ராச்சாரியார் அவனை உயிர்ப்பித்தார். மகனைக் காணாத குரு பகவான், அவனை அசுரலோகத்தில் இருந் து மீட்டு வர அருளும்படி, இங்கு பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி, சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டு வந்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள், இங்கே எழுந்தருளியுள்ளார்.
பட்டமங்கலம்
கிழக்கு நோக்கிய அனுக்கிரக தட்சிணாமூர்த்தி, சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் அருளுகிறார். இவரது சன்னிதிக்குப் பின்புறம் படர்ந்து விரிந்த பெரிய ஆல மரம் உள்ளது. பக்தர்கள் இம்மரத்தையும் சேர்த்து வலம் வரும் வகையில் சன்னிதி அமைந்துள்ளது. சன்னிதி முன் மண்டபத்தில் ராசிக்கட்டம் உள்ளது. இத்தலத்தில் தட்சிணாமூர்த்தி பிரதானம் என்பதால், பக்தர்கள் முதலில் இவரையே தரிசிக்கிறார்கள். வியாழக்கிழமை குரு ஓரை நேரத்தில் (மதியம் 1 - 2 மணி) இவருக்கு விசேஷ அபிஷேகத்துடன் பூஜை நடக்கும். மதுரையில் இருந்து 65 கி.மீ., திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக 90 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் இருக்கிறது. இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில் பட்டமங்கலம் அமைந்துள்ளது.
அகரம் கோவிந்தவாடி
காஞ்சீபுரம் - அரக்கோணம் பேருந்து வழியில், கம்மவார்பாளையம் பஸ் நிறுத்தத்தில் இறங்கி அகரம் கோவிந்தவாடி கோவிலுக்குச் செல்லலாம். இத்தலத்திலும் தட்சிணாமூர்த்தியே குருவாக அருளாட்சி புரிகிறார். இது சிறந்த குரு பரிகாரத் தலம். இவர், வியாக்யான தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார்.
தக்கோலம்
வேலூர் மாவட்டத்தில் அரக்கோணம் - பேரம்பாக்கம் வழியில் தக்கோலம் உள்ளது. இத்தலத்து இறைவன் வலது காலைத் தரையில் ஊன்றி, இடது காலை மடித்து அமர்ந்திருக்கிறார். தலையைச் சற்றே வலதுபுறம் சாய்த்த நிலையில் உத்கடி ஆசனத்தில் அமர்ந்த திருவுருவை இங்கு தரிசிக்கலாம்..
குருபகவான் தட்சிணாமூர்த்தி
திருவடிகள் போற்றி போற்றி போற்றி
- இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
- திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து கிழக்கே 4 கிலோ மீட்டர் தொலைவில் திருவாரூர்-மயிலாடுதுறை வழித்தடத்தில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது.
இங்குள்ள இறைவன் மகாகாளநாதர் என்றும், இறைவி பய அட்சயாம்பிகை மற்றும் ராஜ மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை அம்மனுக்கு அணிவித்து பூஜை செய்த பின்னர் அந்த மாலைகளில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
மேலும் புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மாகாள வாவி என்ற தீர்த்தத்தில் நீராடி, குழந்தை வடிவில் உள்ள விநாயகரையும் முருகப்பெருமானையும் வழிபட்டால் விரைவில் மக்கட்பேறு பெறலாம் என்பதும் காலம், காலமாக இருந்து வரும் நம்பிக்கை.
இக்கோவிலுக்கு வரும் திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இரண்டு சிவப்பு அரளிப்பூ மாலைகளை வாங்கி வந்து அம்மனுக்கு அணிவித்து அர்ச்சனை செய்து பின்னர் ஒன்றை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இவ்வாறு வழிபாடு நடத்தும் பக்தர்களுக்கு உடனே திருமணம் நடைபெறுவதை கண்கூடாக பார்க்க முடிகிறது
அஷ்ட நாகங்களில் 2-வது நாகம் வாசுகி. இந்த நாகத்திற்கு தோஷம் ஏற்பட்டது. தனது தோஷத்தை போக்க என்ன வழி என்று சிவபெருமானை தரிசித்து கேட்டது வாசுகி. கோவில் திருமாளம் மாகாளநாதர் கோவிலுக்கு சென்று வழிபட்டால், தோஷம் போகும் என்று இறைவன் கூறியதையடுத்து இங்கு வந்து வழிபாடு நடத்தி தோஷம் நீக்கியதாக புராணங்கள் கூறுகின்றன. மேலும், புத்திரபேறு கிடைக்கவும், திருமணத்தடை நீங்கி, ராகு தோஷம், நாக தோஷம், பிரம்மஹத்தி தோஷங்களை நிவர்த்தி செய்ய விரும்புவோர் அவசியம் தரிசிக்க வேண்டிய கோவில் இது. இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
கோவிலுக்கு செல்வது எப்படி?
திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் கோவில் திருமாளம் மகாகாளநாதர் கோவில் உள்ளது. சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் திருவாரூருக்கு செல்லும் ரெயிலில் பயணம் செய்து பேரளம் ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம்.
- ஏழில் அமர்ந்த கிரகமே வாழ்க்கை துணை அமைவதை தடை செய்கிறது.
- சந்திரன் என்றால் நீர், நீரும் மனமும் ஒரு நிலையில் நிற்காது.
சந்திரன் ஒரு குளிர்ந்த கிரகம். திருமண உறவில் சந்திரன் உடலையும் மனதையும் குறிக்கும் காரக கிரகம். சந்திரன் என்றால் நீர், நீரும் மனமும் ஒரு நிலையில் நிற்காது. இங்கும் அங்கும் அலைந்து கொண்டே இருக்கும். திருமண விசயத்தில் வரன் குறித்து தெளிவாக முடிவு செய்யும் தன்மை இருக்காது.
நடக்காததை நடப்பதாக கற்பனை பண்ணுவார்கள். சந்திரன் ராகுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தி பிரச்சனை தரும். கேதுவின் சாரம் பெற்றால் திருமணத்தை நடத்தாமல் பிரச்சினை தரும். சந்திரன் உடைபட்ட நட்சத்திரங்களான சூரியன், செவ்வாய் மற்றும் குருவின் நட்சத்திரத்தில் இருந்தாலும் திருமணத் தடை இருக்கும்.
சந்திரன் பாசத்தை பொழியும் கிரகம். ஏழில் சந்திரன் திருமணத்திற்கு பிறகு தாயின் பாசத்தை களத்திரத்திடம் ஒப்பிட்டு பிரச்சினையை அதிகரிப்பார்கள் அல்லது தங்களின் அந்தரத்தைப் பற்றிய அனைத்தையும் தாயிடம் பகிர்ந்து களத்திரத்தின் வெறுப்பை சம்பாதிப்பார்கள்.
கர்மா ரீதியாக இதை உற்று நோக்கினால் தாய் வழியில் 21 தலைமுறையாக வாழாத பெண்கள் இருப்பார்கள்.தினமும் கண்ணீர் விட்டு அழுத பெண் சாபம். தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்தவர் சாபம், வயதான தாயை முறையாக பராமரிக்காத குற்றம், ஒரு பெண்ணை மனநலம் பாதிக்கும் வகையில் துன்புறுத்தியதன் வினைப்பதிவாகும்.
பரிகாரம்
திங்கட்கிழமை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் சந்திர ஓரையில் அம்பிகைக்கு 10 வாரம் பால் அபிஷேகம் செய்ய வேண்டும். பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். வயது முதிர்ந்த 11 பெண்களுக்கு பச்சரிசி உணவு 11 வாரம் தண்ணீருடன் தானம் தர வேண்டும்.
- ஏழில் செவ்வாய் என்றால் திருமணத்திற்கு முன்பு திருமணத் தடையையும் பின்பு ஈகோவால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது.
- செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம்.
ஏழில் செவ்வாய் தோஷம் உண்டா? என்ற விவாதம் எத்தனை நூறு ஆண்டுகளானாலும் முடிவுக்கு வராத விஷயம் என்பதால் நாம் அதைப் பற்றி பேச வேண்டாம். ஏழில் செவ்வாய் என்றால் திருமணத்திற்கு முன்பு திருமணத் தடையையும் பின்பு ஈகோவால் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. செவ்வாயுடன் ராகு-கேதுகள் சம்மந்தம் பெறும் போது பிரச்சினை மிகுதியாக இருக்கிறது. செவ்வாய் முரட்டுத்தனமான கிரகம். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும். செவ்வாய் முழுக்க, முழுக்க தாய், தந்தை வழி கர்மாவை மிகுதியாக பிரதிபலிக்கும் கிரகமாகும். செவ்வாயால் ஏற்படும் பிரச்சினைகள் காசு, காமம், சொத்து என்ற மூன்று வினையின் விளைவுகளாகவே இருக்கிறது.
காமம்
மனிதர்கள் இல்லற இன்பத்தை வாழ்க்கைத் துணைவியிடம் மட்டுமே பெற வேண்டும். முறையற்ற காமத்தால்பொருள் விரயத்துடன் தீராத நோயும், சாபமும் வினைப்பதிவும் சேரும்.இதனால் பலரின் பரம்பரைச் சொத்துக்கள் சம்பந்தம் இல்லாத நபர்களிடம் சிக்கி பயனற்றுப் போகிறது. பல குடும்பங்கள் பிரிந்து நிர்கதியாக வாழவும் முடியாமல், மீளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
காசு
தன் விதிப்பயனையும் மீறிய பொருள் ஆசை அநீதியான வழியில் பொருள் ஈட்டும் உணர்வை தூண்டும்.காசு என்றால் பொருள் மட்டுமல்ல. பணம் சேர்க்க அநீதியை கடைபிடித்து ஒருவரை துன்புறுத்துவது.அடுத்தவரின் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றும் போது உன் அடுத்த பிறவி உறுதியாகி சத்ருவும், கர்ம வினையும் மிகுதியாகும். அடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைப் பணம் ஒருரூபாய் இருந்தால் கூட அந்தக் கடனை கொடுத்து முடிக்கும் வரை மறு பிறவி எடுத்து வினையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக சம்பாதிக்கும் பணம், அடுத்தவரின் வயிற்றெரிச்சலில் ஈட்டிய பொருளால் வாங்கும் சொத்துக்கள்சந்ததிகளுக்கு பாவத்தையே மிகைப்படுத்துகிறது.
சொத்து
முறையற்ற குடும்பச் சொத்துப் பங்கீடு, அநீதியான முறையில் சொத்து சேர்த்தாலும், வாரிசு இல்லாதவர்களிடம் விருப்பமின்றி பிடுங்கிய பிள்ளையில்லாச் சொத்தும் வாரிசுகளால் அனுபவிக்க முடியாது. அவர்களுடைய வாரிசுகள் பல தலைமுறைக்கு சொத்தை வைத்து உருட்டி வேடிக்கை பார்ப்பார்கள். முடிவில் சொத்து போன வழித்தடம் தெரியாது. ஆனால் பாவம் மட்டும் சரியான பாதை கண்டுபிடித்து வந்து வாசல் கதவை தட்டும்.
பரிகாரம்
தொடர்ந்து ஏழு வாரம் செவ்வாய் கிழமை முருகனுக்கு பால் அபிசேகம் செய்து வழிபடவும். 27 வாரம் செவ்வாய் கிழமை சுமங்கலிப் பெண்களிடம் மங்கலப் பொருட்களான மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பூ, பழம் தந்து ஆசி பெற வேண்டும். ஏழு காவலர்களுக்கு ஏழு வாரம் தலா 1 கிலோ மாதுளை தானம் தர வேண்டும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பூமி தானம் செய்யலாம்.
- தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.
- களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம்.
முதல் திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த பலர் இரண்டாம் திருமணத்தில் இழந்த இன்பத்தை மீட்டு விடுகிறார்கள். வெகு சிலருக்கு எத்தனை திருமணம் நடந்தாலும் இல்வாழ்க்கை இரண்டாம் தரமானதாகவே உள்ளது. ஆக இரண்டாம் தாரம் என்பது வரமா? சாபமா? என்று பட்டிமன்றம் வைத்து தீர்ப்பு எழுதும் வகையில் பலரின் வாழ்க்கை வரமாகவும், சிலரின் வாழ்க்கை சாபமாகவும் மாறிவிட்டது.
பரிகாரம்: இரு தாரமோ, ஒரு தாரமோ எந்த தோஷமாக இருந்தாலும் அந்தத் தோஷங்களைத் தாண்டி அனைவரும் விரும்புவது சந்தோஷம்தான். அந்த சந்தோஷம் மன அமைதியில் இருந்து கிடைக்கிறது. மன அமைதி என்பது, தெய்வ வழிபாட்டின் மூலமே நமக்குக் கிடைக்கும் என்பதால் குல இஷ்ட தெய்வத்தை தொடர்ந்து ஆத்மார்த்தமாக வழிபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
திருச்செங்கோடு அர்த்தநாதீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. ஒருவருக்கு திருமணம் என்ற பேச்சை எடுத்தவுடன் அவரின் ஜாதகத்தில் 7-ம் அதிபதி வலு குறைந்து 11-ம் அதிபதி பலம் பெற்றால் ஆணாக இருந்தால் 32 வயதிற்கு பிறகும் பெண்ணாக இருந்தால் 27 வயதிற்கு பிறகும் திருமணத்தை நடத்த வேண்டும்.
நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யாமல் கட்டப் பொருத்தம், தசாபுத்தி பார்த்து திருமணம் செய்ய வேண்டும். மிகக் குறிப்பாக ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் மற்றும் 11-ம் இடம் பார்த்து திருமணம் செய்வதே பரிகாரம். இதுவே முதலும் முடிவுமான முழுமையான பரிகாரம்.
ஒரு ஜாதகத்தில் ஏழாமிடத்தில் குற்றம், குறை இருந்தால் எங்கெங்கயோ அலைஞ்சாச்சு. போகாத கோவில் இல்லை; பாக்காத வரன் இல்லை. எப்படியாவது திருமணம் நடந்தால் போதும். இனியும் நம்மால் அலைய முடியாது என்று கிடைத்த வரனை முடித்து விடுவோம் என்று தவறான வரவை தேர்வு செய்யக் கூடாது.