search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Martial arts training"

    • அமைச்சர் தொடங்கி வைத்தார்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம், டேக்வாண்டோ, ஜூடோ உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சி தொடக்க விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் க.நந்தகுமார் வரவேற்று ேபசினார். கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, வில்வநாதன், அ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தற்காப்பு கலை பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஏற்படுகின்ற பயத்தினை போக்கவும், அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் மூன்று மாத காலத்திற்கு தற்காப்பு கலை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

    100 மாணவிகளுக்கு ஒரு பயிற்சியாளர் என்கின்ற விகிதம் வாரத்திற்கு இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நூறு மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளை ஒன்றாக இணைத்து அங்கேயே பயிற்சியாளரை நியமித்து மாணவிகளுக்கு தற்காப்பு கலைகள் பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஒன்றிய பகுதிகளில் உள்ள 160 பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு பயிலும் 4,791 மாணவிகள் இந்த தற்காப்பு கலை பயிற்சியில் கலந்து கொள்கின்றனர்.

    இதன் மூலம் மாணவிகள் மன தைரியத்துடன் எந்த ஒரு பிரச்சினைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு எதிர்காலத்தில் நல்ல ஒரு வீர மங்கைகளாக வளர்வதற்கு இந்த பயிற்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பயிற்சியை தொடங்கி வைத்தார்.
    • ஆசிரியர் பயிற்றுனர் பிரபாகரன் மாணவிகளை வழி நடத்தினார்.

    மடத்துக்குளம் :

    மடத்துக்குளம் சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    மடத்துக்குளம் சாலரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், கராத்தே பயிற்சியாளர் சந்தோஷ்குமார், மாணவிகளுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகளை தொடங்கி உள்ளார். பெண்கள், உடல், மனம் வலிமை பெற தற்காப்பு பயிற்சி அவசியம் எனவும், மாணவிகள் தன்னம்பிக்கையோடு அனைத்து சூழ்நிலைகளை கையாளுவதற்கும் உதவும் என பயிற்சி பொறுப்பாசிரியர் புவனேஸ்வரி ஊக்கப்படுத்தினார். பள்ளி தலைமையாசிரியர் சரவணன், பயிற்சியை தொடங்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுனர் பிரபாகரன் மாணவிகளை வழி நடத்தினார். 

    • புதுவை அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமகர சிக்‌ஷா மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • உடற்கல்வி ஆசிரியர் பால முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் சமகர சிக்ஷா மூலம் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கல்மண்டபம் அரசு பள்ளியில் தற்காப்பு கலை பயிற்சி நடைபெற்றது.

    பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) கவுரி தலைமை தாங்கினார். கராத்தே மாஸ்டர்கள் ஞானசேகரன் முருகன் மற்றும் விஸ்வசுந்தரம் ஆகியோர் தற்காப்பு கலை பயிற்சி அளித்தனர்.

    ஆசிரியை அருண்மொழி வரவேற்றார்.

    உடற்கல்வி ஆசிரியர் பால முருகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரிய, ஆசிரியைகள் பள்ளி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×