search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Marxist"

    • இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
    • இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 29-ந்தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தேசிய அளவில் இருக்கும் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், கேரள மாநிலத்தில் அந்த கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளரான டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜாவும் போட்டியிடுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே வயநாடு தொகுதியில் ஆனி ராஜா போட்டியிடப் போவதாகவும், ஆகவே அந்த தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடக்கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்டு கோரிககை வைத்தது.

    ஆனால் காங்கிரஸ் கட்சி சார்பில் வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் இந்த நடவடிக்கை கம்யூனிஸ்டு கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக அவர்கள் அவ்வப்போது தங்களது எதிர்ப்பு கருத்தை தெரிவித்தபடி உள்ளனர்.

    இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோவிந்தனும் வயநாடு தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தியை காங்கிரஸ் நிறுத்தியிருப்பதற்கு தனது கண்டன கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஆனி ராஜா இடது சாரி ஜனநாயக முன்னணி சார்பில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்திய கூட்டணியின் ஆதரவுடன் ராகுல்காந்தியை வேட்பாளராக முன்னிறுத்துவது வெட்கக் கேடானது.

    அவர் இந்திய கூட்டணி வேட்பாளராக ஏன் முன்னிறுத்தப்படுகிறார்? இந்தியா என்ற முத்திரையை பயன்படுத்தி கேரளாவில் போட்டியிட வேண்டிய அவசியமில்லை. கேரளாவில் பரதிய ஜனதா கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்.
    • தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் என அறிவிப்பு.

    மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக பங்கேற்கும் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    மாநில உரிமைகள் காத்திட மத்திய பாஜக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் வரும் 8ம் தேதி போராட்டம் நடத்த உள்ளது.

    அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் பாஜக அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்வார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

    • மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    பாலஸ்தீனத்தில் நடைபெற்று வரும் போரை நிறுத்த இந்திய அரசை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில செயலாளர் ராஜாங்கம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், தமிழ்ச்செல்வன், சீனிவாசன், கொளஞ்சி யப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, சத்தியா, விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சங்கர், வாலிபர், மாதர் மாணவர் சங்க தலைவர்கள் ஆனந்த், இளவரசி, பிரவீன்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நெல்லித்தோப்பு சுப்பையா சிலை அருகிலிருந்து ஊர்வ லமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாலஸ்தீனத்தில் நடந்து வரும் போரை இந்திய அரசு தலையிட்டு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது.

    • அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.
    • விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செய்லாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவில் சொத்து அபகரிப்பு வழக்கில் பா.ஜனதா எம்.எல்.ஏ. மற்றும் அவனது மகன் உள்ளிட்டோரிடம் விசாரணை செய்ய போலீஸ்துறை தயக்கம் காட்டுகிறது. தற்போது பத்திர பதிவுத் துறையில் கடந்த 3 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் மாயமாகி உள்ளது.

    இதனை அதிகார பின்புலம் இல்லாமல் செய்திட முடியாது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் ஆவணங்களை அரசு மீட்டெடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

    நில மோசடியில் பொதுமக்கள் அளித்த புகார்கள் மீது அரசின் நடவடிக்கை விவரத்தை வெளியிட வேண்டும். அதிகார பீடத்தில் உள்ளவர்கள் நில வணிகர்கள் என்பதால் மோசடிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

    எனவே மாநில முதல்வர் 2011 முதல் 2023 வரையில் பத்திரப்பதிவு துறையில் நடந்துள்ள மோசடிகள் குறித்தும், விடுதலைக்கு பிறகு மாநில அரசிடம் இருந்த மொத்த அரசு புறம்போக்கு நிலங்கள், தற்போதுள்ள நிலங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    நடுத்தர மக்களின் சொத்துக்கள் பாதுகாக்க நிலமோசடிக்கு எதிரான உறுதியாக போராட மாநில மக்கள் முன் வரவேண்டும். வரும் 11-ந் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் பங்கேற்கும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு ராஜாங்கம் அறிக்கையில் கூறியுள்ளார்.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    கடலூர்:

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் ஆறுமுகம் கண்டன உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் மாதவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் சுப்புராயன், கருப்பையன், பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, பாரதிய ஜனதா தொண்டர்கள் கொலையால் ஏற்பட்ட பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயனிடம், கவர்னர் அறிக்கை கேட்டுள்ளார். #Sathasivam
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் நடந்து வருகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியின் ஆட்சி அமைந்த பிறகு அந்த கட்சி தொண்டர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியினருக்கும் அரசியல் மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக 2 கட்சியை சேர்ந்தவர்களும் படுகொலை செய்யப்படும் செயல்களும் அரங்கேறி உள்ளது.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் சொந்த ஊரான பினராய் மற்றும் கண்ணூரிலும் அதிகளவு அரசியல் கொலைகள் நடந்துள்ளது.

    இந்த நிலையில் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் பாபு மற்றும் பாரதிய ஜனதா கட்சி தொண்டர் சமேஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.


    இதனால் கண்ணூரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த கொலைகள் காரணமாக பதட்டமான சூழ்நிலையும் நிலவி வருகிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர் பாபு கொலையை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக அந்த கட்சியைச் சேர்ந்த 500 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல பாபு கொலை தொடர்பாக 4 பேர் மீதும் பாரதிய ஜனதா தொண்டர் சமேஜ் கொலை தொடர்பாக 6 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா நேரடியாகவும் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதற்கிடையே அரசியல் கட்சி தொண்டர்கள் 2 பேர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டது, அதனால் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் கேரள கவர்னர் சதாசிவம் அறிக்கை கேட்டுள்ளார்.

    ஏற்கனவே 6 மாதத்திற்கு முன்பு இதேபோல அரசியல் கொலைகள் தொடர்ந்து நடைபெற்றபோது கேரள அரசிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #KeralaCM #PinarayiVijayan #Governor #Sathasivam
    ×