என் மலர்
நீங்கள் தேடியது "Masked gang"
- குடும்பத்தினர் மிகவும் மன வேதனையில் உள்ளதாக புகார்
- பொதுமக்கள் மனு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் தாலுகா புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி. இவர் பெங்களூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பதியின் தாயார் ஜானகி அம்மாள் (வயது 73).
இவர் புதுக்கோட்டை ராஜாஜி கவுண்டர் நகர் பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 14-ந் தேதி இரவு முகமூடி கொள்ளையர்கள் இவரது வீட்டில் புகுந்து மூதாட்டியின் காதை அறுத்து கம்மல் மற்றும் பணத்தை கொள்ளை யடித்து சென்றனர்.
இந்த நிலையில் திருப்பதி தனது ஊர் பொதுமக்களுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியதாவது;-
தனது தாயாரை தாக்கி கம்மல் மற்றும் பீரோவில் இருந்த ரொக்கம், கண்காணிப்பு கேமரா, ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுவரை குற்றவாளிகளை கண்டுபிடிக்காததால் எனது குடும்பத்தினர் மிகவும் மன வேதனையில் உள்ளனர் எனவே உடனடியாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.