என் மலர்
நீங்கள் தேடியது "Master Bali"
- வேலை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பியபோது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 41). சமையல் மாஸ்டர். இவரது மனைவி தேவி (35). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஆறுமுகம் நேற்று சமையல் வேலைக்கு சென்றார். வேலைகள் முடிந்து நள்ளிரவு வீடு திரும்பினார்.
பனைமுகை கூட்ரோடு ஊத்துக்காட்டு எல்லை யம்மன் கோவில் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஆறுமுகம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆறுமுகம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீஸ் புகார் அளிக்க ப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆறுமுகம் உடலை மீட்டு பிரேத பரிசோத னைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.