search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mata festival"

    • ஜெப வழிபாடு ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
    • அன்னையின் ஆசி வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள ரீச்சிங் காலனி பகுதியில் அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா நடைபெற்றது. விழாவினை லவ்டேல் புனித அந்தோணியார் ஆலய பங்குதந்தை பீட்டர் குத்துவிளக்கு ஏற்றி ஜெப வழிபாட்டுடன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து ரீச்சிங் காலனி பகுதியில் அமைந்துள்ள பியோ அன்பியம் மற்றும் ஊர் மக்கள் சார்பாக அன்பின் விருந்து வழங்கப்பட்டது. மாலை 6 மணி அளவில் தேர்பவனி ஆனது பிரார்த்தனையுடன் ரீச்சிங் காலனி பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அன்னையின் ஆசி வழங்கப்பட்டது. விழாவில் ரீச்சிங் காலனி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவிற்காக தூய ஆவியானவர் ஜெப குழுவின் ஜெப வழிபாடு ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.

    ×