search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "material"

    • தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம்.
    • காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் நில அளவை காட்சியரை, சரஸ்வதி மஹால் நூலக காட்சியரை, உலோக கற்சிற்ப காட்சியரை உள்பட 12 காட்சியரைகள் ஏற்படுத்தபட்டு உள்ளது.

    இது தவிர 7டி திரையரங்கம், பறவைகள் பூங்கா, குழந்தைகளை கவரும் ரயில், இசை நீரூற்று உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது.

    தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான கண்காட்சி மற்றும் பட்டறை கூடம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்த கூடத்தில் மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பல்வேறு பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்திட தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் உலக பாரம்பரிய தினமான நாளை (செவ்வாய்க்கிழமை) மாணவர்களுக்கான ஒரு நாள் கைவினைப் பொருள் பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது.

    தஞ்சையில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களில் ஒன்றான தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை குறித்த செய்முறை பயிற்சி முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் நடைபெறும்.

    இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் மாணவ- மாணவிகள் 9842455765 மற்றும் 9443267422 என்ற எண்களை தொடர்பு கொண்டு தங்கள் பெயர்களை பதிவு செய்து பங்கேற்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வதுதான் இந்த பயிற்சியை நோக்கமாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கதிரியக்க இரிடியம் மாயமான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Radioactive #Malaysia
    கோலாலம்பூர்:

    மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே ஷா ஆலம் பகுதியில் உள்ள தொழிற்சாலைக்காக செரம்பன் பகுதியில் இருந்து கதிரியக்க தன்மை வாய்ந்த இரிடியத்தை எடுத்துக்கொண்டு மினி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. கோலாலம்பூர் அருகே சென்றபோது இந்த பொருள் மாயமாகி இருப்பது தெரியவந்தது.

    23 கிலோ எடை கொண்ட இந்த இரிடியம், ரேடியோகிராபி தொழில்துறையில் பயன்படுத்தக்கூடியது ஆகும். கதிரியக்க தன்மை கொண்ட இந்த பொருள் பயங்கரவாதிகள் கையில் கிடைத்தால், தவறான வழிக்கு பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

    எனவே இரிடியம் மாயமான சம்பவம், மலேசிய அரசின் உயர்மட்ட அதிகாரிகள் வரை அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நாடு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை தொடங்கி உள்ளனர்.

    மிகவும் ஆபத்தான இரிடியம் மாயமான தகவலை அறிந்த ஐ.நா. அணுசக்தி நிறுவனம், ‘கதிரியக்க பொருள் மாயமாகி அல்லது திருடப்பட்டு பயங்கரவாதிகளின் கையில் சிக்கிவிட்டால், அணுகுண்டு அல்லது பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்துவிடும்’ என எச்சரிக்கை விடுத்துள்ளது.  #Radioactive #Malaysia  #tamilnews 
    ×